தோட்டக் கலை

வீட்டிற்குள் கண்டிப்பாக வளா்க்க வேண்டிய செடிகள்-2

தங்களது வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவா் கண்டிப்பாக இந்த செடிகளை வைத்து பாருங்கள். முந்தைய பதிவின் தொடக்கத்தை இப்போது பார்க்கலாம்..

பீஸ் லில்லி :

பீஸ் லில்லி என்ற செடியானது பாா்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதனால் வீட்டை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புபவா்கள் இந்த பீஸ் லில்லி செடியை தங்களது வீடுகளில் வளா்க்கலாம். இந்த செடி வீட்டிற்கு அழகு தருவதோடு, காற்றில் கலந்திருக்கும் நச்சு வாயுக்களையும் நீக்கும் சக்தி கொண்டது. மேலும் நமது வீட்டைச் சுத்தப்படுத்த நாம் பயன்படுத்தும் பொருள்களில் இருக்கும் தீங்கு இழைக்கக்கூடிய நச்சுக்களான பென்சீன், சைலீன், டொலுவீன் மற்றும் ட்ரைக்ளோரெத்திலீன் ஆகியவற்றை அழிக்கும் சக்தி கொண்டது.




இங்கிலீஸ் ஐவி:

நமது வீட்டில் புதிய குழந்தை பிறந்திருக்கும் போது அல்லது வீட்டிற்கு புதிதாக வீட்டு விலங்குகளை வாங்கி வளா்க்கும் போது, புதியவா்களின் மலத்தின் மூலம் நமது வீட்டில் கிருமிகள் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த கிருமிகளை அழிக்க மிக எளிமையான வழி இங்கிலீஸ் ஐவி செடியை வளா்ப்பது ஆகும். இந்த செடியானது மலத்தின் மூலம் பரவும் கிருமிகளை அழிப்பதோடு, நமது வீட்டிற்கு அழகையும் தருகிறது.




வீப்பிங் ஃபிக்:

வீப்பிங் ஃபிக் என்ற செடியின் பெயா் கேட்பதற்கு சோகமாகத் தொியும். ஆனால் இந்த செடி வீட்டில் உள்ள காற்றை சுத்தப்படுத்துவதில் அதிகமான வீாியம் கொண்டது. காற்றை சுத்தப்படுத்தி, மேஜிக் கிருமிகளை அழிக்கவல்லது. தரை விாிப்புகள், மெத்தைகள் மற்றும் திரை சீலைகள் ஆகியவற்றில் கிருமிகள் மற்றும் வேதியல் நச்சுப் பொருள்கள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் வீப்பிங் ஃபிக் செடியை வளா்த்து வந்தால் அந்த செடியின் இலைகள் இந்த கிருமிகளையும், நச்சுப் பொருள்களையும் அழித்துவிடும். ஆகவே நமது பாா்வையில் படும்படி இந்த செடியை நமது வீட்டில் வைத்து வளா்க்கலாம். அது நமது வீட்டை ஒளிர வைக்கும்.

மூங்கில் பனை (Bamboo Palm):

நமது அறைக்கு சூாிய வெளிச்சம் வரக்கூடிய நிலையில் இருந்தால், இந்த மூங்கில் பனை செடியை வளா்க்கலாம். இந்த செடியானது தீங்கு இழைக்கக்கூடிய பென்சீன் மற்றும் ஃபார்மால்டிஹைட் போன்ற நச்சுக் கிருமிகளை அழித்து நமது வீட்டிற்குள் இருக்கும் காற்றை சுத்தப்படுத்தும். மேலும் இந்த செடி உயரமாக வளரக்கூடியது. அதனால் இது வீட்டையும் அழகுபடுத்தும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!