Beauty Tips

40 வயதிலும் முகம் அப்படியே இயற்கையாகவே ஜொலிக்க இதை மட்டும் செய்யுங்கள்!

வயதானாலும் சரி எப்போதுமே இளமை தோற்றத்திலே இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்கும் உள்ளது. ஆனாலும் 40 வயதுக்கு பின்பு முகத்தில் ஏற்படும் சுருக்கம், கருத்திட்டு போன்றவை உங்கள் வயதை ஈஸியாக காட்டி கொடுத்து விடும். இதை சரிசெய்ய  முக பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினமும் 20 நிமிடம் சரும பராமரிப்புக்காக கட்டாயம் ஒதுக்க வேண்டும்.

உணவிலும் தனி அக்கறை காட்ட வேண்டும், யோகா, வாக்கிங் போன்ற சின்ன சின்ன உடற்பயிற்சிகளும் அவசியம். இவை அனைத்தையும் முறையாக பின்பற்றி வந்தால் 40 வயதிலும் உங்கள் முகம் இளமை தோற்றத்தில் ஜொலிக்கும். அனைவரும் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் லுக் மற்றவர்களை ஈர்க்கும். எனவே, இந்த பதிவில் முகத்தை 40 வயதிலும் இளமையாக வைத்திருக்க செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.




40 வயதில் என்ன நடக்கும்?

பொதுவாகவே பெண்கள் 40 வயதை டச் செய்யும் போது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். அதன் தாக்கம் முகத்திலும் தெரிய தொடங்கும். வயது அதிகரிக்கும் போது, தோலில் கொலாஜன் உற்பத்தி குறைகிறது. இதன் காரணமாக, முகச் சுருக்கங்கள் உருவாகத் தொடங்குகின்றன. அதே நேரம்  வயதுக்கு ஏற்ப முகத்தில் ஏற்படும் மாற்றங்களின் வேகத்தை கண்டிப்பாக குறைக்க முடியும்.  அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, போதுமான நீர், நல்ல தூக்கம், சரும பராமரிப்பு, உடற்பயிற்சி இவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். அதே சமயம் ஜங்க் ஃபுட்ஸ், புகைப்பிடிப்பது, மது அருந்துவது, கொழுப்பு உணவுகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.




என்ன சாப்பிட வேண்டும்?

தினமும் கிரீன் டீ அவசியம். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் தோல் வேகமாக வயதாவது தடுக்கப்படுகிறது.  மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களை தினமும் உணவில் சேர்த்து கொள்ளவும். மேலும், கேரட், சக்கர வள்ளிக்கிழங்கு, பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் தக்காளி போன்ற வைட்டமின் சி அதிகம் உள்ள காய்கறிகள் சருமத்திற்கு இயற்கையாகவே பல நன்மைகளை வழங்குகின்றன. இதையும் எடுத்து கொள்ள வேண்டும். உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

முறையான உடற்பயிற்சி

தினமும் 20-30 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது உடலில் ஆக்ஸிஜன் சுழற்சியை அதிகரிக்கும். இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது . சருமத்திற்கு ஒரு வித பொலிவை தருகிறது. முகத்தில் வியர்வை வழியும் போது கெட்ட கொழுப்புகள் கரைகின்றன.




யோகா

யோகா சருமத்திற்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது, இதனால் சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது முக பொலிவுக்கு யோகா பெரிதும் கைக்கொடுகிறது. தினமும் 20 நிமிடம் மூச்சு பயிற்சி, வாயு பயிற்சி, சூரிய நமஸ்காரம் என எதாவது ஒரு யோகாசனத்தை மறக்காமல் செய்யுங்கள்.

சரும பாரமரிப்பு

காலை மற்றும் இரவு சரும பாரமரிப்பு மிக மிக அவசியம். தினமும் மாய்ஸ்சரைசர், தினமும் சன் ஸ்கிரீன் வாரத்திற்கு ஒருமுறை ஸ்க்ரப், இரவு நேரத்தில் நைட் கிரீம், வைட்டமின் சி சீரம் போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த மறவாதீர்கள். இவை அனைத்தையும் முறையாக செய்து வந்தால் நிச்சயமாக முகத்தை இளமையாக வைத்திருக்கலாம்.

குறிப்பு: சருமத்தில் அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் அனுமதி கேட்ட பின்பு இந்த குறிப்புகளை  பின்பற்றவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!