Serial Stories கடல் காற்று

கடல் காற்று-9

 ( 9. )

இவன் இவ்வளவு நேரம் அண்ணனுடன் பேசியதை ஒட்டுக் கேட்டிருக்கிறான் .ஆரம்ப பயம் மறைந்து வெறுப்பு வந்த்து .

” எந்த சாயா ? எனக்கு சாயாவென்று யாரையும் தெரியாது .” அலட்சியமாக தலையை சிலுப்பினாள்.

” இன்று யார் யாரை பார்த்தாய் ? என்ன கூறினார்கள் ?” அடுத்த கேள்வி.

” எனது பத்திரிக்கை சம்பந்தமான சந்திப்பு சார் .அதனை எங்கள் ஆசிரியர் ரங்கநாயகி மேடத்திற்கு முறைப்படுத்தி அனுப்பிவிடுவேன் .பயப்படவேண்டாம் சார் .எனக்கு இதிலெல்லாம் நல்ல அனுபவம் உண்டு .மிக நன்றாகவே வடிவமைப்பேன் “

என் வேலை சம்பந்தப்பட்டது உனக்கு ஏன் கூற வேண்டுமென சொல்லாமல் சொல்லிவிட்டு ,அவனை விட்டு விலகி நடந்தாள் .

” நாளை சென்னை பஸ்ஸேற போகிறாயா ?” அதிகாலை ஆறு  மணிக்கு கூட ஒரு பஸ் இருக்கிறது .”

டக்கென நின்று அவனை திரும்பி வெறித்தாள் .எப்படிப்பட்ட மட்டமான ப்ளாக்மெய்ல் .

” இன்றே உன் பத்திரிக்கை வேலையெல்லாம் முடிந்து விட்டது போலவே …” நிதானமாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான் .

முன்பொரு நாள் ஹோட்டலில் வைத்து அந்த கால்கேர்ள்ளுடன் பார்த்த யோகேஷ்வரனை நினைவுக் கு கொண்டு வந்தான் .இவன் வீட்டில் தங்கி இவனது உதவியோடு தன் வேலையை பார்த்தது எவ்வளவு பெரிய தப்பு ?

அவமானத்தில் கண் கலங்க ஆரம்பித்தது சமுத்ராவிற்கு .ஆனால் இவன் முன்னால் அழுவதா ? அவன் நின்ற தோரணை கூட அதனையே எதிர்பார்த்திருப்பதாக தோன்றியது .அவளது அழுகையை , வேதனையை , கெஞ்சலை ….

கண்களை அகல விரித்து கண்ணீரை உள்ளிழுத்தவள ” ஆமாம் நாளை காலை நான் கிளம்பி விடுவேன் ” அறிவித்து விட்டு ,அறையினுள் சென்று தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு வெளியே தோட்டத்தில் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள் .

இன்றைய தனது பேட்டியை படபடவென டைப் பண்ண தொடங்கினாள் .

எதிர்பார்த்து வந்த்து போல் இந்த மீனவ பெண்களின் வாழ்க்கை இல்லை.அவள் எண்ணியது போல் இந்த மீனவ பெண்கள் தங்கள்  வாழ்வை கட்டுமரங்களுக்கிடையே கட்டு , செட்டாக வாழவில்லை .

நவநாகரீக விசைப்படகுகளுக்கு தங்கள் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு , தலைக்கு மேல் ஏறி விட்ட கடனை அடைக்கும் வழியறியாது, குடியின் கைகளுக்கு போய்விட்ட கணவனை மீட்கும் தடமறியாது தவித்தபடி டிவி சீரியல்களில் மூழ்கி கிடக்கின்றனர் .

தோண்ட தோண்ட கொடுத்த கடல் மாதாவின் மடி வற்றிவிட்டது .அள்ளியெடுக்க மீன்களில்லை ஆண்களுக்கு .பெண்களுக்கோ சிறுவாட்டு பணம் ் சேர்க்க கூட கருவாட்டுக்கும் பஞ்சம் .




