gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள் (துரியோதனன் நட்பு)

இரு வீரர்களும் (கர்ணன் மற்றும் அர்ஜுனன் ) கரங்களில் வில் வைத்திருப்பதைக் கண்டவரும், அனைத்துக் கடமைகளை அறிந்தவரும், நேருக்கு நேராக இருவர் போரிடும் முறைகளையும் நன்கறிந்தவருமான சரத்வானின் மகன் {கிருபர்}, கர்ணனிடம், “குந்தியின் இளைய மகனான இந்தப் பாண்டவன், கௌரவக் குலத்தைச் சார்ந்தவன். அவன் உன்னுடன் தனியாகப் போர் புரிவான். ஆனால், ஓ! பெரும்பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, நீயும் உனது குலத்தைக் கூற வேண்டும். உனது தந்தை, தாய் மற்றும் எந்த அரசு வழியை அலங்கரிப்பவன் நீ என்பது போன்றவற்றைக் கூற வேண்டும். இதையெல்லாம் அறிந்த பிறகே, பார்த்தன் {அர்ஜுனன்} உன்னுடன் போரிடுவான், இல்லையென்றால் போரிடமாட்டான். மன்னர்களின் மைந்தர்கள், புகழற்ற குலத்தில் பிறந்த மனிதர்களுடன் நேருக்கு நேர் தனியாகப் போரிட மாட்டார்கள்” என்றார்”.




வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிக் கிருபரால் சொல்லப்பட்டதும், கர்ணனின் முகம், மழைக்காலத்தின், மழைநீரால் தைக்கப்பட்டுக் கசக்கிக் கிழித்தெறியப்பட்ட தாமரை போல் ஆனது.




அப்போது துரியோதனன், “ஓ! குருவே, அரசகுல ரத்தம் கொண்டவர்கள், வீரர்கள் மற்றும் படைகளுக்குத் தலைமையான படைவீரர்கள் ஆகிய மூன்று வகை மனிதர்கள் அரசுரிமை கோரலாம் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. பல்குனன் {அர்ஜுனன்} அரசனாக இல்லாத ஒருவனிடம் போர் புரிய விரும்பவில்லை என்றால், நான் கர்ணனை அங்க தேசத்தின் மன்னனாக்குகிறேன்” என்றான்”.

வைசம்பாயனர் சொன்னார், “அந்நொடியிலேயே, தங்க ஆசனத்தில் அமர்த்தப்பட்டு, உலர்ந்த நெல், மலர்கள், நீர், தங்கம் ஆகியவற்றைக் குடங்களில் கொண்டு, மந்திரங்கள் அறிந்த பிராமணர்களால் கர்ணன் அங்க நாட்டு மன்னனாக நிறுவப்பட்டான். அவன் தலைக்கு மேல் அரச குடை பிடிக்கப்பட்டது. அந்தச் சந்தேகமில்லாத வீரனுக்குச் சுற்றி நின்று சாமரம் வீசப்பட்டது.

மகிழ்ச்சி நிறைந்த அந்த மன்னன் {கர்ணன்} கௌரவத் துரியோதனனிடம், “ஓ! ஏகாதிபதிகளில் புலியே, நாட்டைப் பரிசாகக் கொடுக்கும் உனக்கு, அதற்குச் சமமாக நான் என்ன கொடுக்கப்போகிறேன்?(39) ஓ! மன்னா, நீ சொல்வது அனைத்தையும் நான் செய்வேன்” என்றான்.

சுயோதனன் {துரியோதனன்} அவனிடம் {கர்ணனிடம்}, “நான் உனது நட்பையே விரும்புகிறேன்” என்றான்.(40)

அதற்குக் கர்ணன், “அப்படியே ஆகட்டும்” என்றான். அவ்விருவரும் மகிழ்ச்சியால் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு பெரு மகிழ்ச்சி கொண்டனர்”




What’s your Reaction?
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!