தோட்டக் கலை

உங்கள் தோட்டத்தில் மாவு பூச்சிகளை அழிப்பது எப்படி?வழிமுறை-2

மாடித்தோட்டத்தில்   மாவுப்பூச்சியை  கட்டுப்படுத்த வழிகள்:

மாவு பூச்சிகள் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அது தோட்டம் முழுவதும் பரவி எல்லா செடிகளையும் பாதித்துவிடும். மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு சுலபமான வழி தண்ணீர்தான். தண்ணீர் மாவுபூச்சிகளுக்கு ஆகாதது. மாவு பூச்சிகளை கட்டுபடுத்த உள்ள வழிகளில் சுலபமான எளிமையான சிலவற்றை  இங்கு காணலாம்.வழிமுறை -1 நேற்று பதிவில் பார்த்தோம். இன்று 2 ஆம் வழிமுறையை இந்த பதிவில் பார்க்கலாம்.

 

வழிமுறை-2

மைதா மாவு கரைசல்.

  • வீட்டின் சமையலறையில் கிடைக்கும்  எளிமையான பொருள்.

  • சுலபமான செலவில்லாத இயற்கை வழியாகும்- மாவு பூச்சிகளை விரட்ட. நல்ல வெப்பமான மதிய நேரத்தில், மாவு கரைசலை  செடிகளின் மீது பயன்படுத்த (ஸ்பிரே செய்ய) வேண்டும்.




  • மைதாமாவு 50-கிராம் 1-லிட்டர் தண்ணீரில் கலந்து, 2-மணிநேரம் ஊற விடுங்கள். பின்னர் அதனை வடிகட்டி,  ஸ்பிரேயரில் எடுத்து, ஸ்பிரே செய்ய வேண்டும்.

  • மைதாமாவு கரைசல் மாவுப்பூச்சிகள் மீது பட்டு காய்ந்து விடுகிறது. மாவு பூச்சிக்கு பாதுகாப்பாக உள்ள/ கேடயமாக உள்ள அதனுடைய மேலுறை பாதிக்கப்படுகிறது. எனவே மாவுப்பூச்சிகள் இறந்து  விடுகிறது.

  • பின்னர் தண்ணீரை வேகமாக மாவு பூச்சிகளின் மீது பீச்சி அடிக்கும் போது மாவு பூச்சிகள் எல்லாம் கீழே உதிர்ந்துவிடும்.

  • இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!