முன்பு கணவனின் தொழிலுக்காக வலைபின்னியவர்கள் வாழ்வு இன்று துயரங்களின் பிடியில் பின்னி பிணைந்துள்ளது .கருவாடுகளுக்காக வெயிலில் காய்ந்தவரகள் இன்று அடுத்த வேளை சோற்றுக்கே வழியின்றி காய்ந்து கொண்டிருக்கின்றன ர்.

இதற்கு காரணம் அவர்கள் உழைப்பை தாங்கள் திருடி தின்று கொண்டிருக்கும் சில முதலாளிகளின் பேராசையே .ஆண்களை போதைக்கு அடிமையாக்கி , பெண்களின் உழைப்பை மறக்கடித்து டிவிக்கு அடிமையாக்கி அடுத்த தலைமுறையான குழந்தைகளின் படிப்பை பாழாக்கி ….அவர்களின் வாழ்வை எரிய வைத்து ,அந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர் சில பண முதலைகள் .

அவர்களை நம் அரசாங்கம் இனம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .அந்த பணக்கார முதலைகளின் கைகளில் இருக்கும் இந்த ஏழைகளின் நிலங்களையும் , விசைப்படகுகளையும் மீட்டு அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் .

மீண்டும் ஒரு ஒளிமயமான பழைய வாழ்வினை அந்த மீனவ குடும்பங்களுக்கு அரசாங்கம் அளிக்க வேண்டும் .

இன்றைய பேட்டியின் சாராம்சத்தை சுவைபட கட்டுரையாக்கி பத்திரிக்கை ஆசிரியர் ரங்கநாயகிக்கு மெயில் பண்ணினாள் .அவளுக்கு யோகேஷ்வரன் மேலிருந்த கோபம் முழுவதும் அந்த கட்டுரையில் தெரிந்த்து .

நாளை சென்னை சென்றதும் இவனை போல் முதலாளிகளின் பிடியிலிருந்து இந்த ஏழை மக்களை மீட்க ஏதாவது வழி செய்ய வேண்டும் என எண்ணிக்கொண்டாள் .

இனி போய் நாளை கிளம்புவதறகான ஏற்பாடுகளை செய்ய வேண்டியதுதான் என லேப்டாப்பை ஷட்டவுன் பண்ண முனைந்த போது அருகில் யாரோ அமர்வது போலிருக்க திரும்புவதற்குள் அவள் மடியிலிருந்த லேப்டாப் பறிக்கப்பட்டது .

யோகேஷ்வரன் தான் .அலட்சிய பாவனையுடன் அவள் கை லேப்டாப்பை பிடுங்கி தன் மடியில் வைத்தபடி அவளது கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தான் .

தீச்சுட்டது போல் அவனருகிலிருந்து எழுந்தவள் , இவன் என்ன மனிதன் ? எப்போதுமே இப்படி அநாகரிகமாகத்தான் நடந்து கொள்வானா ? சை …என நொந்தாள் .

சமுத்ராவின் போன ஒலித்தது .அத்தை செண்பகம் அழைத்தாள் .ஏறகெனவே இரண்டு முறை அழைத்து விட்டாள் .கட்டுரை தயாரத்து கொண்டிருந்த்தால் , சமுத்ரா அவள் அழைப்பை கட் பண்ணி பண்ணி விட்டிருந்தாள் .இப்போதும் கட் பண்ணினாள் என்றாள் லாவண்யாவில்  ஆரம்பித்து தனசேகரனில் நிறுத்தி ஏதேதோ புலம்ப ஆரம்பித்து விடுவாள் .

அதற்கு இரண்டு வார்த்தை பேசி விடுவது பெட்டர்.யோகேஷ்வரனை முறைத்தபடி போனைஆன் செய்து காதில் வைத்தாள் .சற்று தள்ளி போய் நின்று கொண்டாள் .

