gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/தர்மன் ராஜ்ஜியத்தின் போது நடந்த நிகழ்வு

 இரண்டு இலக்கியங்களில் மகாபாரதமும் ஒன்றாகும். இந்த மகாபாரதம் ஒரு லட்சத்துக்கும் மேலான கிளைக் கதைகளைக் கொண்டது.  அப்படி சிறப்புகளைக் கொண்ட காவியத்திலிருந்து சொல்லப்படாத கதைகளையும் நாம் அறிந்திடாத கதையை  பார்ப்போம்.

Star Plus' Mahabharat to see Yudhisthir's coronation in tonight's episode

யுத்தம் முடிந்து, தர்மர் ராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டிருந்த நேரம். அன்றைய தினம் அவருக்கு முன்பாக வழக்கு ஒன்று வந்திருந்தது.




வழக்கின் சாராம்சம் இதுதான்…

பொம்மன், திம்மனிடம் தனது 10 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டான். அதை வாங்கிய திம்மன் ஏர் பூட்டி நிலத்தை உழுது கொண்டிருக்க தங்கக் காசுகள் நிறைந்த பானையொன்று கிடைத்தது. அதை எடுத்துச்சென்று பொம்மனிடம் கொடுத்து, ‘இது நீங்கள் எனக்கு விற்ற நிலத்தில் கிடைத்தது. அதனால், இது உனக்கே சொந்தம் நீயே வைத்துக்கொள்’ என்றான்.

ஆனால், பொம்மனோ, ”இது நான் உனக்கு விற்றுவிட்ட நிலம். அதில் என்ன கிடைத்தாலும் அது உனக்குதான் சொந்தம். எனவே நீயே வைத்துக்கொள்’ என்றான்.

இருவருமே அதை எடுத்துக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தனர். ‘சரி, நம் தர்ம மகாராஜாவையே கேட்போம்’ எனப் புறப்பட்டு ஹஸ்தினாபுரம் வந்து தங்கள் வழக்கைக் கூறினர்.

இருவரிடமும் தர்மர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் இருவருமே புதையலை எடுத்துச் செல்ல மறுத்து விட்டனர்.

அதனால் தர்மர், ”சரி, நீங்கள் இருவரும் இன்று போய் நாளை வாருங்கள். உங்கள் வழக்கில் நல்லத் தீர்ப்பைச் சொல்கிறேன்”  என்று சொல்லி அனுப்பி வைத்தார்.




பொழுது புலர்ந்தது. மறுநாள் சபையும் கூடியது. வரும்போதே பொம்மனும் திம்மனும் தனித்தனியாகவே வந்தனர். இருவரும் பரஸ்பரம் பேசிக்கொள்ளவும் இல்லை. ரொம்பவும் மவுடிகமாகவே இருவரும் இருந்தனர். தர்மர் தனது பரிவாரங்களுடன் வந்து சபையில் அமர்ந்தார்.

பொம்மன், ”நேற்று நடந்ததை கெட்ட கனவாக மறந்திடுங்கள். நிலம் என் மூதாதையரின் சொத்து. எனவே, அந்த நிலத்தில் கிடைத்த புதையல் எனக்குத்தான் சொந்தம்” என்றான்.

” என்று ஒரு பொருளை அடுத்தவருக்கு விற்று விட்டோமோ? அப்போதே அதில் வரும் நல்ல பலன் தீய பலன் எல்லாமே வாங்கியவரையே சேரும். அதனால் புதையல் எனக்குத்தான்” என்றான் திம்மன்.

தர்மருக்குத் தலைச் சுற்ற ஆரம்பித்துவிட்டது. ”இது என்ன மாயம்? நேற்றைக்கு அப்படிக் கூறியவர்கள், இன்றைக்கு இப்படி மாறிவிட்டார்களே” என்ற ஆச்சர்யத்துடன் அமைச்சரை நோக்கித் திரும்பினார்.

அமைச்சர் சொன்னார்… ”பெருமைமிகு தர்ம மகாராஜா அவர்களே… நீங்கள் காலக் கடிகாரத்தை காணவில்லையா? இன்றிலிருந்து கலியுகம் ஆரம்பிக்கிறது” என்றார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!