Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-15

15

 

லிஃப்டின் கதவு மூடி மோகன் கீழே இறங்குகையில் அவனது நினைவுக் கதவு திறந்து கொள்கிறது…

காலை முதல் கல்லூரியில் நடந்த மிக இனிமையான நிகழ்வு களை கீழே தள்ளி,”வீணா தன்னை அதிகம் கவனிக்காமல் யாரோ ‘மது’வாமே…”

“அசிங்கம் பிடிச்சவண்டா நீ…” என சொல்லி சிரித்தாளே…”

“என்னவாயிருக்கும்..”  என்ற நினைவுச்சுமை மோகனின் மனத்தை அழுத்த ஆரம்பித்தது….

பஸ்ஸில் ஏறி வீடு திரும்பும் வரையில்…மனத்தைப் பிழிய ஆரம்பித்தது.

“99  மதிப்பெண்னுக்கு சரியாக விடை எழுதிய மாணவன் ஒரு மதிப்பெண் தவறவிட்டது போல இருந்தது இன்றைய நிகழ்வு…99 க்கு மகிழத் தெரியாமல் அந்த மீதி ஒரு மார்க்குக்கு ஏங்கத் தொடங்கியது.

“அந்த மீதி ஒரு மார்க் தானே தன் வாழ்வில் ஒரு பூரணத்துவம் கொடுக்குமே…….அதனால் தானோ???? “…

“அல்லது அந்த 1 தான் தன்னுடைய இரண்டு பூஜ்யத்துக்கு முன் போட வேண்டுமோ….” என நினைக்கத் தொடங்கினான்..

வீட்டில் நுழைந்தவுடன்,

ருக்கு….

“விழா நல்லா நடந்ததாமே…”

“வந்து சாப்பிட்டு ஓய்வெடு…”

“அடுத்த வாரம் முதல் திரும்ப ஓடணும்..”

“அம்மாவின் சமையலை ருசிப்பேன்… “என பேசியது யார் கண்ணு பட்டதோ,

இன்று என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல் சாப்பிட்டு படுத்தான்..

முரளியிடம் பேசலாம் என்றால் அவன் அலுப்பில் மதியம் முழுக்க ஆடிய ஆட்டத்தில் ஒன்பது மணிக்குள் தூங்கி இருந்தான்

மெதுவாக தனக்குள் ஒரு சுய விமர்சனம் செய்யத் தொடங்கினான்…




“இன்று எனக்கு கிடைத்த அங்கீகாரம், நான் இந்த நான்கு வருடம் செய்த முயற்சிக்கு தானே….”

“அடுத்த நான்கு வருடப் படிப்பு எனக்கு மிக முக்கியம்..அதை எக்காரணம் கொண்டும் இழக்க கூடாது…”

“ஒரு புறம் மிகப் பெரிய பணக்கார தாரா….இன்று புதிய பெண் ரசிகா….இவர்கள் போல அனைவரும் என் படிப்பை பார்த்து வியக்கின்றனர், விரும்புகின்றனர்..”

“ஆனால் வீணா இது எதுவும் அதிகம் அறியாதவள்…அவள் இன்று என்னை ஏன் உதாசீனம் செய்தாள்…”

“ஒரு வேளை புது கார்…புது போன் அந்தஸ்து உயர உயர……”

“யார் அந்த மது…எப்படி இருப்பான்…என்ன படிக்கிறான்..இவளுக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தால்” ‘அசிங்கம் பிடிச்சவண்டா நீ’ என விளையாட்டாய் பேசி சிரித்திருப்பாள்…”

“யாரிடமும் எப்படி இதை கேட்பது???”

இந்த வயதில் பெண்ணை பற்றி நினைப்பு வந்தால் தானே தப்பு….” ” யார் இந்த மது….எனக்கும் வீணாவுக்கும் நடுவில் இவன் வில்லனா..? வில்லங்கமா….? அல்லது ஏதாவது விவகாரமா….”

மனக்குழப்பத்தின் நடுவே வந்த மயக்கத்தில் அதிகாலையில் உறங்கிப் போனான்..




“அண்ணா எழுந்திருண்ணா….இதை பாரு….”

