Beauty Tips

கருமை படிந்த தொடைகளை பளிச்சென மாற்றலாம்

முகம், கை, கால்கள் எல்லாம் பளிச்சென்று அழகாக இருக்கும். ஆனால், தொடை மற்றும் தொடை இடுக்குகளில் மட்டும் கருமை படிந்திருக்கும். ஏன்? என்ன காரணங்கள்? தீர்வு என்ன? வீட்டு வைத்திய முறைகளிலே தீர்வு இருப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து பின்பற்றினால் விரைவில் பலன் தெரியும்.




தொடையின் உள்பகுதியில் கருப்பு படிந்திருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஹார்மோனல் பாதிப்பு, சூரிய வெளிச்சம், இரண்டு தொடைகளுக்குமான உராய்வு, இறுக்கமான உடை அணிதல், வியர்த்துப் போகுதல், மருந்துகளை உட்கொள்ளுதல், ஷேவ் செய்வது, வாக்ஸிங் போன்ற பல காரணங்களால் தொடை இடுக்குகளில் கருப்பு படிந்திருக்கும்.தொடையை மறைப்பது மட்டுமே இதற்கான தீர்வாக முடியாது. சில வீட்டு வைத்திய முறைகளை முயற்சி செய்து பாருங்கள்.




Dark Inner Thighs Remedy,கருப்பா இருக்கிற தொடையை கலரா மாத்த உதவும் 5 பொருள், நிச்சயம் பலனுண்டு! - best remedies to get rid of dark inner thighs in tamil - Samayam Tamil

டிப்ஸ்:1

ஆரஞ்சு தோல்

  • ஆரஞ்சு தோலை சேகரித்து வைத்து, அதை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • சருமத்துக்கு சிறந்த பிளீச்சிங் எஃபெக்டை தரும்.

  • தேவையான அளவு ஆரஞ்சு தோல் பவுடரை எடுத்து, சிறிதளவு தேனுடன் கலந்து தொடையில் தடவுங்கள்.

  • 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

  • வாரம் 2-3 முறையாவது இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.




கால் தொடை இடுக்கில் பரவும் கருமையை சிரமமே இல்லாமல் எப்படி நீக்கலாம்? இதற்குப் போய் ஹாஸ்பிட்டல் போகணுமாக்கும்? இந்த சமையலறை பொருளே போதும்!

டிப்ஸ்:2

பாதாம் எண்ணெய்

  • ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து தொடைப் பகுதியில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.

  • 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.




டிப்ஸ் 3:

கிளிசரின்

    • ஒரு டேபிள் ஸ்பூன் கிளிசரின், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து தொடைப் பகுதியில் இரவில் தடவி மறுநாள் காலையில் கழுவலாம்.

    • பலன் நிச்சயம்.




டிப்ஸ் 4 :

தேங்காய் எண்ணெய்

    • இயற்கையான மாய்ஸ்சரைசர் இது.

    • அனைத்து சருமத்துக்கு இந்த சிகிச்சை பொருந்தும்.

    • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தொடைப் பகுதியில் தடவுங்கள்.

    • 20 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் கழுவி விடுங்கள்.

    • ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த சிகிச்சையை செய்யலாம்.




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!