தோட்டக் கலை

பூசணிக்காய் வளர்க்கலாம்!

பூசணிகாய், பலூன் மாதிரி தான், தினமும் ஒரு வளர்ச்சி. பிஞ்சி பிடித்து இரண்டு வாரத்தில் காய் பறிக்கும் அளவுக்கு வந்து விடும். முற்றிவிட கூடாது என்பதால் கொஞ்சம் சீக்கிரமே பறித்து விடுங்கள்.

தோட்டத்தை புழுதிபட உழவு செய்யவேண்டும். ஆறு அடி அகலத்தில் நீளமாக மேட்டுப்பாத்தி அமைத்து, பாத்திகளுக்கு இடையில் இரண்டு அடி அகல வாய்க்கால் விடவேண்டும். வாய்க்காலில் விதையை ஊன்றினால், ஈரமாகாத மேட்டுப்பாத்தியில் கொடிகள் படரும்.




ஏழிலிருந்து ஒன்பது நாளில் விதை முளைத்து, இலைகள் துளிர்த்து விடும். ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

சாதாரணமாக, வறண்ட காலங்களில் வாரம் இருமுறையும், மற்ற காலங்களில் வாரம் ஒரு முறையும் பாசனம் செய்யலாம். சொட்டு நீர் பாசனம் அமைத்தால், தண்ணீர் செலவையும், களைகளையும் குறைக்க முடியும்.

குழிகளில் களைகள் இல்லாமல் பராமரிப்பது மிக முக்கியம். மூன்றாவது வாரத்தில் கொடி படரத்தொடங்கும் போது முதல் களையும், 40-ம் நாள் இரண்டாம் களையும் எடுக்க வேண்டும்.




பழ ஈக்களை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 3.0 சதவீதம் இலைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

நன்கு பழுத்த பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!