முரளி குரல் கேட்டு எழுந்தான் மோகன்…

கையில் அன்றைய தமிழ் தினசரி..வேலூர் பதிப்பில் அவன் படமும் அவனது பேச்சின் சுருக்கமும் வந்திருந்தது..

கோவிந்தன், ருக்கு , முரளி எல்லோரும் ஒரு முறை பெருமைப் பட்டு முடித்திருந்தனர்..

இவன் எழுந்ததும் இவனிடம் பகிர்ந்து மீண்டும் சந்தோஷத்தை அதிகரித்துக் கொண்டனர்…

“நேத்தே ஏண்டா சொல்லலை…???” என்றாள் ருக்கு..

” சொல்லத் தோணலைம்மா….”

“அது தானே மோகனின் சுபாவம்…” “எதுக்கும் அலட்டிக்கமாட்டான்…”

இது கோவிந்தன்…

அண்டை வீட்டு காரர்களுக்கு அதை காட்ட ருக்கு போக, கோவிந்தன் கடைக்கு கிளம்ப,

உள்ளே வந்த முரளியிடம்

இன்னிக்கு சனிக்கிழமை ஆச்சே….என்னடா உன்னுடைய புரோக்ராம்….”

“பாய்ஸ் ஹை ஸ்கூல் கிரவுண்டில் கிரிக்கெட் பெட் மேட்ச்…அப்புறம் சாயங்காலம் பாட்டு கிளாஸ்…இப்போ பாட்டு டீச்சர் புதுசா வந்திருக்காங்க….பெல் வளாகத்தில் அவங்க வீடு….”

“வீணாக்கா சின்ன வயசில் திருச்சியில இருந்தப்போ இவங்க கிட்ட தான் வயலின் பாட்டு லாம் கத்துண்டாங்களாம்…”

“அப்போ வீணாக்கா வும் வராளா….??

உங்கூட கத்துக்க…”

“இல்லை சனி ஞாயிறு மட்டும் இங்க வருவா….”

“வாரத்துல மூணு நாளு அவங்க குவார்ட்டர்ஸ் லயே ஒரு வீட்டில் போய் கத்துகொடுக்கறாங்க…”

“அவங்க பேரு …பாமா டீச்சர்…”

“நான் இப்போ தான் போறேன்..ரெண்டாவது வாரம் நல்லா கத்துக் கொடுக்கறாங்க வீணை…” “இந்த வாரம் புல்லாங்குழல் பழகப் போறேன்…..”

“எல்லா வாத்தியமும் வெச்சிருக்காங்க….”

“என் மிமிக்ரி குரலை கேட்டு ‘நீ பாட மட்டும் பாடாதே’ நு சொல்லி சிரிச்சாங்க….”




மோகனுக்கும் முரளியிடம் பேசி சிரித்தது ஆறுதலாக இருந்தது..

அடுத்த வாரத்துக்கு வேண்டிய தனது துணிகளுடன் முரளியின் துணிகளைத் தோய்த்து அயர்ன் செய்து மடிக்க மதியம் நான்கு ஆகி விட்டது…

“வீணா பெல் வளாகத்துக்கு வராளாமே…”

“முரளியுடன் போகலாமா…என்ன சொல்லி அவனுடன் போவது …???”

“அங்கே தாராவின் வகுப்பில் படித்து இப்போது கெமிக்கல் எஞ்சினியரிங் சேர்ந்திருக்கும் கைலாஷின் நினைவு வந்தது…அவனும் ஒரு நாள் வா என சொல்லி இருக்கிறானே…”

“சும்மா போய் அவனை பார்த்து விட்டு வரும் சாக்கில் வீணாவை பார்க்கலாமே….”

“முரளி ..பெல்லில் எனது நண்பன் கைலாஷ் இருக்கான்..கூப்பிட்டான் நேற்றே….வரும் போது நான் உன்னை திரும்பக் கூட்டி வரேன்..அப்பாவின் டிவி எஸ் 50 எடுத்து வரேன்…”

“ஓகேண்ணா…”

முரளி கிளம்பி சில நேரத்துல மோகனும் அப்பா கடையில் போய் வண்டி எடுத்து பெல் கேம்பஸுக்குள் உள்ள கைலாஷ் வீட்டுக்கு போனான்.

