Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-20

20

 

“வீணா மூர்ச்சை ஆகி விட்டாளாம் .”

ரகோத்தமனுடன் பைக்கில் அவர் வீட்டுக்கு போன போது…

“இரண்டு நாளா கல்லூரியில்….., வீட்டில் நடந்த நிகழ்வுகள்….  வீணா வீட்டில் எல்லாருக்கும் தெரியும்…வீணாவுக்கு மற்ற எல்லோரையும் விட என்னைப் பற்றி அதிகம் தெரியும்… “

“எனக்காக இப்படி ஆகிவிட்டாளே…”

“இவளிடம் நான் இருந்த நிலையில் பேச கூட முடியவில்லயே….”

வீணா வீடு வந்து விட்டது..

ரகோத்தமனும் மோகனும் உள்ளே நுழைய…

“எப்படி இருக்கா…குழந்தை…” ரகோத்தமன் கேட்க,

கல்லூரியின் நர்ஸ் அதற்குள் …”பயப்பட ஒன்றும் இல்லை …”

“உடலில் நீர் சத்து குறைந்ததால் ஏற்பட்ட மயக்கம்…”

ரகோத்தமன் பின்னால் நுழைந்த மோகனையும் அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரையும் பார்த்து ,

“உன்னை யாரும் சரியா புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே மோகா….” வீணா அரற்ற….,

மோகன் வாயிலிருந்து “வீணா…வீணா…”

என்ற வார்த்தையை தாண்டி ஒன்றும் வரவில்லை.

நர்ஸ் அதிகம் கூட்டம் போடாமல் காற்றோட்டமாக இருங்க …

என சொல்ல அக்கம் பக்கம் உதவி செய்ய, பார்க்க வந்த மற்றவர்கள் விலக…

இப்போது வீணா குடும்பமும் மோகனும் மட்டும்…

”  உன் சம்பவம் கேட்டது முதல் வீணா ரொம்ப பயந்துட்டா ….வயிறு வேறு கலங்கி விட்டது..ஒன்றும் சாப்பிடவில்லை….”

“வீணா அப்பா வந்து விஷயம் சொல்வார்…”

“ஆனால் அப்பா தன்னிடம் எல்லாவற்றையும் சொல்லவில்லை…என்ற குறை அவளுக்கு….”

“அது தான் உனக்கும் கூட தீக்காயம் இருக்குமோ என அவளாக நினைத்து பயந்து விட்டாள்..” என்றாள் விஜி…

“மோகன் நான் வந்து உன்னை கூட்டி ப் போகிறேன்…”

“இப்போ டிபார்ட்மெண்டில் வேலை இருக்கு….நீ இங்கேயே இரு…”

விஜி….அவங்களுக்கு ஜூஸ் போட்டுக் கொடு…”என்றார்….

வீணா கண் விழித்து பேசியதை பார்த்தவுடன் தெம்பான ரகோத்தமன்.

வெளியே வந்த ரகோத்தமன்

விஜியிடம்….

“ஜூஸ் கொடுத்து விட்டு நீ

மோகனுக்கு தோசை.., சட்னி செய்…மதியம் முதல் ஒன்றும் சாப்பிடல அவன்…”

“நீங்க வந்தவுடன் நான் ரெண்டு பேருக்குமா வார்க்கறேனே…”

” வீணா பக்கத்தில் யாராவது இருக்கணுமே….”

“அதுக்கு தான் உன்னை வெளியே இருக்க சொன்னேன்..”

” வீணாவையும் மோகனையும் தனியே விடு…”

“அவர்கள் இனி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்வார்கள்….”

விஜி ஜூஸ் கொடுத்து விட்டு

” நீ வீணா விடம் பேசிக்கிட்டிருப்பா…” நான் உனக்கு கொஞ்ச நேரம் கழிச்சு தோசை வார்க்கிறேன்…” என சொல்லி வெளியே வந்து விட்டாள்.

