gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/அறிவுத் தேர்வு நடத்திய துரோணர்

பலருக்கு காலகட்டத்திற்கு ஏற்ப சுய அறிவு, மதி நுட்பம் செயல்படாமல் போகிறது, சிலருக்கு மட்டுமே நல்ல முறையில் சிறப்பாக செயல்படுகிறது  என்பதை விளக்கும் கதை.

அஸ்தினாபுரத்தில் மன்னர் திருதராஷ்டிரன் பிள்ளைகள் நூற்றுவரும், கௌவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். திருதராஷ்டிரனின் தம்பி பாண்டுவின் ஐந்து புதல்வர்களும், பாண்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டனர் என்பதை அறிவோம். ஆனால் 100  கௌரவர்கள் பெயர்கள் தெரியுமா?.கீழே பார்க்கலாம்.. இப்போ கதைக்கு வருவோம்!




Read all Latest Updates on and about துரோணர்

இவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் துரோணர். எல்லோருக்கும் ஒரே மாதிரி கல்வி கற்பித்தும், தங்களுக்கு ஓரவஞ்சமாகக் குறைவாகக் கல்வி கற்பித்ததாகக் குற்றம் சாட்டினான் கௌவுரவர்களில் மூத்தவனான துரியோதன்.

திருதராஷ்டிரர் துரோணரைக் கூப்பிட்டு விசாரித்தார். முடிவில் இருவருக்குமிடையே அறிவுத் தேர்வு நடத்துவ தென்று தீர்மானிக்கப்பட்டது. இருபாலருக்கும் ஒரே அளவு பணத்தைக் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு அறை நிறைய பொருட்களை நிரப்பி வைக்க வேண்டுமென்று கூறினார்.

துரியோதனன் அறை முழுக்க வைக்கோலை வாங்கி அடைத்து வைத்திருந்தான். பீஷ்மர், விதுரர், கிருபர் போன்றோர் வந்து அறையைத் திறந்ததும் தும்மல்தான் வந்தது.

பஞ்ச பாண்டவர்களின் அறையைத் திறந்ததும் அறை முழுவதும் கோலங்கள், அதில் நேர்த்தியாக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. மலர்த் தோரணங்கள், பழங்கள், பால், சந்தனம் எல்லாம் தயாராய் இருந்தன. அகில் வாசனை மனதை நிறைத்தது. பாண்டவர்களின் மதி நுட்பத்தை எண்ணி அனைவரும் வியந்தனர்.




பாண்டவர்கள் ஐவர் பெயர்கள் நமக்கு தெரிந்தது தான்

தர்மன்
பீமன்
அர்ஜுனன்
நகுலன்
சாகதேவன்




கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள் பார்க்கலாம்

Mahabharat: Will Duryodhan succeed in killing Abhimanyu? - Bollywood News & Gossip, Movie Reviews, Trailers & Videos at Bollywoodlife.com

1 துரியோதனன்
2 துச்சாதனன்
3 துசாகன்
4 ஜலகந்தன்
5 சமன்
6 சகன்
7 விகர்ணன்
8 அனுவிந்தன்
9 துர்தர்சனன்
10 சுபாகு
11 துஷ்பிரதர்ஷனன்
12 துர்மர்ஷனன்
13 துர்முகன்
14 துஷ்கரன்
15 காஞ்சநத்வாஜா
16 விந்தன்
17 நந்தன்
18 சத்வன்
19 சுலோசனன்
20 சித்ரன்
21 உபசித்ரன்
22 சித்ராட்சதன்
23 சாருசித்ரன்
24 சரசனன்
25 துர்மதன்





26 துர்விகன்
27 விவித்சு
28 விக்தனன்
29 உர்ணநாபன்
30 சுநாபன்
31 சலன்
32 உபநந்தன்
33 சித்திரபாணன்
34 அயோபாகன்
35 சித்திரவர்மன்
36 சுவர்மன்
37 துர்விமோசன்
38 மகாபாரு
39 சித்திராங்கன்
40 சித்திரகுண்டாலன்
41 பிம்வேகன்
42 பிமவிக்ர
43 பாலகி
44 பாலவரதன்
45 உக்ரயுதன்
46 சுசேனன்
47 குந்தாதரன்
48 மகோதரன்
49 சித்ரயுதன்
50 நிஷாங்கி

51 பஷி
52 விருதகரன்
53 திரிதவர்மன்
54 திரிதட்சத்ரன்
55 சோமகீர்த்தி
56 அனுதரன்
57 பாவசி
58 ஜராசங்கன்
59 சத்தியசந்தன்
60 சதஸ்
61 சுவாகன்
62 உக்ரச்ரவன்
63 உக்ரசேனன்
64 சேனானி
65 துஷ்பரஜை
66 அபராஜிதன்
67 குண்டசை
68 விசாலாட்சன்
69 துராதரன்
70 திரிதஹஸ்தன்
71 சுகஸ்தன்
72 வத்வேகன்
73 சுவர்ச்சன்
74 ஆடியகேது
75 திரிதசந்தன்
76 நகாதத்தன்
77 அமப்ரமாதி





78 கவசி
79 கிராதன்
80 சுவீர்யவ
81 குண்டபேடி
82 தனுர்தரன்
83 பீமபாலா
84 வீரபாகு
85 அலோலுபன்
86 அபயன்
87 உக்ராசாய்
88 தீர்கபூ
89 அனாக்ருஷ்யன்
90 குந்தபேதி
91 விரவி
92 சித்திரகுண்டலகன்
93 தீர்தகாமாவு
94 பிரமாதி
95 வீர்யவான்
96 தீர்கரோமன்
97 திரிடரதச்ரயன்
98 விரஜசன்
99 குந்தாசி
100 மகாபாகு
ஒரு சகோதரி – துர்சலை




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
2
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!