gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (02.8.23)

சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.05 மணி வரை பௌர்ணமி. பின்பு இரவு 10.41 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று மாலை 03.27 மணி வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.புனர்பூசம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

தாமதமான காரியத்தை தடாலடியாக நடத்துவீர்கள். அரசாங்க வேலைக்கு அப்ளிகேஷன் போடுவீர்கள். சகோதர சகோதரிகளின் தொந்தரவால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப்படுவீர்கள். மனைவியின் மனதிற்கு ஏற்ற வகையில் நடந்து கொள்வீர்கள். இடையூறுகளைத் தாண்டி வியாபாரத்தை நல்ல முறையில் நடத்தி வருமானத்தை அதிகரிப்பீர்கள். இன்று நரசிம்மரை வழிபட நலன்கள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

துணிவோடு தொழிலை நடத்தி போட்டியாளர்களை பொறாமைப்பட வைப்பீர்கள். பழுதான மின்சார சாதனங்களை ரிப்பேர் செய்வீர்கள். வியாபாரத்திற்காக வங்கியில் இருந்து பணம் பெறுவீர்கள். பிரிந்து போன உறவுகளை தேடிப்பிடித்து சமாதானப்படுத்துவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் செல்வீர்கள். இன்று விநாயகரை வழிபட மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

மிதுன ராசி அன்பர்களே!

வெட்டித்தனமாக பேசி வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். பிறந்த வீட்டுக்கு கோபத்தில் சென்ற மனைவியை சமாதானப்படுத்தி கூட்டி வருவீர்கள். தந்தையாரின் மூட்டு வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பீர்கள். வண்டி வாகனங்களை செல்போன் பேசிக்கொண்டே ஓட்டாதீர்கள். சகோதர சகோதரிகளின் புரிந்து கொள்ளாத நிலையால் வேதனைப்படுவீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கடக ராசி அன்பர்களே!

நீண்ட நாள் பகையை விலக்கி உறவுகளை பலப்படுத்துவீர்கள். சாதுர்யமாகப் பேசி மனைவியைச் சமாளிப்பீர்கள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். போட்டி பந்தயங்களில் சாதகமான நிலையை அடைவீர்கள். தக்க நேரத்தில் கிடைக்கும் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் வெற்றி நடை போடுவீர்கள். மகாலட்சுமியை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் இழுபறியானாலும் முடிந்துவிடும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே!

ஒதுங்கி போனாலும் உறவுகளின் தொல்லைக்கு ஆளாவீர்கள். மனத்திண்மையால் அதை முறியடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற கடினமாக உழைப்பீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். கொடுத்த கடனை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குவீர்கள். வியாபாரம் சற்று மந்த நிலையை காண்பீர்கள்.இன்று முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

ஏதோ ஒரு மனக் கவலையால் இரவில் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். வியாபாரத்தில் இடையூறுகளை சந்திப்பீர்கள். தொழிலில் முன்னேறி மரியாதையை அதிகரிப்பீர்கள். காதலிக்கு பட்டுச்சேலை வாங்கி பரிசளிப்பீர்கள். முக்கிய வேலை காரணமாக வெளியூர் செல்வீர்கள். வியாபாரத்திற்கான பற்றாக்குறையை தவிர்க்க நண்பரிடம் உதவி பெறுவீர்கள்.இன்று அம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.

துலா ராசி அன்பர்களே!

மடை கடந்த வெள்ளம் போல் பலவகையில் வருமானம் பெறுவீர்கள். வாகனங்களுக்கு வாங்கியிருந்த கடன்களை அடைப்பீர்கள். பூர்வீகச் சொத்தை அடைய தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள். உறவினர் பிரச்சனையை சாதுரியமாக பேசி தீர்த்து வைப்பீர்கள். தோட்டப் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தென்னந்தோப்பை சீர்படுத்துவீர்கள்.இன்று மகாவிஷ்ணுவை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

பழைய நண்பர்களின் வருகையால் மனம் குதூகலித்து மகிழ்வீர்கள். மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்குவீர்கள். திருமண பேச்சு வார்த்தைகளை சிறப்பாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்தியை புகுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். தொழிலாளர்களின் முழு ஒத்துழைப்பை பெறுவீர்கள். விநாயகரை வழிபடுவது நலம் தரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள். ஏழை எளியோருக்கு உதவுவீர்கள். வெளி வட்டாரங்களில் உங்களின் புகழை அதிகரிப்பீர்கள். எதிர்ப்புகளை இருந்த இடம் தெரியாமல் விரட்டுவீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் தொழிற்சாலையில் லாபத்தை அதிகரிப்பீர்கள். விடாமுயற்சியால் வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவீர்கள். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

வாகனங்கள் பழுதாகி குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். மனைவி மக்களின் ஆசையை நிறைவேற்ற ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். கடன் வாங்கி சில அத்தியாவசிய காரியங்களைச் செய்ய நினைப்பீர்கள். வேலை இடங்களில் பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். வியாபாரம் சுமாராக நடக்கும். அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டுவீர்கள்.பைரவரை வழிபட இடையூறுகள் அகலும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

வாகனங்களில் போகும்போது அலட்சியம் காட்டாதீர்கள். மோட்டார் சைக்கிளில் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல மறக்காதீர்கள். ஞாபக மறதியால் நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். எந்த இடத்தில் எதை வைக்கிறோம் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டால் தடுமாற்றம் அடைய மாட்டீர்கள். என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் திட்டமிட்டு வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.இன்று அம்பிகை வழிபாடு நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீனராசி அன்பர்களே!

பங்குச்சந்தையில் முதலீடு செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை நல்ல முறையில் நடத்துவீர்கள். வாங்கிப்போட்ட நிலத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடிந்து சந்தோசப்படுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி பெறுவீர்கள். வேலை இடங்களில் மரியாதையை உயர்த்துவீர்கள். இன்று ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!