“இருவர் கண்களிலும் இப்போது கண்ணீர் அடங்கி விட்டது…”

“வீணா சாய்வாக உட்கார்ந்திருந்த கட்டிலின் பக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த மோகனிடம் தன் கையை நீட்ட….. மோகன் இறுக்கமாக பற்றிக் கொண்டான்…”

கண்ணீரால் பேசிய இரு விழிகளும் இப்போது கண்களால் பேசத் தொடங்கியது…

கைகள் இருவரின் இதயத் துடிப்பை ஒரே சுருதியில் இணைத்தன.

வெளியே விஜி…

“வீணா மேல் ஒரு கண் இருக்கட்டும்….” என சொன்ன தன் கணவனா இப்போது இவர்களை தனிமையில் விட சொல்லியிருக்கிறார்…”

என நினத்தாள்.




வீணாவும் மோகனும் மெதுவாக பேசத் தொடங்கினர். நடந்த விஷயத்தை

எல்லோரிடமும் சொன்னதைப் போல வீணா விடமும் சொன்னான்… வீணாவுக்கு அனைத்தும் தெரிந்தாலும்…..

திரும்ப அவன் முகத்தையே பார்த்து அவன் வாயால் கேட்டாள்..

காவல் துறை விசாரணை பற்றி கேட்டு ஆச்சரிய பட்டாள்.

மோகன் செய்கையால் சொல்ல தனது வலது கையை அவள் கையிடமிருந்து எடுத்த போது…

” கைய எடுக்காம சொன்னா தான் நீ சொல்ற கதையெல்லாம் நம்புவேன்…”

வீணா வின் குழந்தை பேச்சு மோகனுக்கு தைரியத்தை வரவழைத்தது…

மோகனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றதால் இப்போ வீணா இயல்பு நிலைக்கு வந்தாள்.

“அப்பா உன் மேல் ரொம்ப பிரியமா இருக்காரு ரெண்டு நாளா…”

“அப்படி என்ன செஞ்சுட்ட…நீ..”

இப்போது மெதுவாக கிண்டலடிக்க தொடங்கினாள்…

“அது தான் தெரியல…ஒரு வேளை தாரா உயிரை நான் காப்பத்தினேனே… அதனாலா????.”

மோகனும் தன் விளையாட்டை துவக்கினான்.

வீணாவிடம் பேச்சில் கடிதத்தில் விளையாடும் போது மட்டும் தான் வேறு மோகனாக மாறிவிடுகிறேனே…

“நான் அம்பி யா.. ரெமோவா இவளிடம் மட்டும்.. “என நினத்தான்.

“ஆமாம் …அதான் உனக்கு தீ அணைப்புத் துறையில் வேல வாங்கி தரப் போறாரு…”

” சரி….என்கிட்ட மட்டும் இப்போ சொல்லு என்ன கலர் ட்ரெஸ் தாரா போட்டிருந்தா….”

“நீ வேற ஏண்டி …என் உயிரை வாங்கிறே..”

“உனக்கு அப்பா சொல்லிருந்தா… எனக்கும் சொல்லு…”

“சரி…ஒரு க்ளூ குடுக்கிறேன்…கண்டு பிடி…”

உனக்கும் எனக்கும் முதல்ல சண்டை வந்த போது இந்த கலரால தான்…..”

ஓ….” இப்போ மோகனுக்கு நினைவுக்கு வந்து விட்டது…

இருந்தும் நினைவு வராதது போல …

“கருப்பு கலரா….அந்த கலர் போன்ல தானே சண்டை போட்ட…???

“படுவா.!!!!! ஒண்ணும் தெரியாத மாதிரி எப்படிடா மூஞ்சை வெச்சுக்கறே….”

“இதைப் பாத்து தான் அப்பாவும் உன்னை நம்பறாரா….”

