Entertainment தோட்டக் கலை

சித்தரத்தை வளர்ப்பு முறை

அனைத்து நிலங்களிலும் சித்தரத்தை வளர்ப்பு செய்யலாம், இது ஒரு செடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இதன் தாயகம் தெற்கு ஆசியா. பின்னாளில் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குப் பரவியது. இந்த சித்தரத்தை இஞ்சி வகையை சேர்ந்த செடியாகும். வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மூலிகைகளில் சித்தரத்தை முக்கியமானதாகும், இதனை அலோபதி மருந்துகளாக தயாரித்து நமது நாட்டிலேயே விற்பனை செய்கின்றனர்.

சித்தரத்தை செடி வளர்ப்பது எப்படி, சித்தரத்தை வளரியல்பு, சித்தரத்தை எப்படி பயன்படுத்துவது மற்றும் சித்தரத்தை மருத்துவ குணங்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.




மண்ணின் தன்மை

சித்தரத்தை எல்லாவகை மண்ணிலும் வளரும் பண்பை பெற்றிருந்தாலும் நல்ல ஆரோக்கியத்துடன் செழித்து வளர சிறந்த மண்கலவையை அதற்கு அளிக்க வேண்டியுள்ளது. சித்தரத்தை நடவு செய்வதற்கு, 40 சதவிகிதம் செம்மண், 40 சதவிகிதம் மக்கிய தொழுஉரம், 20 சதவிகிதம் மணல் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து மண்கலவை தயார்செய்து கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் சித்தரத்தை வளர்ப்பு சிறக்கும்.

சித்தரத்தை நடவு

தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை நெகிழிப்பை அல்லது மண்தொட்டியில் போட்டு நிரப்பிக்கொள்ளவும். மாடித்தோட்டத்தில் நல்ல சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடமாக பார்த்து தேர்வு செய்து தொட்டியை அங்கு வைக்கவும், பின்பு அதில் பள்ளம் பறித்து சித்தரத்தை அதில் நடவு செய்யவும். ஒரு வருடம் வரை பலனை தரக்கூடியது இந்த சித்தரத்தை மூலிகை.




சித்தரத்தை சுமார் ஐந்து அடி உயரம் வளரக்கூடியதாகும். இதன் இலைகள் பசுமையாக நீண்டு வளரும் குணத்தைக்கொண்டிருக்கும். கொத்து கொத்ததாக பக்கக்கிளைகள் படர்ந்து வளரும். இதன் வேர் பகுதியில் கிழங்குகள் பரவிக்கொண்டே இருக்கும், இதனால் புதிய செடிகள் பக்க வாட்டில் வளர்ந்தபடியே இருக்கும்.

இதன் வேரில் விளைகின்ற கிழங்கில் மருத்துவ குணம் மிகுதியாக உள்ளது. இந்தக் கிழங்கு மிகவும் உறுதியாக இருக்கும், குறுமிளகின் வாசத்தை கொண்டிருக்கும், இதில் வரும் பழம் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் பக்கக் கிழங்குகள் மூலமாக சித்தரத்தை இன விருத்தி செய்யப்படுகின்றன.

சித்தரத்தை அறுவடை

நடவு செய்த நாளிலிருந்து சுமார் 200 நாட்களில் சித்தரத்தை அறுவடை செய்யலாம். கிழங்குக்கு சேதம் ஏதும் ஏற்படாமல் அறுவடை செய்திட வேண்டும். நெகிழிப்பையில் உள்ள மண் கடினமாக இருக்கும் பொழுது கிழங்கை வெளியே எடுக்க முயற்சித்தால் கிழங்கு காயம்பட வாய்ப்புள்ளது எனவே அந்த மண்ணை இலகுவாக்கி பிறகு கிழங்கை வெளியே எடுத்து விட்டு மீண்டும் செடி நடவு செய்யலாம் செடி மீண்டும் வளர்ந்து வந்துவிடும்.




சித்தரத்தை மருத்துவ பயன்கள்

  • உடல் வெப்பத்தை நீக்கும் மற்றும் பசியை தூண்டும்.

  • சித்தரத்தை பொடி செய்து 2-4 கிராம் எடுத்துக்கொண்டு, அதனுடன் தேன் கலந்து தினசரி இரண்டு வேளைகள் சாப்பிட்டுவந்தால் வறட்டு இரும்பல் மற்றும் நெஞ்சு சளி எல்லாம் சரியாகிவிடும்.

  • சித்தரத்தையை நன்கு தட்டி, 350 மிலி சுடு நீரில் 3 மணி நேரம் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி 30 மிலி – 40 மிலி தேன் சேர்த்து கலந்து சித்தரத்தை கஷாயம் செய்து குடித்துவந்தால் நுரையீரல் மற்றும் தொண்டை நோயெல்லாம் பூரண குணமாகும்.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!