Beauty Tips

இயற்கையான முறையில் தேவையற்ற முடிகளை நீக்கும் முறைகள்…

தேவையற்ற முடியை நீக்க பெண்கள் சிரமப்படுகின்றனர். முன்பெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்தது. ஆதலால் இயற்கையாகவே கால், கைகளில் அதிக முடி வளர்ச்சி பெண்களுக்கு இருக்காது. இதனால் வாக்சிங் செய்ய அவசியம் இல்லை. ஆனால், வாக்சிங் செய்ய வேண்டிய அவசியத்துக்கு தற்போது அதிகம் தள்ளப்படுகின்றனர். காரணம் சில பெண்களுக்கு ஹார்மோன்களின் பிரச்னையால் முகத்தில் மீசை, தாடி வளர்கிறது. வலி இல்லாமல் இயற்கையான முறையில் முடிகளை நீக்க முடியுமா? இயற்கை முறையில் இதற்குத் தீர்வு இருக்கிறது. கை, கால், அக்குள், பிறப்புறுப்பு பகுதிகளில் முடிகள் இருப்பது இயல்பான விஷயம். இது ஆரோக்கியமற்றது எனச் சொல்ல முடியாது.




தேவையற்ற முடிகள் வளர முக்கிய காரணம், ஹார்மோன் மாற்றங்கள். சோற்று கற்றாழையை கருப்பட்டி சேர்த்து சாப்பிட அல்லது ஜூஸாக குடிக்க மாதவிலக்கு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் நீங்கும். ஹார்மோன் சமநிலையின்மை சீராகும். தேவையற்ற முடிகள் வளராது.




மீசை போல் அசிங்கமான உதட்டின் மேலுள்ள, முடியை ஒரே வாரத்தில் நீக்க வேண்டுமா?|health tips in tamil/MMD - YouTube

தேவையற்ற முடியை நீக்கும் குளியல் பொடி

  • பச்சைப்பயறு – 250 கிராம்

  • கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்

  • வெட்டி வேர் – 100 கிராம்

  • விலாமிச்சை வேர் – 100 கிராம்

  • சீமை கிச்சலி கிழங்கு – 100 கிராம்

  • கோரை கிழங்கு – 100 கிராம்

இவற்றை பொடித்து வைத்து குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். அல்லது தேவையான இடங்களில் பேக் போல போட்டு,அரை மணி நேரம் கழித்து கழுவலாம். இதைத் தினமும் செய்யலாம். 6 மாதத்தில் ரிசல்ட் தெரிய தொடங்கும். முடியின் வளர்ச்சி குறைந்திருக்கும். சில முடிகளும் உதிரும். ரெடிமேடாக கடையில் பவுடராக விற்பதை வாங்க வேண்டாம். தரமாக இல்லையெனில் பலன் அளிக்காது. நீங்கள் பொருட்களை வாங்கி அரைத்துப் பயன்படுத்துவதே நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!