” சம்மு உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே ? ,”

” இல்லை அத்தை. ஏன் என்ன விசயம் ? ,”

” இல்லம்மா போன் போட போட எடுக்கவில்லையே .அதனால் பயந்துட்டேன்”

” அது …பத்திரிக்கைக்காக கட்டுரை ரெடி பண்ணிக் கொண்டிருந்தேன் அத்தை “

” ஓ..்சரிம்மா ..அப்புறம் நம்ம லாவண்யா பற்றி ஏதாவது ..” தயக்கமாக இழுத்தாள் .

” இது வரை ஒன்றும் தெரியவில்லை அத்தை .” சொல்லும் போதே ஐயோ நான் லாவண்யாவை எப்படி மறந்தேன் .அவளுக்காகத்தானே இங்கே வர முடிவே செய்தேன் …மனதிற்குள் குழம்பினாள் .

” சம்மு என்னை தப்பா எடுத்துக்காதம்மா .பெற்ற பாசம் என்னை இப்படியெல்லாம் பேச வைக்குது .உனக்கு கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் எனக்காக அதை பொறுத்துக்கௌம்மா ” ஒரு தாயின் தவிப்பு செண்பகத்தின் குரலில் .

” கண்டிப்பாக அத்தை ” தன்னிடம் இல்லாத உறுதியை குரலில் காட்ட முனைந்தபடி போனை அணைத்தாள் .

மிக ஆர்வமாக தனது கட்டுரையை படித்து கொண்டிருந்த யோகேஷ்வரனை எரிச!சலுடன் பார்த்தாள் .லேப்டாபை பிடுங்குவதற்கு அருகில் சென் றபோது தானாகவே அதனை கீழே வைத்தவன் மெலிதாக கைகளை தட்டி ” பிரம்மாதம் சமுத்ரா ” என்றான் .

அவன் குரலில் உண்மையான பாராட்டு இருக்கவே புரியாமல் அவனை பார்த்தாள் .அவளது இந்த கட்டுரையின் நோக்கமே அவனை தாக்குவதுதான் .அதனை தெளிவாக வரிக்கு வரி செய்திருந்தாள் .எதற்கு இவன் என்னை பாராட்டுகிறான் ?

” ரொம்ப அழகாக இந்த மக்களின் அவல நிலையை சொல்லியிருக்கிறாய் .இதனை இன்னும் தெளிவாக கூற வேண்டும் .நாளை இன்னும் சிலரை நீ சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் .அது இன்னும் உனது கட்டுரைக்கு உதவியாக அமையும் “

இவன்தானே கொஞ்ச நேரம் முன்பு என் வீட்டை விட்டு வெளியேறு என்று சொல்லாமல் சொன்னான் .இப்பொழுது இப்படி பேசுகிறானே .இவனை எந்த அளவு நம்புவது ? யோசித்தாள் .

அவளது போன் மீண்டும் ஒலித்தது .ரங்கநாயகி மேடம் .அவளது கட்டுரையை படித்திருப்பார் .அது சம்பந்தமாக பேச அழைப்பாராயிருக்கும் .

நீ கொஞ்சம் அந்த பக்கம் எழுந்து போனால் நான்  சுதந்திரமாக பேசுவேன் என்பது போல் அவனை பார்த்தாள் .

” பேசு ..பேசு …என்றுவிட்டு அழுத்தமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.

நாகரீகத்திற்கும் இவனுக்கும் வெகுதூரம் போல .வெறுப்புடன் அவனை பார்க்க கண்டிப்பாக எனக்கும் நாகரீகத்திற்கும் சம்பந்தமில்லை என அவளுக்கு பார்வையாலேயே உணர்த்தியபடி தோரணையாக அமர்ந்திருந்தான் .