“கடவுளே… உன்னைக் கட்டி கிட்டு எப்படித்தான் ஆயுசு முழுக்க காலம் தள்ளப்போறேனோ…”

இரண்டு பேரின் கல கல சிரிப்பை வெளியிலிருந்து கேட்ட விஜி இப்போது சந்தோஷமாக தோசை வார்க்க சென்றாள்.

“ஆமாம் வீணா..நீ சொன்னதும் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது…இந்த வயலட் கலர் தான் எப்படி என் வாழ்வில் விளையாடுகிறது..

” அப்பா சொன்னாரே …. பெண் துணை முதல்வர் உனக்கு சப்போர்ட் என…அவங்க பேரு என்ன தெரியுமா???”




“அட…அவங்க பேரு…திருமதி.வயலட்…”

“அதனால இனிமே வயலெட்ட் பாத்தா ஓடிடு மவனே…”

இனிமே காப்பாத்த வேற வயலெட் வர மாட்டாங்க….”

“சரி…அந்தஸ்து பத்தியெல்லாம் அம்மா…அப்பா இனிமே பேசிக்க மாட்டாங்க….”

“அந்த லெட்டருக்கு பதில் துண்டு சீட்டு அனுப்புவியே ஏன் அனுப்பல அன்னிக்கு… “

“ரசிகாட்ட கொடுத்தேனே….” “அவ கூட வாங்கி வெச்சுண்டாளே…”

இந்த நிகழ்வால் மறந்திருப்பா…” “நான் வேணா வாங்கித் தரேன் …”என்றான் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு…

“இந்த தத்தி மோகா தான் என் செல்லம்…”என்றாள் வீணா..

“சரி…நீ தாராவுக்கு நடந்த மாதிரி எனக்கு தீ பிடிச்சிருந்தா…என்ன பண்ணி யிருப்பே…”

ஒரு ஆவலில் வீணா கேட்க …

“சே…அப்படி வாயால் கூட சொல்லாதே…” சட்டென

வீணாவின் வாயை மோகன் மூட…

வீணா அவன் கையில் முத்தமிட ….

வெளியிலிருந்து நுழைந்த மது, ரசிகா, ரகோத்தமன் காதில்

“இச்” என்ற ஒலி விழுந்தது…

“சரி..நடத்துங்க …”

“நடத்துங்க….” நாங்க வேணா வெளில இருக்கட்டுமா….”

மது கேட்க…

“எங்களை சாக்கா வெச்சு நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறதுக்கா….”

“ஒண்ணும் தேவையில்லை.. இங்கேயே இருங்க..”

மோகனுடன் தானும் உணவு உண்டு ரகோத்தமன் அவனை வீட்டுக்கு கூட்டி சென்றார்…

” ரெண்டு நாளா இருந்த வீணா வேற..இப்போ மோகனிடம் பேசிய பின் இருக்கும் வீணா வேற…”

” வாய் பேச்சுக்கும் மனங்களின் பேச்சுக்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்…”

என நினைத்துக் கொண்டே வந்தார்..

வீட்டு வாசலிலியே தனம் பாட்டியுடன் முரளி இருக்க…

“பாட்டி நான் ..இருக்கேன்…

மோகனுக்கு…” “உங்க மாப்பிள்ளையயும் தைரியமா இருக்க சொல்லுங்க…நல்லது நடக்கும்…”

இரவு மோகன் படுக்கையில் தூங்காமல் இருக்க…

போன் அழைத்தது…

” மோகன்….

எல்லாவற்றிற்கும் நன்றி….”

“அதுவும் அந்த துண்டு சீட்டில் உன் உள்ளத்தை முதல் முறையாக திறந்து காட்டியதற்கு…” என

சொல்லி…

“அப்புறம் பேசுகிறேன்..”

என்று போனை வைத்தாள் தாரா.

               தாரா வின் மனம் திறக்கும்.




What’s your Reaction?
+1
7
+1
9
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!