Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-13

13

 

முதல் வரிசையில் மோகனின் பக்கத்து இருக்கைகளில் கோவிந்தன் கடை முதலாளியும் ,தாராவின் அப்பாவுமான ராமசாமியையும்,  தாராவையும் அமர வைத்த ரகோத்தமன் பார்க்கிறார்…

அதற்குள் மோகன் எழுந்து ராமசாமிக்கு மரியாதை செலுத்தியதையும் பார்க்கிறார்..

“தானும், விஜியும்,  கோவிந்தன் வீட்டில் இருக்கும் போது தனக்கு எழுந்து நின்று மோகன் மரியாதை கொடுத்த நிகழ்வு” மீண்டும் ரகோத்தமனுக்கு நினைவுக்கு வருகிறது..

“ராமசாமி மோகனைப் பார்த்து,

அட நீயும் இந்த காலேஜ் ல தான் சேர்ந்திருக்கயா தம்பி”

நல்லதா போச்சு…அதான் தாரா உன் பக்கத்திலே உட்கார இடம் மாத்திக்கறாளா..”

“அவளும் எவ்வளோ முயற்சி பண்ணாளாமே…ஆனா உன்னை முந்த முடியலயாமே படிப்புலே…”

“இப்போ இந்த காலேஜ் ல தான் சேருவேன் நு அடம் பண்ணி சேந்துட்டா…”

“நீ யும் அவளும் ஒரே குரூப்பா??”

“இல்ல சார்….”

என் குரூப் முதலிலேயே நிரம்பிடுச்சு..அதான்..”

“அது கிடக்குது விடு தம்பி…,ஏன் தாரா…தம்பி குருப் ல சேரறயா????”

“களுதை ….பணத்தை கொடுத்தா சீட் தரானுங்க…”

மோகனுக்கு பயம் வந்தது…”தாராவும் பயோடெக் சேர்ந்தா என்ன செய்வது….”

“அப்பா சொன்னது சரிதான்….”

இவர்களுக்கு பணத்தை கொடுத்து நிலம் நீர் ஆகாயம் ,கல்வி முதல் மனிதர்கள் வரை வாங்குவார்கள்..

“தன் படிப்புக்கு தனக்கு முதல் வரிசையில் இடம் கிடைத்தது…இவருடைய பணத்துக்கு இவருக்கும் முதல் வரிசை…இவர் மகளுக்கும் அதே இடம் கிடைத்தது..”

“நாளை இவளும் நம் குரூப்பில் சேர்ந்தால்….”.  எண்ணமே பயமாகி முகத்திலும் அசடு வழியத் தொடங்கியது..

ரகோத்தமனும் இதை கவனிக்க தவறவில்லை..அவருக்கு ‘மோகனுக்கு இவர்களை தெரிந்திருக்கிறது’ என்ற விவரம் தவிர வேறு விஷயம் தெரியவில்லை.

“அதற்குள் தாரா….

அதெல்லாம் மாத்திக்க வேண்டாம்பா…” இதுவும் நல்ல குரூப் தான்..”

மோகனின் பக்கத்தில் உட்கார்ந்து மோகனின் காதில்

“உன் கூட அதே குரூப்பில் படித்தால் எனக்கு ‘வீணா’க…சாரி…சாரி…

தேவையில்லாம என் படிப்பு கெட்டுடும்..இங்கே நான் முதல் மதிப்பெண் பெறலாம்..”

சிரித்துக் கொண்டே. “அதுவும் தவிர…

மவனே நீ எங்க போகப் போறே…”  “ரெண்டு வருஷம் ப்ராக்டிகல் வகுப்புக்கு ஒன்ணா தானே வருவோம்…” “அங்கே கவனிச்சுக்கிறேன்..”

“நொடிக்கொரு முறை அப்பாவும் பெண்ணும் மாறி மாறி மோகனுக்கு டென்ஷன் கிளம்பிக் கொண்டிருக்க……

தமிழ் தாய் வாழ்த்து அறிவிப்பு வந்து நிகழ்ச்சி தொடங்கியது..