செய்கிற ஆகாத வேலைக்கு என்ன மகாராஜா தோரணை வேண்டிக் கிடக்கு ,மனதினுள் அவனை பழித்தபடி போனை எடுத்துக் கொண்டு அவள்தான் நகர வேண்டியிருந்த்து .

ரங்கநாயகி அவளது கட்டுரையை வெகுவாக பாராட்டினார் .




” சமுத்ரா ரொம்ப அழகாக அந்த மீனவர்களின் வாழ்க்கையை சொல்லியிருக்கிறாய் .முதலில் இதனை சுருக்கமாக பன்னிரெண்டு வாரங்களில் முடிக்க வேண்டுமென நினைத்திருந்தேன் .ஆனால் இதில் நிறைய விசயங்கள இருக்கும் போல .அதனால் இதனை இருபத்தி ஐந்து  வாரம் வரை தொடரலாம் என நினைக்கிறேன் ” என்றார் .

இருபத்தி ஐந்து வாரமா ? அது வரை நான் இங்கே தங்க வேண்டுமா ? பதட்டத்தோடு ” மேடம் அவ்வளவு நாட்களுக்கு எழதுமளவிற்கு இங்கே விசயம் இல்லை ” என்றாள் .

” இல்லைம்மா …நிறைய விசயங்கள் இருக்கிறது .நீ இன்னும் விசாரிக்க வேண்டும் ்நானும் உனக்கு சில தகவல்கள் மெயில் பண்ணுகிறேன் .”

” மேடம் இங்கே தங குமிடமெல்லாம் அவ்வளவு வசதியாக இல்லை மேடம் “

” என்னம்மா நம்மளை மாதிரி பத்திரிக்கை காரங்களுக்கு இதெல்லாம் பெரிய விசயமா ? நீ விபரமான பொண்ணு நான் உனக்கு சொல்ல தேவையில்லை .கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோம்மா …அப்புறம் அந்த முதலாளிகளை பற்றி இன்னும் நிறைய விசாரித்து எழுது .அங்கே அவர்களுக்குள்ளேயே ஏதோ கோஷ்டி தகராறு இருக்கும் போல..அதையும் விசாரி …இதுபோல் திடீரென அவர்கள் தொழில் நொடிக்க காரணங்களை அலசு  …..”

வரிசையாக அவர் சொல்லிக் கொண்டே போக , வேறு வழியின்றி அவருக்கு ‘ உம் ‘ கொட்டிக் கொண்டிருந்தாள் .கடைசியாக அவளது சம்மத்த்தை வாங்கிய பின்பே ரங்கநாயகி போனை வைத்தார் .

என்ன செய்யலாமென்ற யோசனையுடன் திரும்பியவள் திடுக்கிட்டாள் .கைகளை கட்டியபடி அவள் பின்புறம் நின்று கொண்டிருந்தான் யோகேஷ்வரன்.

” பயப்படாதே உனக்கு தேவையான விபரங்கள் கிடைக்க நான் உதவுகிறேன் ” என்றான் .

திரும்பவும் ஒட்டு கேட்டிருக்கிறான் .இவனை ….பற்களை கடித்தவள் …நிறுத்தி முகத்தை சாதாரணமாக்கி  கொண்டாள் .

” பாருங்கள் சார் எனக்கு இங்கே உங்கள் ஊரில் நிறைய வேலை இருக்கும் போல …ஆனால் இங்கே உங்கள் வீட்டில் எனக்கு போதிய பாதுகாப்பு கிடைக்குமென  தோன்றவில்லை .அதனால் நான் வெளயே தங்கிக்கொண்டு ….”

அவள் வார்த்தைகளை முடிக்கவில்லை .அதற்குள் ” என்ன சொன்னாய் ?” கண்கள் சிவக்க குரலில் கடுமை ஏற்றினான் .

உருண்்ட  அவ்விழிகளால் அவள் வயிற்றினுள் பயப்பந்து உருண்டது .




What’s your Reaction?
+1
13
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!