Samayalarai

அவல் மசாலா சப்பாத்தி

அவலை வைத்து எப்போதும் உப்புமா செய்து போர் அடித்து விட்டதா? இதனை வைத்து  புது விதமான ரெசிபியை இன்றைய பதிவில் காணலாம். இவை  காலை உணவிற்கு ஏற்றவை. ஆரோக்கியமான இந்த  ரெசிபியை  குறைந்த நேரத்திலேயே செய்து முடித்திடலாம்.

அவல் எளிதில் ஜீரணமாகும். இது இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அவலில் கலோரிகள் குறைவாகவும் இரும்புச்சத்து நிறைவாகவும் உள்ளன. இந்த ரெசிபி செய்வதற்கு எந்த வகையான அவலையும் பயன்படுத்தலாம். இன்று அவலை வைத்து புது விதமான மசாலா சப்பாத்தி செய்ய கற்றுக் கொள்வோம்.




Soft Masala Chapati Recipe/ Masala Chapathi - YouTube

தேவையான பொருட்கள்

  • அவல் – 1 கப்

  • கோதுமை மாவு – 1/2

  • வேகவைத்த உருளைக்கிழங்கு – 2

  • இஞ்சி பூண்டு விழுது

  • மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்

  • மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை

  • சீரகப்பொடி – ½ டீஸ்பூன்

  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

  • பச்சை மிளகாய் – 1

  • தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

  • துருவிய கேரட் – ½ கப்

  • ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

  • உப்பு – தேவையான அளவு

  • தண்ணீர் – தேவையான அளவு




செய்முறை விளக்கம்

  • ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, சீரகப்பொடி மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்.

  • இதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

  • தண்ணீர் கொதிக்கும் பொழுது பொடித்து வைத்துள்ள அவல் சேர்த்து கிளறவும். இது கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.

  • அவல் கலவையுடன் துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலைகள், தேவையான அளவு உப்பு மற்றும் கோதுமை மாவு சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

  • இதனை சப்பாத்திகளாக திரட்டி, தோசை கல்லில் நன்கு திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு பரிமாறலாம்.

  • இந்த ரெசிபியை  நீங்களும் உங்கள் வீட்டில் செய்து ருசித்து மகிழுங்கள்!




வீட்டு குறிப்பு

 

இஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...!

  • அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

Health benefits of lemon peels or zest and how to store it | HealthShots

  •  இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.

  •  காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!