Cinema Entertainment

மம்முட்டிக்கு பதிலா சத்யராஜ் நடிக்க வேண்டியதா?

70ஸ், 80ஸ்களில் சினிமா துறையை கலக்கியவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகராக இருந்தவர். இவர் சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் இவர் ரிக்‌ஷா மாமா, 100வது நாள், தம்பிக்கு எந்த ஓரு போன்ற பல திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.




100 நாட்கள் ஹிட் குடுத்த சத்யராஜ் படங்கள் - பாகம் 1 - Cinemapettai

இவர் எதிர்மறையாக கதாபாத்திரத்தில் நடிப்பவர். இதுமட்டுமல்லாமல் ஹீரோவாகவும் தனது நடிப்பினை மிக சரியாக செய்பவர். இவர் தற்போது அவ்வப்போது சில படங்களில் நடித்தும் வருகிறார். பாகுபலி படத்தில் கட்டப்பாவாக இவரின் நடிப்பு அனைவரும் ரசிக்கும்படி இருந்தது. வருத்த படாத வாலிபர் சங்கத்தில் இவரின் காமெடி கலந்த நடிப்பு மக்களை வெகுவாக ஈர்த்தது என்றே கூறலாம்.

இவரைப்போலவே மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுபவர் நடிகர் மம்முட்டி. இவரும் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி அடைந்தன. இவர் தமிழில் ரஜினியுடன் இணைந்து தளபதி, மெளனம் சம்மதம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.




இவர் நடிப்பில் தமிழில் வெளியான படம்தான் ஆனந்தம். இயக்குனர் லிங்குசாமி இயக்கிய இப்படத்தினை சூப்பர் குட் ஃபிலிம்ஸின் R.B.செளத்திரி தயாரித்தார். எதார்த்தமான குடும்ப பாங்கான கதையை மையப்படுத்திய படம் ஆனந்தம். இப்படத்தில் மம்முட்டி, தேவயானி, முரளி, அப்பாஸ் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். நான்கு அண்ணன் தம்பிகளின் பாச போராட்டத்தினை போராட்டமே இல்லாமல் எடுத்துள்ளார் இயக்குனர்.

இப்படத்தின் மூலம் பிருந்தா சாரதி எழுத்தாசிரியராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தினை ஆரம்பித்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இப்படம் உருவான விதத்தை பற்றி கூறியுள்ளார். இப்படத்தின் கதைகள் அனைத்தையுமே திருப்பதிக்கு சென்று கலந்தாலோசித்ததாகவும் திருப்பதி சென்றால் கண்டிப்பாக அப்படம் வெற்றி பெறும் எனும் நம்பிக்கையோடு அவ்வாறு செய்ததாகவும் கூறினார். மேலும் இப்படத்திற்கு முதலில் கதாநாயகனாக மம்முட்டியை தேர்வு செய்யவில்லையாம்.




மம்முட்டியை நடிக்க வைத்தால் எங்கு இப்படம் மலையாள படத்தின் ரீமேக் என்று மக்கள் எண்ணி விடுவார்களோ என யோசித்து இப்படத்திற்கு முதலில் வேறு நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அர்ஜூன், சரத்குமார், சத்யராஜ் என பல நடிகர்களிடம் கேட்டுள்ளனர். சத்யராஜ் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொன்னாராம். பின் பல தயாரிப்பாளர்களிடம் சென்று பேசியுள்ளனர். ஆனால்  இப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி சூப்பட் குட் நிறுவனத்திடம் மட்டும் செல்ல கூடாது என்று கூறிவிட்டாராம். ஆனால் இறுதியாக வேறு வழியில்லாமல் சூப்பர் குட் பிலிம்ஸிடமே இப்படம் கொடுக்கப்பட்டது. படபிடிப்பின் பொழுது சத்யராஜ் வேறு படத்தில் ஒப்பந்தம் ஆனதால் மம்முட்டியையே நடிக்க வைத்துள்ளார் இயக்குனர். கேரள நடிகர் என்றாலும் இப்படத்தில் இவரின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!