gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/ கர்ணனா தர்மனா ?

அர்ஜுனன், ஒரு நாள் கண்ணனைப் பார்த்து கேள்வி ஒன்றைக் கேட்டான்:

“என் அண்ணன் தர்மன், தர்மம் செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டுள்ளான். கேட்பவர்களுக்கு இல்லை என்று மறுத்ததே இல்லை. ஆனாலும் எல்லோரும் கர்ணனை தான் வள்ளல் என்று புகழ்கின்றனர். என் அண்ணனை அப்படி புகழ்வதில்லை.”




Arjunan mahabharatham Images • 💖lovers land 💝 (@jana_janani) on ShareChat

( கீதை உபதேசத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இது. கீதையில் செய்யும் கடமைக்கு பலனை எதிர்பார்க்க கூடாது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன். எனவே கீதை சொன்னதன் பிறகு அண்ணன் செய்யும் தர்மத்திற்கு பலனாக புகழைத் தம்பி எதிர்பார்த்து இருக்கமாட்டார். ) 

கண்ணனோ, “கர்ணன் தான் யுதிஷ்டிரனைவிட சிறந்த கொடையுள்ளம் கொண்டவன்” என்று பதில் சொல்லிவிட்டார்.

“என்ன நீயும் அப்படியே சொல்கிறாய்?” என்று சோகமகினார்  பார்த்தன்,

“நிரூப்பித்துக் காட்டவா?” என்கிறார்  கிருஷ்ணர். ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்று பாரத யுத்தத்தில் தேர் ஓட்டிக்கொண்டே தர்மத்திற்கு வெற்றி தேடித் தந்தவர் பகவான். ஒரு சின்ன விவாதத்தில், தன் பாயிண்டை நிரூபிக்க மட்டாரா என்ன?




மகாபாரதக் கதைகள்/அர்ஜுனன் – தர்மன் இடையே நடந்த களேபரமும், கிருஷ்ணர் சொன்ன உபதேசம்! – Pg Novels

உடனே கிருஷ்ணர், அந்தணராக வேடமிட்டுக்கொண்டார். அர்ஜுனனையும் அந்தணர் போல மாறுவேடம் பூண்டு வர சொல்கிறார் கண்ணன்.

கர்ணனிடம், பாரத யுத்தத்தில், அவன் செய்த தர்மத்தின் பலனை தானம் கேட்க மீண்டும் அந்தணர்வேடம் தரிப்பதற்கு இது முன்னோட்டமோ என்னவோ.
ஏற்கனவே அர்ஜுனன் சுயம்வரத்தில் திரௌபதியை வெல்லும்போது அந்தணர் வேடத்தில் தான் இருந்தான். அதனால், ‘பிரீவியஸ் எச்பீரியன்ஸ்’ அர்ஜுனனுக்குத் துணை நின்றிருக்கும்.




கண்ணன் தன் மனதில் வருண பகவானை நினைக்க உடனே மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. கண்ணனும் விஜயனும் அந்தணர் உருவில் யுதிஷ்டிரன் (தர்மன்) உள்ள மாளிகைக்குச் சென்றனர்.

அந்தணர்களைக் கண்டதும் தர்மன் அவர்களை சகல மரியாதைகளோடும் வரவேற்கிறார். (ஆசமனம் எல்லாம் செய்து இருப்பார் போல) பெருமிதத்தோடு அர்ஜுனன் கண்ணனைப் பார்த்து கொண்டான்.

கண்ணன் தர்மனைப் பார்த்து கேட்கலானான், “தர்மம் அறிந்த பாண்டுவின் புதல்வரே! மழை பெய்வதால், எங்கள் வீட்டில் உள்ள விறகுக் கட்டைகள் எல்லாம் நினைந்து விட்டன. அடுப்பு பற்றவைக்க இயலவில்லை. எனவே தயை செய்து விறகுக் கட்டைகளை கொடுத்து உதவ வேண்டும்.” என்று கேட்டு விட்டு பார்த்தனைப் பார்த்து கண்ணன் ஒரு கண் சிமிட்டுக்கொண்டார்.

தர்மர் சொன்னார். “இங்கே உள்ள அணைத்து விறகுகளும் அரண்மனை மாந்தருக்குச் சமையல் செய்ய உபயோகம் செய்து ஆகிவிட்டது. புதிதாக மரங்களை வெட்டினால் தான் உண்டு. அனால் மரங்களும் மழையில் தான் நினைந்து இருக்கும். எனவே என்னால் விறகு கொடுக்க இயலாது. வேண்டுமானால் தாங்கள், தங்கள் குடும்பத்தினரோடு வந்து அரண்மனையில் விருந்துண்டு செல்லலாம்.” என்றார்.




விறகுகள் இல்லை என்று தர்மர் சொல்வதை புரிந்துகொண்டு இருவரும் அரண்மனையை விட்டு வெளியேறினர்.

“இல்லாததை எல்லாம் கேட்டல் அண்ணன் எப்படி கொடுப்பான்?” என்று தர்மனின் வக்கீல் போலக் கேட்டான், அந்தணர் உருவில் இருந்த பார்த்தன்,

“வா.. அர்ஜுனா, கர்ணனைக் கேட்போம்.” என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

கர்ணனின் மாளிகையை அடைந்தனர் அவ்விரு நண்பர்கள். கர்ணனும் சகலவித மரியாதையோடும் அந்த இரு அந்தணர்களை வரவேற்றான்.

“மன்னா! மழையில் அணைத்து விறகுக் கட்டைகளும் நினைந்து விட்டன. எங்கள் வீட்டு அடுப்பு எரிய விறகுக் கட்டைகள் கொடுத்து உதவ வேண்டும்” என்று அர்ஜுனன் கர்ணனைப் பார்த்துக் கேட்டான்.

mahabharatham vijay tv fan page • ShareChat Photos and Videos

“எல்லா மரங்களும் மழையில் நினைந்து விட்டனவே. நான் என்ன செய்ய?” என்று கர்ணன் சொல்லவில்லை.

கர்ணன் உடனே தன் வில்லைக் கையில் எடுத்தார். ‘என்ன பண்றாரு இவரு?’ என்று புரியாமல் பார்த்தான் பார்த்தன்.

அம்பை நானிலேற்றி அந்த அரண்மனையில் உள்ள கதவுகளையும் ஜன்னல்களையும் நோக்கி செலுத்தினார். அனைத்தும் கீழே உடைந்து விழுந்தன,

 வியப்பில் அர்ஜுனன்.

அவற்றை அள்ளிக் கொண்டு வந்து, “இனி உங்கள் வீட்டு அடுப்பு எரியும்.” என்றார் அந்த கொடை வள்ளல்.எல்லாம் புரிந்திருக்கும் விஜயனுக்கு.




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!