Serial Stories கடல் காற்று

கடல் காற்று-35

35

” உன்னிடம் பேச வேண்டும்மா …? ” குளறலான குரலுடன் மயில்வாகன்ன் வந்து நின்ற போது அவர் அவளுக்கு பிடிக்காத மனிதர் என்ற போதும் ,அவரது வயதும் , இப்போதைய அவர் நிலைமையும்  சமுத்ராவால் மறுக்க முடியவில்லை .மௌனமாக தலையாட்டினாள் .

” நான் கொஞ்சம் கெட்டவன்தாம்மா .மனைவி எப்போதடா இறப்பாள் என காத்திருந்து அவளை கவனிக்க வந்த தாதியை திருமணம் முடித்தவன் . ஒரு நல்ல மனிதன் ….நல்ல என்ன …ஒரு மனிதன் செய்ய மாட்டான் இதை.அதனை செய்த ராட்ச்சன் நான் .ஆனால் என் மகன் அப்படியல்ல .அவன் புடம் போட்ட தங்கம் . “

சமுத்ரா அவரை கேலியாக நோக்க , தலையசைத்தபடி ” ஒரு சாதாரண ஆணுக்குரிய சில பலவீனங்கள் அவனுக்கு உண்டு .ஒத்துக் கொள்கிறேன் .ஆனால் என்னைப் போலில்லை .என் மகன் எதிலும் கட்டுப்பாடானவன் .தன்னைக் கட் டுப்படுத்திக் கொள்ள தெரிந்தவன் .அவனை மகனாக பெற்றதற்கு நான் மிகவும் பெருமையடைகிறேன் .என் பரம்பரையில் என்னைப்பற்றியல்ல, என மகனின் பெருமை பேசப்பட வேண்டுமென நினைக்கிறேன் .”

இவர் என்னதான் சொல்ல வருகிறார் …? சமுத்ராவிற்கு குழப்பமாக இருந்த்து .” என் மகன் குழந்தை , குட் டியோடு ஒரு முழுமையான வாழ்வு வாழ வேண்டுமென்பது எனது நோக்கமாக இருந்த்து ்ஆனால் ..அவன் …திருமணமே வேண்டாமென்பதில் உறுதியாக இருந்தான்” நிறுத்தினார் .

” அதுதானே அப்படி ஒரு கட்டுக்குள் அடங்குகிறவரா …உங்கள் மகன் …? ” கிண்டல் தெறித்தது சமுத்ராவின் குரலில் .

” சாவித்திரியையே கூட குழந்தையோடு இங்கே அழைத்து வந்துவிடலாமென்று கூட சொல்லி பார்த்தேன் .அன்று ஒரு முறை முறைத்தான் பார் .அத்தோடு இந்த பேச்சினை நிறுத்தி விட்டேன் .”

அடக்கடவுளே இப்படி வேறு செய்வார்களா …? சமுத்ராவின் இதயம் ஒரு முறை நின்று துடித்தது .

” பிறகு திடீரென்று ஒருநாள் உன்னை திருமணம் செய்து அழைத்து வந்தான் .முதலில் உன்னை வீட்டினுள் அனுமதித்த போதே எனக்கு சந்தேகம்தான் .காரணமில்லாமல் யோகன் எதுவும் செய்ய மாட்டானே என்று …” தயங்கி நிறுத்த

சமுத்ராவிற்கு புரிந்த்து. இவர் தன்னையும் சாவித்திரியோடு ஒத்து நினைத்திருக்கறார் .ஒரு நிமிடம் உடல் கூச முகம் சுளித்தாள் .

