Cinema Entertainment

சக நடிகரால் தியேட்டரில் சந்தித்த சங்கடம்… ஆண்டுகள் கடந்து வந்த எம்.ஜி.ஆர்

வறுமையின் காரணமாக 7 வயதில் நாடக நடிகராக நடித்து அதன்பின் சினிமாவில் நடிகராக உயர்ந்தவர் எம்.ஜி.ஆர். 30 வருடங்களுக்கு மேல் நாடக நடிகராக இருந்தாலும் இடையில் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த வந்த எம்.ஜி.ஆருக்கு ஹீரோ வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை என்று சொல்வதை விட அவரை துணை நடிகராக கூட ஏற்றுக்கொள்ள அப்போதைய ஹீரோக்களுக்கு மனமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.




எம்.ஜி.ஆர் படங்கள்: பரபரப்பு தீர்ப்பு! | High Court's verdict on MGR home production case!, எம்.ஜி.ஆர் படங்கள்: பரபரப்பு தீர்ப்பு! - Tamil Filmibeat

நாடகத்தில் நடித்ததால் கிடைத்த அனுபவத்தை சினிமாவில் பயன்படுத்திய எம்.ஜி.ஆர் அப்போதைய ஹீரோக்களை விட நன்றாக வாள் வீசும் திறன் இருந்ததால், சண்டைக்காட்சிகள் என்று வரும்போது இயக்குனரிடம் சொல்லி இவரை மட்டம் தட்டும் வேலைகள் கூட நடந்துள்ளது. இந்த மாதிரியான சிரமங்கள் வந்தாலும் தனக்கான நாள் வரும் என்று காத்திருந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் ஹீரோவாக உயர்ந்தார்.




அப்போதும் இவருடன் நடிக்க பல நடிகைகள் தயங்கியதாகவும், ஒருமுறை படத்தின் பாதியிலேயே நாயகியாக நடித்து வந்த நடிகையின் கணவர் அவரை படப்பிடிப்பின் பாதியிலேயே இழுந்த சென்ற சம்பவங்கள் கூட நடந்துள்ளது. ஆனாலும் பொறுமையாக இருந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர் என்பது பலருக்கும் தெரியும். அதேபோல் இவர் துணை நடிகராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இவர் நாயகனாக மாறியபோது ரிப்பீட் ஆன சுவாரஸ்யம் கூட நடந்துள்ளது.

1936-ம் ஆண்டு சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமாக எம்.ஜி.ஆர் அதே ஆண்டு வெளியான இரு சகோதரர்கள் என்ற படத்தில் துணை கேரக்டரில் நடித்திருந்தார். கே.பி.கேசவன் (கே.பி.கே) என்பவர் இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சென்னையில் ஒரு தியேட்டரில் படம் பார்ப்பதற்காக கே.பி.கே – எம்.ஜி.ஆர் இருவரும் சென்றுள்ளனர்.




அப்போது கே.பி.கே-வை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் படம் முடிந்து வெளியில் வரும்போது அவரை சூழ்ந்துகொண்டு ஆராவாரம் செய்துள்ளனர். ஆனால் அருகில் இருந்த எம்.ஜி.ஆரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், எம்.ஜி.ஆர் கே.பி.கே.வை பத்திரமாக தியேட்டருக்கு வெளியில் அழைத்து வந்துள்ளார். அதன்பிறகு இருவரும் காரில் ஏறி புறப்பட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து படங்களில் துணை கேரக்டரில் நடித்து பிரபலமான எம்.ஜி.ஆர் 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். அதன்பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்த எம்.ஜி.ஆர் நடிப்பில் 1951-ம் ஆண்டு மர்மயோகி திரைப்படம் வெளியானது. கே.ராம்நாத் இயக்கிய இந்த படத்தில், எம்.ஜி.ஆர் அஞ்சலி தேவி, மாதுரி தேவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.




இந்த படம் வெளியானபோது சென்னையின் பிரபல திரையரங்கில் எம்.ஜி.ஆர் அதே தனது முதல் பட நாயகன் கே.பி.கே.வுடன் படம் பார்க்க சென்றுள்ளார். அதே மாதிரி இடைவேளை நேரத்தில் எம்.ஜி.ஆரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், படம் முடிந்தவுடன் அவரை சூழ்ந்துகொண்டு ஆராவாரம் செய்துள்ளனர். அப்போது கே.பி.கே-வை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர் எம்.ஜி.ஆரை தியேட்டரில் இருந்து வெளியே அழைத்து வந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றுள்ளனர்.

தன்னை கண்டுகொள்ளாத ரசிகர்கள் மத்தியில், தனது அயராது உழைப்பினால், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர் இன்று இல்லை என்றாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்னும் அப்படியே தான் உள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!