Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-11

11

 

கல கலவென கீழே விழுந்த கண்ணாடி வளையல் துண்டுகள், மோகன் கையிலிருந்து விடுபட்ட வீணா,

கண்ணாடி சில்லுகளை பொறுக்கும் மோகன்,  இவற்றைப் பார்த்த ரகோத்தமன் இவர்களை ஏறெடுத்துப் பார்த்து ஒன்றும் கேட்காமல் அங்கிருந்து நகருகிறார்…

அன்று மதியம் அனைவரும் மதிய உணவு அருந்தும் போது கூட வீணாவும் மோகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை..

ரகோத்தமனும் விஜியும் வேலூரில் கல்லூரியிலேயே குவார்ட்டர்ஸ் கொடுக்கிறார்கள் எனவும் அங்கே இரண்டொரு நாளில் போய் பால் காய்ச்சி சாப்பிட்டு விட்டு போய் விட இருப்பதாகவும்

திருக்கோவிலூரிலிருந்து வீட்டு பொருட்கள் வர ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

“ஹை, அப்போ வாராவாரம் வீணாக்கா வீட்டுக்கு போய் விளையாடுவேன் நான்” என்கிறான் முரளி..

பால் காய்ச்சி சாப்பிட முரளியும், ருக்மணியும்

அவர்களுடன் கிளம்ப, மோகனை தனம் பாட்டிக்கு துணையாக வைத்து செல்கிறார்கள்.

வீணா கிளம்பும் போது கூட மோகனைப் பார்க்கவில்லை.

மோகனும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகம் யாருடனும் பேசவில்லை..

மோகனுக்கும் சரி, வீணாவுக்கும் சரி ,

ரகோத்தமனின் முகத்தை சந்திக்கத் துணிவில்லை..

மோகனுக்கு தேர்வுகள் முடிந்து விட வீட்டில் தனிமை இப்போது முதன் முறையாக கொல்கிறது…

“தாரா சொன்னது போல, நான் படிக்க மட்டும் தான் லாயக்கா, பழகத் தெரியவில்லையோ???…”

அருகில் இருக்கும் நூலகம் பக்கம் சென்று ஒரு தமிழ்க் கதை புத்தகத்தை எடுத்து வருகிறான்.

கதையில் ஒரு சம்பவம்…

”  திருமண நலங்கு நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்த மணப்பெண் சுதாவின் கையிலிருந்து தேங்காயை மாப்பிள்ளை ரங்கன் பிடுங்க, சுதா மறுக்க ,

மணப்பெண் சுதா இப்போது மொத்தமாக ரங்கன் மடியில் வெட்கத்துடன் விழுகிறாள்.

அதைப் பார்த்த எல்லோரும் கை கொட்டி சிரிக்க , அதை எதிரொலிக்க , அவள் கை கண்ணாடி வளையல்களும் சிதறிச் சிரித்தன..”

ஒரு குறும்புக்காரி

“வீணா எல்லா வளையலையும் மாப்பிள்ளை உடைச்சுட்டாரே…” “கூப்பிட்டா, சுதாவே வந்து மடி மேல உக்காந்திருப்பாளே..”

“மாப்பிள்ளைக்கு இவ்வளோ மோகமா அதுக்குள்ள???”..,

“இவர் பேரு ரங்கன் இல்லை இனிமேல் , மோகன் எனக் கூற கல்யாண மண்டபமே அதிர்ந்தது. “

மோகன் புத்தகத்தை மூடி விட்டு திரும்ப எடுத்து படித்தான்…




“சுதா,  ரங்கன் கதையில் எதற்கு இந்த ஆசிரியர் வீணா பேரையும் தன் பேரையும் இழுக்கிறார்…??”

என நினத்தான்.

“இது நமது நினைப்பா , கடவுளின் நினைப்பா…??”

ஒன்றும் புரியவில்லை மோகனுக்கு..

இதற்குள் முரளியும் ருக்மணியும் வந்து விடுகிறார்கள்..

அடுத்த நாள் பாட்டி தனம் ஊருக்கு செல்ல முரளியும் மோகனும் ரயில்வே ஸ்டேஷன் சென்று ஏற்றி விட்டு வர செல்கிறார்கள்.

ரயிலடியில் ஏற்கனவே விஜியும் , வீணாவும் வந்திருக்கிறார்கள் பாட்டியை வழி அனுப்ப…

“ரகோத்தமனும் அங்கு வரவில்லை..”

“வீணாவைப் பார்த்து ஏதாவது பேசலாமா..”

“என்ன நினைப்பாள்..விஜிக்கு நடந்த விஷயம் தெரியுமா??”

மோகனை அங்கே பார்த்த வீணாவுக்கு வேறு நினைவு.

வேலூருக்கு போன பின் ஒரு நாள் இரவு,

வீணா தன் ரூமில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்க,

ரகோத்தமனும் விஜியும் பேசிக்கொண்டிருக்க ‘மோகன்’  என்ற வார்த்தை கேட்டு கவனிக்கலானாள்.

“வீணா மேல ஒண்ணும் தப்பிருக்காது..மோகனும் சின்ன பையன் தானே??? …ஏதோ ஆசையில் கையை பிடிச்சுருக்கான்..”




“நீங்க வருவதைப் பார்த்து வீணா

கையை உதறி விலகி இருப்பாள்..” என சொல்லி விட்டு,

“நீங்களே உங்க செல்லப் பொண்ணு கிட்டே கேக்கறது தானே?..

நான் கேட்டா இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டா.” இது விஜி.

“வீணாவுக்கு இப்போ வயசு 16 முடிஞ்சாச்சு..”