” ஆனால் உன்னை பார்த்தால் அப்படி பெண்ணாக தெரியவில்லை .மேலும் உங்களுக்குள் ஒத்து போவது போன்றும் தெரியவில்லை .குழப்பத்தில் இருந்த போதுதான் உன்னை மணமுடித்து அழைத்து வந்தான் .பெற்றவன் , உடன் பிறந்தவள் இல்லாத திருமணமா …என்ற குறையிருந்த போதும் உங்கள் திருமணம் எனக்கு மிக சந்தோசமே .ஆனால் இது உனக்கு விருப்பமில்லாத திருமணமாக தோன்ற ,அதனை உறுதி படுத்துவது போல் நீயும் கீழுள்ள அறையிலேயே தங்க முடிவெடுத்தாய் .இப்போது நான் தலையிட்டு உன்னை வீட்டை விட்டு வெளியேற்ற முனைந்தேன் .
யோகன் உன்னை மாடிக்கு அழைத்துக்கொண்டான் “

இப்போது இவர் சொல்ல வருவது கொஞ்சம் புரிவது போலிருந்த்து சமுத்ராவிற்கு .

” இப்போது என் பரம்பரைக்கு வாரிசு வரப்போகிறது .இந்த நேரம் நீ ஏன்மா இப்படி செய்கிறாய் …? “

” ஏன் அங்கே தோப்பு விட்டில் உங்கள் பரம்பரை வாரிசு வளரவில்லை …? ” நக்கலாக கேட்டாள் .

” அதை என மகன்தான் சொல்ல வேண்டும் …”

சையென்று வந்த்து சமுத்ராவிற்கு .மகன் செய்யும் போக்கிரித்தனத்திற்கு குடை பிடிக்கும் ஒரு அப்பா .அது சரி …இவரும் ஒரு ஆண் பிள்ளைதானே …?இவர் செய்த்தும் அதே போக்கிரித்தனம் தானே ….இவர் ரத்தம்தானே அவன் உடம்பிலும் ஓடுகிறது .கசப்புடன் எண்ணிய போதே….

” இப்போது வந்திருப்பது மட்டும் உங்கள் பரம்பரையா …? ” புவனா …ஆத்திரத்துடன் நின்றாள் .ஒரு மாதிரி வெறியுடன் என்று கூட சொல்லலாம் .

” இந்த குழந்தைக்கு இப்படி தவிக்கிறீர்களே …? என் வயிற்றில் வந்த்தை ஒவ்வொன்றாய் அழித்தீர்களே …அப்போது அதெல்லாம் இந்த குடும்ப வாரிசு கிடையாதா ..?” ஆத்திரத்துடன் தன் வயிற்றைக் குத்திக் கொண்டாள் .

” ஏய் …வாயை மூடுடி ? ” கத்தினார் மயில்வாகன்ன் .




” எத்தனை நாட்கள் …? ம் …எத்தனை நாட்கள் வாயை மூட வேண்டும் …? புவனா கத்த கையில் கிடைத்த எதையோ எடுத்து அவர் எறிய அது புவனாவின் தலையை தாக்கி ரத்தம் வரச்செய்த்து .

பற்றி புவனாவை தாங்கிய சமுத்ரா மயில்வாகன்னை முறைத்தபடி புவனாவை தாங்கியபடி உள்ளே அழைத்து சென்றாள் .அவள் காயத்திற்கு கட்டிட்டு படுக்க வைத்தாள் .ஆற்ற முடியா துயரத்தில் குலுங்கிய புவனாவின் உடல் சிறிது நேரத்தில் அயரவே , மெல்ல உறங்க துவங்கினாள் அவள் .

பெருமூச்ணோடு அவளை பார்த்து விட்டு வெளியே வந்த சமுத்ராவின் முன் வந்து நின்றாள் செல்வமணி .

இங்கே அவள் சித்தியும் , அப்பாவும் பெரிய போர்க்களமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .இவள் என்னவென்று எட்டிக் கூட பார்க்காமல் உள்ளேயே இருந்தாளே …வெறுப்புடன் அவளை தாண்டி போக முயல , மீண்டும் அவள் வழி மறித்்த செல்வமணி அவளை நோக்கி கைகளை கூப்பினாள் “,சமுத்ரா ப்ளீஸ் ” என்றாள் .




What’s your Reaction?
+1
16
+1
11
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!