Samayalarai

கேரளா அவியல் செய்யலாமா?

கேரளாவின் பாரம்பரிய உணவான அவியல் ரெசிப்பியை இனி நீங்களும் உங்கள் வீட்டிலேயே செய்யலாம். அவியல் என்பது பல காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். இதில் சேர்க்கப்படும் தேங்காய், தயிர், தேங்காய் எண்ணெய் ஆகியவை அவியலுக்கு தனித்துவமான மனத்தையும், சுவையையும் கொடுக்கிறது. இதில் சிலர் புளிப்பு சுவைக்காக மாங்காய் சேர்ப்பார்கள். ஆனால் கேரளா பாரம்பரிய முறைப்படி தயிர் சேர்ப்பதுதான் சிறந்தது.




தேவையான பொருட்கள்: 

  • கலவையான காய்கறி 2 கப்

  • கறிவேப்பிலை சிறிதளவு

  • பச்சை மிளகாய் 2

  • தயிர் 1/4 கப்

  • கடுகு 1/2 ஸ்பூன்

  • மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்

  • தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

  • சீரகம் 1/2 ஸ்பூன்

  • தேங்காய் துருவல் 1/2 கப்




கேரளா அவியல் செய்முறை:

  • முதலில் சிறு துண்டுகளாக நறுக்கிய காய்கறியுடன் தண்ணீர், மஞ்சள், உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். 10  நிமிடங்களில் காய்கறிகள் நன்றாக வெந்துவிடும். எப்போதும் காய்கறிகளை வேக வைக்க சரியான அளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும். அதிகமாக பயன்படுத்தினால் காய்கறிகள் வெந்து குழைந்துவிடும்.

  • காய்கறி வகைகளில் சில காய்கறிகள் வேக நேரம் அதிகமாகத் தேவைப்படும். அதுபோன்ற காய்கறிகளை முதலில் சேர்த்து பின்பு விரைவாக வேகக் கூடிய காய்கறிகளை சிறிது நேரம் கழித்து சேர்த்து வேக வைக்கலாம். இப்படி செய்தால் காய்கறிகள் குறையாமல் எல்லாம் ஒரே பதத்தில் நன்கு வேகும்.




  • அடுத்ததாக ஒரு மிக்ஸியில் சீரகம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இவற்றை அரைக்கும்போது குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  • வெந்த காய்கறியுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து தண்ணீர் நன்றாக வற்றும் வரை சமைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து, தயிர் சேர்த்து நன்கு கிளறவும்.

  • நீங்கள் கேரளா ஸ்டைலில் சமைக்க விரும்பினால், அவியலைத் தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் சுவை நன்றாக இருக்கும். தேங்காய் எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்தெடுத்து அவியலில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்டைல் அவியல் தயார். இதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் விரும்பியபடி செய்து சாப்பிடலாம். சாம்பார், ரசம் போன்ற உணவுகளுக்கு இதை சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் வேற லெவலில் இருக்கும்.




வீட்டு குறிப்பு:

தயிர் சாதத்திற்கு அருமையான மாவடு | mavaduA Great Performing Laundry Detergent for White Clothes | Cleanipedia ZA

  • மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.

  •  வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

  •  முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!