Serial Stories கடல் காற்று

கடல் காற்று-4

( 4  )

தகவல் சரிதானே  ? , இல்லை எதையாவது விட்டுவிட்டேனா ?” நேருக்கு நேர் நின்று வினவினான் .அவசரமாக அவன் கண்களிலிருந்து தன்னதை மீட்டுக் கொண்டாள் .இவன் கண்கள் என் அடிமனது வரை ஊடுறுவ முயல்கிறதே .

” என்ன ? அதற்கு இங்கே நம் வீட்டில் தங்க வைக்க வேண்டிய அவசியம் என்ன ? எரிச்சல் இருந்த்து அந்த அம்மாளின் குரலில் .

” நான் தங்க சொல்லியிருக்கிறேனில்லையா ? ” உஷ்ணம் இவன் குரலில் .பார்வை இன்னமும் இவள் முகத்தில்தான் .

சட்டென வாயை மூடிக்கொண்டு அமர்த்தப்பட்ட மேளமாய் முணங்கியபடி உள்ளே சென்றாள் அந்த அம்மாள் .

அட …காட்டருவியாய் பொங்கியவள் தண்ணீர் தெளித்த பாலாய் விநாடியில் அடங்கி விட்டாளே.அங்கே அந்த எளியோர்களை கண்களை உருட்டியபடி அதட்டி ஒடுக்கிய போது இந்த அம்மாவை இப்படி அடக்க வேண்டுமெனதான் அவளுக்கு தோன்றியது.

அது இப்போது கண்ணெதிரே நடக்கும் போது ஏதோ இனம் புரியா திருப்தி அவளுக்குள் .

” என்னம்மா வேறு என்னென்ன விளக்கங்கள் உனக்கு தேவைப்பட கூடும் ? ” என்ற அவனது சீண்டல் குரலில் திரும்பி திணறினாள் .

இவன் ..்என்னை ஞாபகம் வைத்திருக்கிறான் போலவே ..

,”ஒரு முறை ஒரு நிமுடம் மட்டுமே சந்தித்தவர்களை கூட நான் அவ்வளவு சீக்கிரம் மறப்பதில்லை “

தன் மன கேள்விக்கு அவன் பதிலளிக்க …வியந்த போதே அவனது ஒருமை உறைக்க …

” பெண்களை பொதுவாகவே மரியாதையின்றியே அழைப்பீர்களோ ? ” அவன் சிற்றன்னைக்காக சொல்வது போல் தன்னையும் அதில் சேர்த்தாள் .

” என்ன வயதிருக்கும் உனக்கு ? ” தாடையை தடவியபடி அவளை வருடிய அவன் பார்வையில் எரிச்சலுற்று தலையை திருப்பி கொண்டாள் .

” அநேகமாக என்னை விட ஒரு ஐந்து ஆண்டாவது இளையவளாக இருக்க மாட்டாய் ? மேலும் நமக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று வேறு இருக்கையில் இந்த பன்மைக்கு  அவசியமென்ன ?

” ஒப்பந்தமா ? …என்ன …ஒப்பந்தம் ? ” திணறினாள் .

” அப்படி ஒன்று இல்லையா என்ன ? ” ஆச்சர்யம் போல் காட்டி புருவம் உயர்த்தினான் .

இன்னும் சிறிது நேரம் இவனிடம் பேசினால் , இவன் தன் வாயாலேயே லாவண்யாவின் பெயரை கூற வைத்து விடுவான் போலவே.

” இந்த அறையினுள் சன்னல் கொக்கி சிக்கிக் கொண்டு வர மறுக்கிறது ்..” அவசரமாக எதையோ சொல்லியபடி அறையினுள் சென்றாள் சமுத்ரா.

அத்தோடு அந்த கொக்கிகளை மீண்டும் நீக்க முயன்றாள் .

” நான் வேண்டுமானால் உதவட்டுமா ? ” மிக அருகே அவன் குரல் கேட்க கண்களை திருதிருத்தபடி அவனை பார்த்தாள் .




கொக்கிகளின் மீது படிந்திருந்த அவள் கைகளை பற்றுவது போல் வந்த அவன் கரங்களிடமிருந்து அவசரமாக விலகிக் கொண்டாள் .

” சே..என்ன அநாகரீகம் ..” தள்ளி போய் நின்றவள் மூச்சடைப்பதாக உணரந்து அறையை விட்டு வெளியேற முயன்றாள்.