“வாப்பா…மோகன் இவ்வளவு வருஷம் பள்ளியில் ஒண்ணா படிச்சுருக்கே…”

“இன்றைக்கு தான் வீட்டுக்கு வந்திருக்கே….”

“அவன் பக்கத்து லைப்ரரிக்கு போயிருக்கிறான்…”

“நீயும் போய் பாரேன்…”

நூலகம் வாசலில் போய் நிற்கும் போது….. அதிலிருந்து வெளியே வருகிறாள் ரசிகா…

” வாட் எ சர்ப்ரைஸ்….”

“மோகன் இங்க எங்கே வந்தே…”

“என்னை தேடி வீடு

வரைக்கும் வந்துட்டயா….???” சிரித்தாள் …

“இல்லை….அட …நேத்து பார்த்த ரசிகா தானே நீங்க…. மறந்துட்டேன்…..”

என் ஃபிரெண்ட் கைலாஷ்

வீட்டுக்கு வந்தேன்..அவன் இங்கே இருக்கானாம்…”




“ஆமாமாமாம்..எனக்கு தெரியும் …எங்க பக்கத்து வீடு தான்..உள்ளே ஒரு பொண்ணு கூட  கடலை போட்டுக்கிட்டு இருக்கான்..

தீந்ததும் வந்துடுவான்.

அது வரை என் கூட பேசிக்கிட்டுரு…”

“அவன் போடறது…கடலை…”

நாம பேசறது பேச்சா…”

நல்லா இருக்கே உன் நியாயம்….”

” நாங்க பொண்ணுங்க….”

எங்களுக்கு யாரு பேசறாங்க…யாரு கடலை போடறாங்க….யாரு ஜொள்ளு எல்லாம் அவனுங்க கண்ணைப் பார்த்தே தெரியும்…”

அவனுடன் தாரா பேசிக் கொண்டு இருக்கையில்

“அந்த வழியே வந்த யமஹா பைக்கின் பின்னால் ஆரஞ்ச் சுடிதார் ..பிளாக் டாப்ஸ் ஆரஞ்ச் துப்பட்டாவில் வீணா….

இவனைத் தாண்டிப்ப் போன பைக் சிறிது தூரத்தில் யூடர்ன் அடித்து

திரும்பி வந்தது..

” ஏய் மோகா…இங்கே என்ன பண்றே…..

“மது ….நான் சொல்லலை…இவன் தான் அந்த மோகன்…”

” ஓ…..அந்த மோகனா…..சொல்லி குபீர் சிரிப்பு சிரித்த வாலிபனை பார்த்தான் மோகன்..

நல்ல அழகு…முகத்துக்கு அழகு சேர்க்கும் கண்ணாடி….அழகிய உயர் ரக டீ ஷர்ட்….

விலை உயர்ந்த யமஹா பைக்கிலிருந்து இறங்காமல் கால் ஊன்றி நின்றான்….

மோகன் மதுவைப் பார்க்கையில் வீணா ரசிகாவை நோட்டமிடுகிறாள்…

மஞ்சள் டீ ஷர்ட்டில் தெறிக்கவிடும் அழகு… நீல ஜீன்ஸில் ரசிகா…

மோகன் “இது மது சாரங்க் பாட்டு டீச்சர் பையன்…”

“இனிமேல் பஸ்ஸில் வரும்போது பெல் கேம்பஸ் வாசலில் என்னை பிக் அப் செய்யறேன் நு சொல்லிருக்கான்…”

“ஒசி சவாரி உடம்புக்கு நல்லதாம்…” “சொன்னான் இவன்…”

மீண்டும் இருவரும் சிரிக்கிறார்கள்…

வீணா “இவள் ரசிகா…”

“பேர்ல மட்டுமல்ல…”

“நேத்துலேந்து நான் இவன் ரசிகை….”

வீணா மோகனை பார்க்க..

மோகன் மது வை பார்க்க. …




What’s your Reaction?
+1
8
+1
7
+1
1
+1
2
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!