gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (16.10.23)

சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை 16.10.2023,சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.47 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று பிற்பகல் இரவு 08.17 வரை சுவாதி. பின்னர் விசாகம். ரேவதி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு காண்பீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்து தலை நிமிர்ந்து நிற்பீர்கள். மனதிற்குப் பிடித்த பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயாரின் இடுப்பு வலியை போக்குவதற்கு பெல்ட் வாங்கி கொடுப்பீர்கள்.இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

அக்கம் பக்கத்து சில்லறை சண்டையில் மாட்டிக் கொள்வீர்கள். இருப்பினும். அதை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்களில் விரும்பத்தகாத செயல்களை எதிர்கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தந்தையாருக்கு கண் புரை நோய்க்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். விநாயகர் வழிபாடு நன்று.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்

மிதுன ராசி அன்பர்களே!

நினைத்த காரியத்தை நிதானமாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் வாக்கு வன்மையால் வியாபாரத்தில் வருமானத்தைப் பெருக்குவீர்கள். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறி கொள்வீர்கள். மகனுக்கு பைக் வாங்கி பரிசளித்து சந்தோஷப்படுவீர்கள். உறவினர்களின் பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்வீர்கள்.பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

வியாபாரத்தை விரிவுபடுத்த வித்தியாசமாக சிந்திப்பீர்கள். தொழில்துறை போட்டிகளை தகர்த்து எறிவீர்கள். சில நேரங்களில் மற்றவர் பேச்சுகளை தவறாக புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயணம் செல்ல ஏற்பாடு செய்வீர்கள். நீங்கள் நல்ல காரியங்களை செய்து மற்றவர்களின் புகழ்ச்சியை பெற்று பெருமிதம் கொள்வீர்கள்.
அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

நீங்கள் விரும்பாத இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் மிகுந்த அல்லல்படுவீர்கள். குழந்தை பாக்கியம் ஏற்பட்டு குதூகலம் அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி வெற்றி கொடி நாட்டுவீர்கள். காதலியின் மன வருத்தத்தை போக்குவீர்கள். பழைய கடன்களை பக்குவமாக வசூல் செய்வீர்கள்.பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. சிவபெருமானை வழிபடுவது நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

நீங்கள் விரும்பாத இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் மிகுந்த அல்லல்படுவீர்கள். குழந்தை பாக்கியம் ஏற்பட்டு குதூகலம் அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி வெற்றி கொடி நாட்டுவீர்கள். காதலியின் மன வருத்தத்தை போக்குவீர்கள். பழைய கடன்களை பக்குவமாக வசூல் செய்வீர்கள். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

பண வரத்து அதிகமாகி வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். வெளிநாட்டுப் பயணத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். உயரதிகாரிகள் மூலம் உத்தியோகத்தில் உதவிகள் பெறுவீர்கள். பிள்ளைகளின் நடத்தையால் பெருமைப்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பொருளாதார மேம்பாடு காண்பீர்கள்.ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் நிலை குலைந்து போவீர்கள். கைக்கு எட்டிய வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரக் கடன்களை வசூலிப்பதில் சிரமப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் கலக்கமடைவீர்கள். கணவன்-மனைவி இருவரும் பழைய விஷயங்களைக் கிளறி அமைதியை கெடுப்பீர்கள் . பைரவர் வழிபாடு பலன் தரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

அலுவலகப் பணி தொடர்பாக அலைய வேண்டிய கட்டாய நிலைக்க ஆளாவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் வாக்கு சாதுரியமாகப் பேசாவிட்டால் நஷ்டம் அடைவீர்கள். அலட்சியமாக வேலை செய்தால் ஆபத்தில் சிக்குவீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கை தேவை.அம்பிகையை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகர ராசி அன்பர்களே!

ஆன்மீகப் பணியில் அதிக நாட்டம் கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். உடன் வேலை பார்க்கும் பெண்ணின் உள்ளத்தை கொள்ளை அடிப்பீர்கள். குடும்ப உறவுகளை ஒன்றிணைக்க பாடுபடுவீர்கள். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள்.விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பீர்கள். தொழில் தொடர்பான இழுபறி நிலைகளை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பண வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வேலையில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வீர்கள். வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாவீர்கள்.இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பானப் பலன்களைத் தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனராசி அன்பர்களே!

பெண்கள் துணிச்சலுடன் செயலாற்றி காரியசித்தி அடைவீர்கள். விருப்பமான உறவுகளுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். அரசாங்க உதவிகளை சுலபமாக பெறுவீர்கள். தர்மசிந்தனை அதிகரித்து பிறருக்கு உதவி செய்வீர்கள். துர்கையை வழிபடுவது நன்று.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!