Cinema Entertainment

நடிகர் பிரபு மகள்- மார்க் ஆன்டனி டைரக்டர் : திடீர் திருமணம்.பின்னணி என்ன ?

பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஆகிய இருவருக்கும் திடீரென திருமணம் நடந்திருக்கிறது. இது குறித்து முன் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையில் அவசர அவசரமாக இந்த திருமண ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன.

திருமணமும் நடந்து முடிந்திருக்கின்றது. விஷயம் அறிந்த ரசிகர்கள் இணையவாசிகள் பலரும் இவர்களுடைய திருமணத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.




கடந்த சில ஆண்டுகளாக பல படங்கள் நடித்தும் ஒரு படமும் வெற்றி படமாக அமையவில்லையே என்ற விரக்தியில் இருந்தார் நடிகர் விஷால். இப்படி இருந்த நடிகர் விஷாலுக்கு மார்க் ஆண்டனி என்ற படத்தின் மூலம் ஒரு பெரிய கம் பேக் கொடுத்து இருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இந்லையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளும் ஐஸ்வர்யாவை திருமணம் முடித்து இருக்கிறார். இந்த திருமணம் எந்த ஒரு பிரம்மாண்ட ஏற்பாடும் இல்லாமல் எளிமையாகவே நடைபெற்று முடிந்திருக்கிறது.

நெருங்கிய பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மட்டுமே இந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது. திடீரென இந்த திருமணம் நடக்க என்ன காரணம்..? என்று விசாரித்த பொழுது நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது.

இருவருடைய திருமணத்திற்கு பலமுறை நாள் குறிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை ஒவ்வொன்றாக தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது திடீரென திருமணம் நடந்திருக்கின்றது.




இன்னும் இரண்டு தினங்களில் மார்கழி மாதம் பிறக்க இருக்கிறது. மார்கழியில் ஹிந்துக்கள் பலரும் திருமணம் செய்வதை தவிர்த்து விடுவார்கள். மார்கழி மாதம் தாண்டினால் திருமணம் மேலும் தாமதமாக வாய்ப்புக்கள் இருக்கிறது என ஜோதிடர்கள் கொடுத்த்த ஆலோசனையின் அடிப்படையில் திருமணத்தை முடித்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் அவசர அவசரமாக திருமணத்தை செய்திருக்கிறார்கள் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யா ஏற்கனவே காதலித்து வந்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தற்போது சிவாஜி குடும்பத்தில் ஒருவராக இணைந்து இருக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நகை மற்றும் சொகுசு பங்களா என கோடி கோடியாக வரதட்சணை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான ஐஸ்வர்யாவுக்கு 42 வயசு என்றும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 32 தற்போது 32 வயதாகிறது.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
3
+1
5
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!