தோட்டக் கலை

உங்கள் தோட்டத்தில் மாவு பூச்சிகளை அழிப்பது எப்படி?வழிமுறை-1

மாவு பூச்சி  உலகின் அனைத்து பகுதிகளிலும் மாவு பூச்சிகள் உள்ளது என்றாலும், வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக வசிக்கின்றது. ஆண் பூச்சிகள் இறக்கைகள் உடையதாய் இருக்கும். பெண் பூச்சிகள் நகர முடியாதவை. பெண் பூச்சிகள் தான் செடியின் சாறை உறிஞ்சி விடுகிறது. மாவு பூச்சிகள் அதிகம் தாக்கப்பட்ட செடிகள் நாளடைவில் இறந்துவிடுகின்றது.

மாவு பூச்சிகள் ஆர்டிக் அண்டார்டிகாவில் அதிகம் காணப்படுவதில்லை. தாவரங்களின் பிளவுகள், வேர்கள் பழங்களின் அடிப்பகுதியிலிருந்து சாறுகளை எடுத்துக்கொள்கிறது. தாவரங்களிலிருந்து சாறை எடுக்கும்போது தன்னை பாதுகாத்துக்கொள்ள மாவினை போல திரவத்தை சுரக்கிறது. அந்த திரவத்தினை தன்னுடைய கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறது. மாவு பூச்சி தாக்கிய தண்டுகள், ஒருவித மாவு போல காட்சியளிக்கும். மாவுபூச்சிகளிலிருந்து  வெளியிடப்படும் கழிவுகளை உண்பதற்காக எறும்புகள் செடிக்கு படை எடுத்து வருகிறது. எறும்புகள் தான் மாவுப்பூச்சியை ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்கு கொண்டு செல்கிறது.




sudagarkrishnanchannels

மாடித்தோட்டத்தில்   மாவுப்பூச்சியை  கட்டுப்படுத்த வழிகள்:

மாவு பூச்சிகள் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அது தோட்டம் முழுவதும் பரவி எல்லா செடிகளையும் பாதித்துவிடும். மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு சுலபமான வழி தண்ணீர்தான். தண்ணீர் மாவுபூச்சிகளுக்கு ஆகாதது. மாவு பூச்சிகளை கட்டுபடுத்த உள்ள வழிகளில் சுலபமான எளிமையான சிலவற்றை  இங்கு காணலாம்.




வழிமுறை-1

  •  பிரிட்ஜில் வைத்து குளிரூட்டப்பட்ட நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

  • மாவுபூச்சிகள் இருக்கும் இலைகளின் மீது இந்த தண்ணீரை வேகமாக சிறந்த ஸ்பிரேயரை கொண்டு, பீய்ச்சி அடியுங்கள்.

  • மாவுப்பூச்சிகள் எல்லாமே கீழே கொட்டி விடும் 98% சதவீகிதம் மாவுப்பூச்சி இதில் இருந்து கீழே கொட்டி விடும். திரும்பவும்  பூச்சிகள் செடிக்கு வராது. காலை அல்லது மாலை நேரத்தில் செய்ய வேண்டும்.

  • பின்னர் வேப்பெண்ணெய் 1-லிட்டர் தண்ணீரில் 2-மில்லி லிட்டர் வேப்பெண்ணெய்  0.5 மில்லி லிட்டர்  சோப்புக் கரைசலுடன் கலந்து செடியின் மீது தொடர்ந்து ஸ்பிரே செய்து வாருங்கள்.

  • இதனை நீங்கள் தொடர்ந்து பின்பற்றினாலே போதும். நாளடைவில் உங்கள் தோட்டத்தில் மாவு பூச்சிகள் தொல்லையே இருக்காது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!