” அவ்வளவுதானா ? ” அவன்தான் கேள்வி அவளுக்காகத்தான் இருக்கும் .ஏனெனில் அவர்களிருவரும் தான அந்த அறையில இருந்தனர் .

வேறென்ன ? எதைப்பற்றி கேட்கிறான் .

திரும்பி பார்த்த போது அவனோ …இன்னமும் நிதானமாக சன்னல் கதவுகளை திறந்து கொண்டிருந்தான் .

இல்லை ..இவன் வேறு ஏதோ எண்ணத்தில் என்னிடம் நெருங்க எண்ணுகிறான் .இந்த எண்ணம் வந்தவுடன் …

” நான் ஒரு காபி சாப்பிடலாமென நினைக்கிறேன் ” அந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டுமென்ற எண்ணத்துடன் வேகமாக வெறியேறினாள் .

உள்ளே அடுக்களையை ஊகித்து நடந்தாள் .இந்த வீட்டினுள் எதுவும் உண்பதென்பது அவளுக்கு பிடித்தமில்லாதெனினும் , இந்த வீட்டினுள் சுதந்திர நடமாட்டம் அவளுக்கு வேண்டியிருந்த்து.

அது அவளுக்கு சில விசயங்களில் உதவும் .

உள்ளே சாப்பாட்டு மேசையில் அமர்ந்து காபியை ஆற்றி குடித்து கொண்டிருந்தாள் அந்த செல்லா. முழு பெயர் செல்லம்மா ? செல்வலஷ்மி ? …ஏதோ ஒரு செல்வமோ ..செல்லமோ ..

அவளை பார்த்ததும் அவளது சங்கு முழக்கத்துடன் வெளியே நிற்க சொன்ன அவளது அலட்சியமும்  நினைவு வர ,  உள்ளூற குறும்புத்தனம் தலை தூக்க…

” எக்ஸ்க்யூஸ் மீ …எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா ? ” என்றாள் இனிய குரலில் .

அத்தோடு அவளருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தாள் .
திரும்பி அவளை பார்த்த செல்லாவின் பார்வையில் அவளை கண.களால் எரித்துவிடும் உத்தேசம் இருந்த்து.
இந்த காபியை குடித்துவிட்டு இவளை என்னவென்று பார்ப்போமா ? அல்லது இப்போதே இரண்டில் ஒன்று பார்க்கலாமா ? யோசனையுடன் காபி கப்பை பார்த்தாள் செல்லா.

” பரவாயில்லை நீங்கள் சாப்பிடுங்க செல்லா …” சமுத்ரா ராகமிழுக்கவும் , காபி குடிக்கும் யோசனையை ஒதுக்கிவிட்டு , எதை எடுத்து  இவள் மண்டையில் போடலாமென அவள் எழுந்து நிற்க..

” எனக்கும் ஒரு கப் காபி மேகலை ” என்ற குரலுடன் மற்றொரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான் அவள் சகோதரன் .அவன் யோகேஸ்வரன் .




இனியெங்கே அவள் தாக்குதல் நடத்த ? பேசாமல அமரந்து காபியை தொடர்ந்தாள் செல்லா. ஆனால் உள்ளுக்குள் காபியை விட கொதித்து கொண்டிரந்தாள் .

தன்னருகில் வந்தமர்ந்தவனை பிடிக்காத்தால் காபியை மறந்து எழுந்து போய்விடலாமென்ற முடிவை சமுத்ரா எடுத்த போது , அவள் முன் ஆவி பறக்க வாசமாக காபி வைக்க பட்டது.

தனது திர்மானத்தை அப்போதைக்கு ஒத்தி வைத்தவள் அவசரமாக காபியை உறிஞ்ச தொடங்கினாள் .

” மேகலா விருந்தாளிக்கு இரவு சாப்பிட என்ன வேண்டுமென கேட்டு சமைத்துபோடு ” அவன் கட்டளையிட்ட போது , இவன் தனக்காகவே காபி குடிக்க வந்தானோ என தோன்றியது சமுத்ராவிற்கு.

இல்லையெனில் இங்கிருக்கும் நிலைமைக்கு அவளுக்கு ஒரு கப் காபி கிடைத்திருப்பது சந்தேகமே.

