Entertainment lifestyles News

மனிதனின் மரணத்தை கணிக்கும் A1 தொழில்நுட்பம் – இனி உலகமே மாறப் போகிறது

மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும், எளிதாக்கும் என்ற போர்வையில் வரும் செயற்கை நுண்ணறிவு தற்போது மனிதர்களால் செய்ய முடியாத பல விஷயங்களுக்குப் பயன்படுத்தத் துவங்கப்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆட்டம் இப்போது தான் துவங்கியுள்ளது, இது எந்த அளவுக்குச் செல்லும் என்பதின் ஒரு உதாரணம் தான் இந்தச் செய்தி.




சாட்ஜிபிடி, பார்ட் போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது டிக்கெட் புக்கிங் சேவையில் இந்து விண்வெளி ஆராய்ச்சி வரையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்றார் போல் சாட்ஜிபிடி, பார்ட் ஆகியவை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இருப்பதால் தினமும் காலை எழுந்த உடன் எத்தனை ஏஐ சேவைகள் அறிமுகமாகியுள்ளது கணக்கிட வேண்டியதாக உள்ளது.

இப்படிப் பேசிக்கேட்டே இருந்தா எப்படி யாரு பெருசுன்னு அடிச்சி காட்டு என்ற வடிவேலு காமெடி போல, டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வாழும் காலத்தைத் துல்லியமாக்கக் கணக்கிடும் செயற்கை தொழில்நுட்பத்தில் இயங்கும் AI death predictor-ஐ உருவாக்கி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இந்தத் தொழில்நுட்ப சேவை ஒரு மனிதனின் இறப்பை துல்லியமாக்கக் கணிக்கக் கூடிய வல்லமை கொண்டது. சாட்ஜிபிடி உதவியுடன் இயங்கும் இந்த AI death predictor தொழில்நுட்ப சேவை ஒருவரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எவ்வளவு வருடம் வாழ்வார், சுருக்கமாகச் சொல்லப்போனால் எப்போது இறப்பார் என்பதைக் கணிக்கும்.




டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் Using sequence of life-events to predict human lives என்ற தலைமையில் செய்த ஆய்வின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த AI death predictor சேவையை உருவாக்க நெட்வொர்க் மற்றும் காம்பிளெக்ஸ் சிஸ்டம் துறையின் பேராசிரியர்கள் மற்றும் இதர கம்பியூட்டர் பேராசிரியர்கள் life2vec என்ற அல்காரிதம்-ஐ உருவாக்கியுள்ளனர் என இந்த ஆய்வை செய்ய மூத்த எழுத்தாளர் Sune Lehmann தெரிவித்தார்.

life2vec அல்காரிதம் மூலம் இயங்கும் இந்த AI death predictor, ஒருவரின் வருமானம், செய்யும் வேலை, இருப்பிடம், உடல்நலம் குறித்த வரலாற்றுத் தரவுகள் ஆகிய தகவல்களைப் பெற்று வாழும் காலம் அல்லது இறக்கும் நேரத்தை 78 சதவீதம் துல்லியமாக்கக் கணித்துக் கூறுகிறதாம்.

இந்தத் தொழில்நுட்பத்தை வைத்து 2008 முதல் 2020 வரையில் பிறந்த 60 லட்சம் டென்மார்க் மக்களிடம் சோதனை செய்து பார்த்துள்ளது. இதில் சோதனை செய்ய வேண்டுமாயின் ஜனவரி 1, 2016 ஆம் ஆண்டுக்குப் பின்பு குறைந்தது 4 வருடமாவது வாழும் ஒருவரால் மட்டுமே சோதனை செய்ய முடியும்.

மரணத்தை வெல்வது தான் இன்று வரையில் புரியாத புதிராக இருக்கிறது, இந்த நிலையில் சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பை தான் AI death predictor வழங்குகிறது. இந்த AI தொழில்நுட்பத்தை நீங்க பயன்படுத்த விரும்புவீர்களா..?




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!