“இந்த வயசிலே இதை நாம ‘ஏன், எதுக்கு’ நு கேட்டா ,

“ஒன்று நம்ம மேல கோபப் படதோணும் , இல்லை அந்தப் பையன் மேல கோபப் படத்தோணும்…”

“நாம கூடாதுனு சொன்னா

மேலும் அவன் கூட பேசத் தோணும்.

இதனை விட்டுத்தான் பிடிக்க வேண்டும்..”

“மோகன் குடும்பம் நம்ம அளவுக்கு வசதியான குடும்பம் இல்லைனாலும் தனம் பாட்டி வீடு இவர்களுக்கு தானே..

அதுவும் தவிர எல்லோரும் மிகவும் நல்லவர்கள்..” நீங்க பணத்தை பார்க்காதீங்க” நம்ம குழந்தை நினைப்பு தான் முக்கியம்..” விஜி சொல்கிறாள்.




“பணத்தைப் பற்றி கவலையில்லை..இவர்களுடைய பழக்கம் ,

இந்த வயசிலே தோன்றும் ” பப்பி லவ்” ஆகவும் இருக்கலாமே..”

“மோகன் மிக நல்லா வருவான் நு தான் தோணுது..” ,

“ஆனால் இந்த வயசிலே ‘காதல் ,அது ,இது’ என மனசை அலை பாய விடக் கூடாதே..”

“அதுவும் தவிர நம்ம வீணாவுக்கும் நிலையான புத்தி கிடையாதே…”

“பாட்டை விட்டு, வயலின்….,

வயலினை விட்டு வீணை என மாறிக் கொண்டிருக்கிறாளே..”

இன்னும் இரண்டு வருடம் ஆனால் தான் தெரியும் இவர்கள் மனசும், அதே நேரத்தில் மோகனின் படிப்பின் நிலையும்….”

“அது வரை நீ எதற்கும் வீணா மேல் ஒரு கண்ணாக இரு..”

என சொல்லி வீட்டு அவர்கள் போய்த் தூங்க வீணா மனது இப்போது அலை பாயத் துவங்கி விட்டது.

“ஒரு வேளை அப்பா சொன்ன மாதிரி, மோகனின் படிப்பு தன்னால் , தன் பேச்சு கோபத்தினால் கெட்டு விடுமோ??”

“பெண்கள் பின்னால் சுற்றி படிப்பினைத் தொலைத்த, அவளின் பள்ளி மாணவர்கள் சிலர் அவள் நினைவில் வந்து போயினர்.”

“தானும் அப்பா சொல்வது போல ஒரு வேளை மாறி விடுவோமோ??”

“போன வருஷம் மனம் ஒரு குரங்கு” என சொல்ல மோகன் அதற்கு,

” ஆனா அந்த ஆஞ்சனேயர் மனம் முழுக்க ராமர் தானே இருக்கிறார்” என்ன சொன்னதும் இப்போது வீணாவுக்கு வந்து போகின்றது..”

“அப்பா அம்மா சொல்வது போல நான் என் மனதை லகான் , கடிவாளம் எல்லாம் போட்டு வெச்சுக்கணும்..”

என்றெல்லாம் நினைத்து தூங்கிப் போனாள்..

“ரயிலுக்கு வழி அனுப்ப வந்த இவளுக்குத் தெரியும் விஜியின் ரெண்டு கண்ணும் தன் மேல இருக்கும் என….”

அதனால் மோகனைத் தவிர்த்து தனம் பாட்டி, முரளியுடன் பேசிக்

கொண்டு ரயில் செல்லும் முன் விடை பெற

விஜி ‘அப்புறம் பாக்கலாம்’…

என சொல்லிப் போக ரயிலும் கிளம்ப,

பிளாட்பாரத்தைப் போல மோகன் மனதிலும் வெறுமை சூழ்ந்தது..

மாலை டிவியில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்ப படிவம் கொடுக்கும் செய்தி கேட்டு குறித்துக் கொண்டான்..

இரவு 11மணி…

கோவிந்தன் இன்னும் வரவில்லை..

ஹாலில் படித்துக் கொண்டிருந்த மோகன் போன் அடிப்பதை கேட்டு எடுத்தான்..

“ஹலோ…நான் மோகன்..யார் வேணும்..”




“நீ தான் வேணும்…” தாராவின் குரல்..

“ஏன் என்னை பாடாய் படுத்தறே..” இது மோகன்..

” சும்மா தான் சொன்னேன்… பொறியியல் விண்ணப்ப படிவம் கொடுக்கறாங்களாம்..”

“அது எனக்கே தெரியும்”

“இந்த வேளையில் நீ எடுக்க மாட்டியே போனை , உன் ஆளு தானே போனை எடுத்து என்னைத் திட்டுவா??”

“அவளை எதுக்கு வீணா வம்புக்கு இழுக்கறே..”

அவ இங்கே இல்லை இப்போ..உனக்கு இப்போ சந்தோஷமா…” என கூறி போனை வைக்கிறான்.

வைத்த மறு நொடி மீண்டும் ஒலிக்க ,

போனை எடுத்த மோகன் ,

“இப்போ தானே சொன்னேன்,”

” வீணா அவள் பேச்சை எடுக்காதே என… , திரும்ப எதுக்கு போன் பண்றே”

“யார் பேச்சை யார் இழுக்கறா…”

அதான் போன் எங்கேஜ்ட் ஆ இருந்ததா??”

இப்போது போனில் தேன் குரல் தேவதை வீணா..”

“வீணா??? நீயா???




What’s your Reaction?
+1
12
+1
10
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!