Cinema

பாடலாசிரியரை 12 முறை அலைக்கழித்த எம்.ஜி.ஆர்!. அட அந்த பாடல் செம ஹிட் !..

எம்.ஜி.ஆர் தனது திரை வாழ்வில் அவ்வளவு வெற்றிகளை பெற்றார் என்றால் அதற்கு பின்னால் அவ்வளவு உழைப்பும், திறமையும், சரியான திட்டமிடலும் இருக்கிறது. சினிமாவில் வெற்றி சும்மா கிடைத்துவிடாது. பல வருடங்கள் நாடகங்களில் நடித்து சினிமாவில் நுழைந்து 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னரே அவர் ஹீரோவாக மாறினார்.

MGR Birth Anniversary 2021: Why AIADMK Founder MGR Would Not Have Wanted His Party To Play Second Fiddle To BJP Today | OPINION

எம்.ஜி.ஆர் படங்களில் சண்டை காட்சிகள்தான் பிரதானம் என்றாலும் பாடல்களுக்கு முக்கிய இடம் உண்டு. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் எம்.ஜி.ஆரின் பாடல்களைத்தான் எப்போதும் முனுமுனுப்பார்கள். அந்த அளவுக்கு பல நல்ல கருத்துக்களை தனது பாடல்களில் பாடிவிட்டு போயிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி என பல பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.




 எம்.ஜி.ஆர்தன்னை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும், தன்னை புரமோட் செய்து கொள்வதற்காகவும் தனது படத்தில் வரும் பாடல் காட்சிகளைத்தான் அதிகம் பயன்படுத்தினார். ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்று பாடியே ஆட்சியை பிடித்தவர் அவர். அவருக்கு அந்த மாதிரி பல பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். பாடல்களில் தனக்கு திருப்தி வரும் வரை இசையமைப்பாளர்களையும், பாடலாசிரியர்களையும் பெண்டு கழட்டி விடுவார்.

அப்படி, ஒரு படத்தில் ஒரு பாடலை எழுதுவதற்காக ஒரு பாடலாசிரியரை 12 முறை அவர் அலைக்கழித்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். அடிமைப்பெண் படத்தில் அம்மாவை பற்றி ஒரு பாடலை எழுத ஆலங்குடி சோமு என்பவரை அழைத்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அவர் எழுதிய வரிகளில் அவருக்கு திருப்தி இல்லை. இளைஞர்களின் மனதில் இப்பாடல் பதிய வேண்டும் என சொன்னார் எம்.ஜி.ஆர்.

ஒருகட்டத்தில் ‘சரணம் கூட நன்றாக இருக்கிறது. பல்லவியை மாற்றி எழுதுங்கள்’ என சொன்னார். இப்படி 12 முறை சோமுவை திருப்பி அனுப்பினார். 13வது முறை பாடலை எழுத வந்த சோமு ‘இந்த முறையும் உங்களுக்கு என் பாடல் பிடிக்கவில்லை எனில் சினிமாவை விட்டே போய்விடுவேன்’ என்றார். சிரித்த எம்.ஜி.ஆர் அவர் எழுதி வரிகளை படித்து பார்த்தார்.

‘தாய் இல்லாமல் நானில்லை.. தானே எவரும் பிறப்பதில்லை’ என அவர் எழுதியிருந்த வரிகளை பார்த்த எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியில் அவரை கட்டித்தழுவி பாராட்டினார். படம் வெளியான பின் அவரை அழைத்து அவருக்கு ஒரு தங்க மோதிரத்தையும் பரிசளித்தார். மேலும் ‘நான் உங்களை பலமுறை அலைக்கழித்ததாக கோபப்பட்டீர்கள். இப்போது உங்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். இது உங்கள் திறமைக்கு கிடைத்த வெற்றி’ என பாராட்டினார் எம்.ஜி.ஆர்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!