gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/ பெண்களிடம் ரகசியம் தங்காது

குருக்ஷேத்திர போர் முடிவடைந்ததும் தமது இறந்த சொந்த பந்தங்களிற்காக பாண்டவர்கள் நீர்த்தர்ப்பணம் செய்ய கங்கை நதிக்கரைக்கு வந்தனர்.

அப்பொழுது குந்தி அங்கு சென்று, கர்ணன் உங்கள் அண்ணன் அவனுக்கும் நீர்க் காணிக்கை செலுத்துங்கள் செலுத்துங்கள் என்றாள்.

காணாமல் போன கனவுகள்: கண்ணனுக்கு மட்டுமல்ல! கர்ணனுக்கு ராதையை பிடிக்கும் - வெளிச்சத்தின் பின்னே....

இதைக் கேட்ட யுதிஷ்டன் பெரும் துயருற்றான்.அபிமன்யு, திரௌபதி மகன்கள் ஆகியோரின் இறப்பும், பாஞ்சாலர்கள் மற்றும் குருக்களின் அழிவும்  ஏற்படுத்திய துயரத்தைவிடக் கர்ணன் இறந்ததற்காக நான் உணரும் இந்தத் துயரமானது நூறு மடங்கு பெரியதாகும்.

“இதைமுன்பே சொல்லியிருந்தால் குருக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியிருந்த இந்தப் பெரும்படுகொலைகள் நிகழ்ந்திருக்காது” என்றான் யுதிஷ்டிரன்.

பின்னர் யுதிஷ்டிரன், தன் அண்ணனுக்கான கர்ணனுக்கான நீர்க்கடனை அவர்களுடன் சேர்ந்து செய்தான்.




குந்தி யுதிஷ்டனிடம்

யுதிஷ்டிரா, நீ இத்தகு கவலையில் மூழ்குவது உனக்குத் தகாது. இந்த உன் கவலையைக் கொன்று, நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக. கர்ணனை, உன்னுடனான சகோதரத்துவத்தை ஏற்கும்படி செய்யக் கடந்த காலங்களில் நான் முயற்சி செய்தேன். தேவன் சூரியனும் அதையே செய்தார்.

தேவன் சூரியன், நலன் விரும்பும் ஒரு நண்பன், ஒருவனுக்கான நன்மையை விரும்பி சொல்லக்கூடியவை அனைத்தையும் கர்ணனிடம் கனவிலும், மீண்டும் ஒரு முறை என் முன்னிலையிலும் சொன்னார். சூரியனாலோ, என்னாலோ, துன்புறுத்தியோ , காரணங்களாலோ, அவனைத் தணிப்பதிலோ, உன்னோடு அவனை ஒன்றிணைக்கச் செய்வதிலோ வெற்றி பெற முடியவில்லை.அவன், காலத்தின் ஆளுகைக்கு உட்பட்டு, உன்னுடனான பகைமையை வெளிக்காட்டுவதில் உறுதியடைந்தான். உங்கள் அனைவருக்கும் தீங்கிழைப்பதிலேயே அவன் முனைந்து கொண்டிருந்ததால், நான் என் முயற்சியைக் கைவிட்டேன்” என்றாள்.

அதற்கு யுதிஷ்டன்

உன் ஆலோசனைகளை நீ மறைத்ததன் விளைவால், இந்தப் பெருந்துன்பம் என்னை அடைந்தது”. அம்மன்னன் யுதிஷ்டிரன்,எந்த பெண்ணும் ரகசியம் காப்பதில் வெல்ல மாட்டாள் ” என்று சொல்லி சபித்தான்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!