Cinema Entertainment

தளபதி விஜய் உடனான சண்டைக்கு தலைவரே வைத்த முற்றுப்புள்ளி..!

 தமிழ் சினிமாவின் தளபதி ரஜினிகாந்த் அவர்களுக்கும் இளைய தளபதி விஜய் அவர்களுக்கும்  இடையே  நிகழ்ந்து வரும் பனிப்போர் அனைவரும் அறிந்ததே. சூப்பர் ஸ்டார் பட்டத்தில் தொடங்கி, காக்கா கழுகு என கதை விட்டு இப்போது சம்பள விஷயத்தில் வந்து நிற்கிறது இவர்களின் மோதல்.




வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் ஒருவர் மாற்றி ஒருவரின் ரசிகர்களுக்குள் புகைந்து வருவது நாடறிந்த ஒன்றுதான். தற்போது இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் ஆடியோ லான்ச்சில் தனது கருத்துக்களை பொதுவெளியில் முன்னெடுத்து வைத்தார்.

Rajini Vijay: லியோ லுக்கில் விஜய்... தோளோடு அணைத்துக்கொண்ட ரஜினி... பஞ்சாயத்து ஓவர்ப்பா! | Rajini Vijay: Rajini and Vijay's fan-made poster is trending now - Tamil Filmibeat

ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலிலும் மற்றும்  விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இதனை ஒட்டி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ரஜினிகாந்த், விஜய் பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்தார்.

திருவண்ணாமலை சூட்டிங் போது செந்தில் உடன் நடித்துக்  கொண்டிருந்தேன். அப்போது கவுண்டமணி, கால் பண்ணி யார் கூட ஷூட்டிங்ன்னு செந்தில் கிட்ட கேட்க ரஜினின்னு பதில் சொன்னாரு. அவரே நிறைய காமெடி பண்ணுவாரு! நீ எதுக்கு? என்று செந்திலை  மட்டுமல்லாமல் என்னையும் கலாய்த்தார்.  நான் சொன்ன காக்கா, கழுகு கதை வேற மாதிரி ப்ரொஜக்சன் ஆகிவிட்டது.




நான் விஜய்யை குறிப்பிடுவது போல் சித்தரித்து உள்ளனர். விஜய்! நான் பார்த்து வளர்ந்தவர். தர்மத்தின் தலைவன் பட சூட்டிங்கில் எஸ் ஏ சந்திரசேகர் வந்து விஜய்க்கு அட்வைஸ் பண்ண சொன்னார். நான் அவரிடம் நிறைய ஜாலியான விஷயங்களைப் பற்றி பேசி உள்ளேன் நல்ல படிப்பா அதுக்கப்புறம் நடிகனாகலாம். இன்று ஒரு நடிகனையும் தாண்டி கட்சி, நிர்வாகம், நாட்டுக்கு மக்களுக்கு என்று நல்லது செய்கிறார் விஜய்  பட்டை தீட்டிய வைரமாக மாறிவிட்டார் என்று விஜய்யை பலவாறு புகழ்ந்து தள்ளிவிட்டார்  தலைவர்.

இப்படி மக்களுக்காக வாழ்வதற்கு எல்லாம் ஒரு பெரிய தியாகம் வேண்டும் என்று தியாகி ரேஞ்சுக்கு தளபதியே உயர்த்தி விட்டார் தலைவர்.மேலும் எங்கள் இருவருக்கும் சண்டை என்று கூறுவது நிஜமாகவே ரொம்ப கஷ்டமாக இருக்குது. ஒரு அன்பான வேண்டுகோள்!  இருவரின் ரசிகர்களும் யாரையும் கம்பேர் பண்ண வேண்டாம். நிப்பாட்டுங்க! விஜய் அவருடைய  திறமையால  இந்த உயர்வான இடத்துக்கு வந்திருக்கிறார் இன்னும் பல செயல்கள் செய்ய வாழ்த்துக்கள் என்று தலைவனுக்கு உரிய இலக்கணத்தோடு சிறப்பு செய்திருந்தார் தலைவர்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!