மாவட்ட கலெக்டர் தலைமை உரை நிகழ்த்தி உட்காருகையில் ஒரு மாணவனின் பெற்றோர் எழுந்து

“இளைஞர்கள் எப்படி படிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே…” என சொல்ல…

கலெக்டர் கல்லூரி சேர்மனுடன் பேசிக் கொண்டிருந்தவர்…. ,

“இப்போது தான் கேள்விப்பட்டேன்..”

“சென்னைக் கல்லூரிகளை விடுத்து இந்த உள்ளூர் கல்லூரியைத் தேர்ந்தெடுத்த மாணவன் இறுக்கிறாராமே…”

“மாநில அளவில் ஒரு அஞ்சு லட்சம் பேரிலே முதல் நூறில் வந்திருக்கிறாம்..அவரைக் கூப்பிட்டு எப்படி படித்தார் என கேட்கலாமே..நான் அந்தக் காலம்.  இவரைப் போன்றோர்தான் மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணம்…”

” மற்ற துறைகளில் இருப்பவர்களைப் பற்றி வெளியே தெரிவது போல

படித்தவர்களைப் பற்றி அதிகம் தெரிவிப்பதில்லை..”

“மீடியாவும் இதில் அதிகம் கவனம் செலுத்துவது இல்லை..”

“யாருக்காவது அந்த மாணவன் பெயர் தெரியுமா???.”

“மோகன் தான் மட்டுமா..இல்லை தன்னையும் மிஞ்சி யாராவது இருக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்க்க,

தாரா எழுந்து …

“இவர் தான் அந்த மாணவன்..பேரு மோகன் சார்..”

கூட்டம் மொத்தமும் கை தட்ட,

“இந்த மாணவிக்கும் கை தட்டவும்.. திரை,  கிரிக்கெட் பிரபலங்களுக்கு மத்தியில் இது போல படிப்பவர்களின் பேரையும் இந்த நாட்களில் அறிந்திருக்கிறாரே….”

“கற்றாரை கற்றாரே காமுறுவர்..”

“உன் பேர் என்னம்மா??

“தாரா சார் “

இவருக்கும் கை தட்டல் விழ,

“மோகன் இங்க வாங்க சார்…தைரியமா.???

மோகன் மேடையேறினான் முதல் முறையாக…

“தைரியமா உங்க செயல் முறைகளைச் சொல்லுங்க…”

“நானும் தமிழில் படித்தவன் தான்..”

ஒரு ஆயிரம் பேருக்கு மேலே மேடையில் இருந்து மோகன் பார்க்கிறான்…

நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது…




” நிறைய பேர்,ஆசிரியர்கள் உட்பட,  இது இந்த கலெக்டருக்கு வேண்டாத வேலை என நினைக்க,

“உன் திமிர் இனி அடங்கும் ..இன்று எல்லோர் முன்னிலையிலும் நீ படப் ப் போகும்

அவமானத்தால் ” என நினைக்கிறாள் தாரா..

“அவையோர்க்கு வணக்கம்..

நான் அதிகம் பேசப் போவதில்லை..

“பேசத் தெரியாது நு சொல்லு.”

தாரா நினைத்ததை யாரோ ஒரு மாணவன் கீச்சு குரலில் கிண்டலாகச் சொல்ல கூட்டம் சிரித்தது..

” பேசத் தெரியாது தான்….நான் படித்ததை சொல்கிறேன்..

“அப்புறம் அதை ஏற்பதும் ஏற்காதாதும் உங்க எண்ண ஓட்டத்தைப் பொறுத்தது..”

பளீரென பதில் சொல்ல….

கலெக்டர், சேர்மன் முதனாலோர் கை தட்ட, பெற்றோர்கள் அனைவரும், சில மாணவர்களும் என்ன சொல்லப் போகிறான் இவன் என ஆவலாக பார்க்க, ரகோத்தமன் மோகனை பெருமையாக பார்க்கத் தொடங்கினார்…

“இந்த வயசில் எல்லோருக்கும் தோன்றும் பல நினைவுகள் எனக்கும் வந்தது… “

“ஆனால் படிப்பு தான் முக்கியம் என்ற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, நினைவு வந்ததும் மற்றவற்றை ஒதுக்கி இரண்டு வருடம் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன்..