காபியை வைத்துவிட்டு சமையலறை வாசலிலிருந்து சிரிப்பது போல் முறைத்துக் கொண்டிருந்தாள் மேகலை .இவள் யாராக இருக்க கூடும் ? சமையல காரியா ? அவளது நறுவிசான உடைகளை பார்த்தால் அப்படி தோன்றவில்லை.மிக மிக சிறிய பெண்ணாக தோன்றினாள் .பதினேழு  , பதினெட்டு வயதுதான் இருக்கலாம்.

குடித்து முடித்து விட்ட கப்பினை வெறித்தபடி கீழ் பார்வையில் சமுத்ராவை முறைத்தபடி செல்லா…

அதோ அந்த மாடிப்படி வளைவில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டு இவளை முறைத்துக் கொண்டிருந்தாள் அந்த அம்மாள் புவனாதேவி.

பாதி காபியை அருந்திய பின்பு கண்களை சுழற்றியபோது இவர்களையெல்லாம் அடிக் கண்ணால் கவனித்த சமுத்ரா எச்சில விழுங்கி கொண்டாள் .

இதென்ன ஓநாய் கூட்டத்திற்கு நடுவில் மாட்டிக்கொண்ட ஆட்டின் மனோபாவம் தோன்றுகிறதே …

திரும்பி பார்த்தபோது அவன் நிதானமாக ரசித்து காபி குடித்துக் கொண்டிருந்தான் .கடைசி சொட்டு காபியை சுவைத்தபடி ” மேகலை ” என்றான் .குரலில் நிறைய அழுத்தமிருந்த்து.

செலுத்தப்பட்டவள் போல் வந்து நின்று ” இரவு உங்களுக்கு என்ன சமைக்கட்டும் ? ” என்றாள் அந்த மேகலை .

இப்போது முகத்திற்கு புன்னகை பூசியிருந்தாள் .

அவளது திடீர் மாற்றத்தை வியந்தபடி ” சப்பாத்தி …” என்றாள் சமுத்ரா .

” ம் ….ம் …எட்டு மணிக்கு ரெடி பண்ணிடுறேன் ” முணுமுணுத்து விட்டு சென்றாள் .

” நீ சாப்பிட்ட்டு தூங்கு ..காலையில் பார்க்கலாம் ” போய்விட்டான் .

ஏனோ அவன் திடீரென கத்தரித்து விட்டு சென்றது போல் தோன்றியது .அவன் சென்ற பாதையை யோசனையுடன் பார்த்துவிட்டு திரும்பியவள் திகைத்தாள் .

வீட்டிலிருந்த மூன்று பெண்களும் அவளை சுற்றி அரை வட்டமாக நின்றிருந்தனர் .மூவரும் ஒன்று போல் இடுப்பில் கை வைத்தபடி கண்களில் நெருப்பை ஏந்தியபடி…

விட்டால் அந்த மேஜையின் மேல் ஒரு யாககுண்டம் ஒன்று அமைத்து அதனுள் அவளை இறக்கும் யோசனை மூவருக்குமே இருந்தாற் போல் இருந்த்து.நிலைமையை சமாளிக்க இவள் சிரித்த சிரிப்பு அந்த யாக நெருப்பின் நெய்யானது.

வியர்த்து விட்ட கழுத்தை துடைத்தபடி யோகேஸ்வரன் சென்ற திசையை திரும்பி பார்த்தாள் .

” அவன் இரவில் தோப்பு வீட்டில்தான் தங்குவான் ” அறிவித்தாள் அந்த புவனாதேவி.

ஆக அவன் ஆசைநாயகியுடன் கொஞ்ச போயாகிவிட்டது.இங்கே இவள் இரவு முழுவதும்  இந்த ஓநாய் கூட்டத்துடன் எப்படி கழிக்க போகிறாள் ?

அத்தோடு பிரச்சினை முடியவில்லை .தலைமை இனித்தான் வந்து கொண்டிருந்த்து.

தானாகவே சக்கர நாற்காலியை தள்ளியபடி வந்து நின்றார மயில்வாகன்ன் .அடிவயிற்றை தைத்து விட்ட அவரது பார்வை ஈட்டியை எடுத்தெறியும் வகையறியாது விக்கித்து நின்றிருந்தாள் சமுத்ரா.




What’s your Reaction?
+1
12
+1
15
+1
2
+1
0
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!