gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-30 (சண்டேசுரவர நாயனார்)

திருச்சேய்ஞலூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாள் அருகே மண்ணியாற்றின் கரையில் அமைந்துள்ளது.

சேய் என்பது முருகனைக் குறிக்கும்.முருகன் இங்கே உள்ள சிவனாரை வழிபட்டு சர்வசங்காரப் படையைப் பெற்று போரில் சூரனை வென்றார் என்பது வரலாறு.
மேலும் சிவனுக்கு குருவாக அமர்ந்து போதித்தால் முருகனுக்கு சிவத் துரோக தோசம் பற்றியது. இங்குள்ள இறைவனாரை வழிபட முருகனைப் பற்றிய தோசம் விலகியதாகக் கூறப்படுகிறது.




முருகன் வழிபட்ட இடமாதலால் இவ்வூர் சேய்ஞலூர் என்றும், திருச்சேய்ஞலூர் என்றும் அழைக்கப்பட்டு தற்போது சேங்கனூர் என்று அழைக்கப்படுகிறது.

20. Chandaeshwara Nayanar || சண்டேசுவர நாயனார் - YouTube

சோழநாட்டில் உள்ள திருச்சேய்ஞலூர் என்னும் ஊரில் எச்சதத்தன் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவி பெயர் பவித்திரை. இவ்விருவரின் புதல்வரே விசாரசருமா. சண்டேசுவருடைய இயற்பெயர் விசாரசருமா என்பதாகும்.

விசாரசருமா சிறுவயதிலேயே மறைநூல்கள் கற்பதில் சிறந்து விளங்கினான். அத்தோடு இறைவனை எண்ணி வாழும் பேரன்பு மிக்கவனாகவும் விளங்கினான். ஒருசமயம் விசாரசருமா நண்பர்களுடன் மண்ணியாற்றங் கரைக்குச் சென்றார்.அப்போது மண்ணியாற்றங்கரையில் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பசுக்களை அடிப்பதை பார்த்து கண் கலங்கினார்.

இனி அந்த பசுக்களை தானே மேய்க்கப்போவதாகவும் இனி அப்பசுக்களை அடிக்க வேண்டாம் எனவும் கூறினார்.




 

ஊர் மக்களும் ஒப்புக் கொள்ளவும் விசாரசருமா கால்நடைகளை மேய்க்கும் பணியை மேற்கொண்டார்.விசாரசர்மரின் அன்பினால் பசுக்கள் பால் கறக்கும் முன்னரே தாமாகவே நிலத்தில் பால் சொறிய ஆரம்பித்தன.அதனைக்கண்ட விசாரசர்மர் நிலந்தனில் வீணாகும் பாலினை இறைவனுக்கு சமர்பனம் செய்ய சித்தம் கொண்டார்.

20. Chandaeshwara Nayanar || சண்டேசுவர நாயனார் - YouTube

எனவே தாமே மணலில் சிவலிங்கம் ஒன்றை நிர்மானம் செய்தார். அனைத்து பசுக்களும் சொறியும் பாலை மண்பாண்டத்தில் சேமித்துவைத்து மணல் லிங்கத்திற்கு பால் பொழிந்து நீராட்டி பாமாலை சாற்றி வழிபட்டார்.

இச்செயலை கண்ட ஒரு மூடன் ஊருக்குள் சென்று பசுக்களின் பாலை கறந்து விசாரசருமன் மண்ணில் ஊற்றி வீணாக்குகிறான் என்று கூறுகிறான். இதனைக்கேட்ட பசுக்களின் உரிமையாளர்கள் விசாரசருமரின் தந்தையிடம் முறையிடுகின்றனர். அவரது தந்தையும் மகனே பசும்பாலை கறந்து மண்ணில் வீணாக்க வேண்டாம் என்கிறார். விசாரசருமரும் அப்படியே ஆகட்டும் தந்தையே அடியேன் பசும்பாலை கறந்து வீணாக்கமாட்டேன் என்கிறார். அவர் எங்கே பாலை கறந்தார்.சுறந்ததை அல்லவா பாத்திரத்தில் சேமித்து வந்தார்.




 

 

மறுநாள் பசுக்களின் சுறந்தபாலை மண்பானையில் சேமித்து பூசனையில் அமர்கிறார். சிவமந்திரத்தை மனதில் சிந்தித்து சிவனுடன் ஒன்றுகிறார். அச்சமயம் அவரது தந்தை அவ்விடம் வந்து சேர்கிறார். மகனை பிரம்பால் அடிக்கின்றார்.மகன் சிவசிந்தனை கலையவில்லை. மண்பானையில் இருந்த பசும்பாலை தம் கால்களால் உதைத்து பசும்பாலை நிலத்தில் ஓடவிடுகிறார். இதில் சிவசிந்தனை கலைந்த விசாரசருமர் ஒரு சிறு குச்சியை எடுத்து தன் தந்தை பாதத்தின்மீது வீசுகிறார். அக்குச்சி மழு எனும் ஆயுதமாக மாற்றமடைந்து தந்தையின் இரு பாதங்களையும் துண்டிக்கின்றது.

அக்கணம் இறைவனும் இறைவியும் விடைமீது வந்தருளி விசாரசருமரின் தந்தையை சிவபுரம் சாரவைக்கிறார். சுந்தரரின் தந்தையின் மிக சிறந்த ஞானத்திற்கு பரிசாக சடையனாரை அறுபத்துமுன்று நாயன்மார்களில் ஒருவராக அருள்புரிகிறார். ஆனால் விசாரசருமரின் தந்தை அப்பெரும் ஞானத்தையும் புண்ணியத்தை பெற்றவரில்லை.




பின்னர் இறைவன் விசாரசருமரின் பக்தியையும் தவறுக்கு தண்டனை அளிக்கும் விதத்தையும் பாராட்டி தம் ஆலய நிர்வாகம் மற்றும் வந்துசெல்வோர் செய்யும் செயல்கள் அவர்களது நியாயமான கோரிக்கைகள் ஆகியவற்றை நிறைவேற்றும் உரிமையையும் அளிக்கின்றார். சண்டேசுவரர் எனும் பட்டத்தையும் வழங்குகிறார். அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் ஒருவராகும் அருளையும் தந்தருள்கிறார். அதோடு மட்டுமன்றி சிவபெருமான் தாம் சூடியிருந்த கொன்றை மாலையை சண்டேசுவரருக்கு அணிவித்து சிறப்பிக்கிறார்.சிவாலயத்தில் நம் நியாயமான கோரிக்கையை சண்டேசுவரரிடம் மட்டுமே அமைதியான முறையில் வைக்கவேண்டும். இறைவனோடு இருபத்துநான்கு மணிநேர நேரடி தொடர்பில் இருப்பவர் இவர் மட்டுமே. எனவே சிவாலயம் செல்வோர் நந்தியெம்பெருமான் செவிகளில் ஓதி தொல்லை செய்யகூடாது. இறைவன் திருவடிபேறு ஒன்றை மட்டுமே சண்டேசுவரரிடம் வேண்டுவது மிகவும் சிறப்பு. மறுமையில் சிவபுரம் அடைய அந்த அருளே வழிகாட்டியாகவும் துணையாகவும் வரும். சிவபுராணமும் அத்தகைய வழிகாட்டியே.சிவாயநம.

சண்டேசுவர நாயனார் திருவடிகள் போற்றி

அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!