Cinema Entertainment

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டார்களுக்கு அதிர்ஷ்ட மழை!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படும் நிலையில், சீரியலில் நடித்தவர்கள் பிக் பாஸ், திரைத்துறை என அடுத்தக்கட்ட நகர்வுகளை நோக்கி முன்னேறியுள்ளனர்.

விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்போதும் முன்னிலையில் இருந்த வந்த சீரியலுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர். அண்ணன் – தம்பிகளின் பாசப் போராட்டத்தை காட்டும் விதமாக எடுக்கப்பட்ட இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் எத்தனை எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்பது சரியாக தெரியவில்லை.




இந்த சீரியலில் மூத்த அண்ணாக ஸ்டான்லி நடித்தார். அவருக்கு ஜோடியாக சுஜிதா தனுஷ் நடித்தார். இவர்களுடன் வெங்கட், குமரன், சித்ரா, ஹேமா, தீபிகா, சரவணவிக்ரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதில் முல்லையாக நடித்த சித்ரா திடீரென மரணமடைந்ததையடுத்து, காவியா அறிவுமணி அந்த கதாப்பாத்திரத்தில் நடித்தார். காவியா இதற்கு முன் பாரதி கண்ணம்மா தொடரில் சின்ன ரோலில் நடித்து வந்திருந்தார். காவியாக்குப் பின்னர் லாவண்யா அந்த கேரக்டரில் நடித்து வருகிறார். பின்னர் தீபிகா சீரியலில் இருந்து சில காலம் விலகியபோது, அந்தக் கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்தார்.

இந்தநிலையில், சீரியலில் கடைசி தம்பி கண்ணனாக நடித்த சரவணவிக்ரம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டுள்ளார். கதிராக நடித்த குமரன், வதந்தி வெப் தொடரில் நடித்தார். வெங்கட் தற்போது தொடங்கியுள்ள கிழக்கு வாசல் சீரியலில் நடித்து வருகிறார்.

அதேபோல், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக சில காலம் நடித்த காவியா தற்போது திரைத்துறையில் களமிறங்கியுள்ளார். சினிமாவில் நடிப்பதற்காகவே காவியா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து பாதியிலேயே விலகினார்.

இந்த நிலையில் காவியா புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!