Beauty Tips

“முழங்கால் முழி கருமை போக..!” – இத ட்ரை பண்ணுங்க..!

உடலின் சில பகுதிகள் கருப்பாக மாறும். அதிலும் முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் கழுத்து பகுதிகள் எளிதில் கருத்து போகும். தனி கவனம் எடுத்து இந்த பகுதிகளைப் பராமரிக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இல்லையெனில், அவற்றின் நிறம் இன்னும் கருமையாகி விடும். அந்த பகுதிகளைச் சுத்தமாக மற்றும் பளபளப்பாக வைத்திருக்க ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம்.

பெரும்பாலான இயற்கை பொருட்கள் சருமத்திற்கு நல்லவை. ஆனால் அவை சரும வகைக்கு ஏற்ப மாறுப்பட்டு செயல்படுகின்றன. மார்க்கெட்டில் விற்கப்படும் சில பொருட்கள் சருமத்திற்குக் கடுமையானவை. அதனால் தான் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எனவே, இன்று இந்த பதிவில் வீட்டிலேயே ஸ்க்ரப் செய்வது எப்படி? என்பதை உங்களுக்கு சொல்ல போகிறோம். அத்துடன் கை மற்றும் கால்களின் முட்டி பகுதி கருமையாக மாறுவதற்கான காரணம் மற்றும் அதை சரிசெய்யும் முறைகள் குறித்தும் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் – 3-4 டீஸ்பூன்

  • எள்ளு – சிறிதளவு

  • ஆலிவ் ஆயில் – 1-2 டீஸ்பூன்

  • மஞ்சள்-1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் தேங்காய் எண்ணெய்யுடன்,மஞ்சள்  ஆலிவ் ஆயில் மற்றும் எள்ளு சேர்க்கவும். இவற்றை நன்கு கலந்து பேஸ்ட் போல் தயார் செய்யவும். இப்போது வீட்டிலேயே தயாரித்த பேக் தயார்.




பயன்படுத்தும் முறை

  • இந்த பேக்கை கை மற்றும் காலின் முட்டி பகுதியில் தடவவும்.

  • பின்பு அந்த பகுதியை நன்கு தேய்க்கவும். இதனால் அது சருமத்தில் உறிஞ்சப்படும்.

  • இப்போது வெதுவெதுப்பான நீரில் பேக்கை சுத்தம் செய்யவும்.




  • சருமத்திற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

  • கை மற்றும் கால் பகுதிகள் வறண்டு இருந்தால் நீங்கள் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயில் வறட்சியை குறைக்க உதவும்.

  • ஆலிவ் ஆயிலை சருமத்தில் தடவுவதன் மூலம் சரும பாதிப்புகளைத் தடுக்கலாம். இது எண்ணெய் தடுப்பானாக செயல்பட்டு சருமத்தைப் பாதுக்காக்கும்.

  • வாரத்தில் 4 நாட்கள் தடவினால் கருமை நீங்கி பழைய நிறம் பெறலாம்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!