” அப்போது உனக்கு இந்த வருடங்களில் வடிகால் இல்லையா என நீங்க நினைக்க கூடும்..”

“பாடல்கள் கேட்பது பிடிக்கும்….அம்மா சாப்பாடு ரசித்து சாப்பிட பிடிக்கும்….டிவி யில் காமெடி காட்சிகள் பார்த்து விட்டுத் தூங்குவேன்..

” பள்ளியில் பாடம் நடத்தும் போது பாடத்தை மட்டும் கவனிப்பேன்…..”

“அம்மா சாப்பாட்டை சாப்பிடும் போது அதில் மட்டும் கவனம் செலுத்துவேன்…அதனால்.ரசிக்கமுடிகிறது…”

“பாடல்கள் கேட்கும் போது படிப்பைப் பற்றி நினைக்க மாட்டேன்…”

டிவி நகைச்சுவையில் கவுண்டமணி பேப்பர் ரோஸ்ட், வடிவேலு ஊத்தப்பம் சாப்பிடும் காட்சி பார்க்கும் போது அம்மா சாப்பாட்டு ருசி வந்து போவதில்லை தானே நமக்கு….”

“அது போலத் தான்…”

“அதனதனை மூளையில் அந்த அந்த கட்டத்துக்குள் நிறுத்த பழகிக் கொண்டேன்…”

“முதலில் கடினம் தான்…. “ஒரு மாதம் முயன்று பாருங்க நீங்களும் மிளிர முடியும்…”

“என் எண்ணங்களைப் பகிர்ந்து ஒரு சில மாணவ நண்பர்கள் தங்களுடைய தற்போதைய நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறினால் போதும்…எனக்கு மட்டுமல்ல இந்த வாய்ப்பு நல்கிய மாவட்ட தலைவருக்கும் பெருமையாக இருக்கும்.”




“சென்னை கல்லூரியில் படித்தால் கவனம் சிதறும் என்று தானே இங்கே சேர்ந்திருக்கிறாய்..”

ஒரு பெண் மாணவி எழுந்து கேட்க….

“செத்தாண்டா சேகரு…”

மாட்டுணாண்டா மோகரு”மீண்டும் ஒரு கிண்டல் குரல்…

“கவனம் சிதற வைக்க இங்கேயே அதிக வாய்ப்புகள் இருக்கின்றனவே…” என்றான் மோகன் .

விதவித மான வண்ணங்களில் வித விதவிதமாக உடைகள் அணிந்திருக்கும் மாணவிகள் இருக்கும் பக்கம் திரும்பி …”

“அதுவும் தவிர உங்க மேலே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா …நீங்களும் இந்தக் கல்லூரி தானே…” என நவ நாகரீக உடை அணிந்திருந்த அந்த மாணவியை பார்த்து கேட்க,..

மாணவிகளும் மாணவர்களும் இப்போது மோகன் பக்கம் சேர்ந்து கொண்டு சீட்டி அடிக்கத் தொடங்கினர்..

“எனது தம்பி படிப்புக்கு நான் தான் உதவ வேண்டும் அது தான் காரணம் தோழி….”

படிப்பதற்கு எந்த சூழ்நிலையும் போதும் …”

“கவன சிதறலுக்கும் அதுவே…”.

நமது இலக்கு எதனை நோக்கி என்பது தெரிந்து அவ்வப்போது அதனை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்..அவ்வளவு தான்….”

வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் ..வணக்கம்..

பின்னர் தேசிய கீதம் இசைத்து விழா முடிவுற..

கலெகடர் விடை பெற….

மோகன் பக்கம் மாணவர்கள் , பெற்றோர்கள், அதையும் விட அதிகமாக

மாணவிகள் சூழ்ந்து கொள்ள

பொறாமையில் உள்ளுக்குள் புழுங்கத் துவங்குகிறாள் தாரா…..




What’s your Reaction?
+1
5
+1
11
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!