Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள்-10

 10

என்னங்க ராகவன் வர்றான்னு அக்கா லட்டர் போட்டு இருக்கா, சீக்கிரம் இந்த வீட்டைக் கொஞ்சம் சீர் படுத்தணும் தச்சரை வரச்சொல்லுங்க ஜன்னலுக்கு கொசுவலைபோட்டு ஸ்கீரின் போடணும். அப்பறம் அந்த சின்னரூமை அவனுக்கு ஒழிச்சி கொடுங்க, மரக்கட்டில்ல ஒரே மூட்டைப்பூச்சி தொல்லை மருந்தடிக்கணும் படுக்கை ஒண்ணு புதுசா வாங்கிப்போடணும். அப்பறம்

ஏன் லட்சுமி நேத்து தூர்தர்ஷனில் எதிர்நீச்சல் படம் போட்டானே பார்த்தியா ? அதிலே வர்ற செளகார் ஜானகி மாதிரியே மூச்சு விடாம பேசறே ? அசப்பில அவங்களை மாதிரிதான் இருக்கே ?!

போதுமே உங்க வழிசல் போய் வேலையைப் பாருங்க அமெரிக்காலே இருந்து வர்றான் ராகவன் அதிலும் ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கறேன்னு சொன்ன எங்க அக்கா கிட்டே கூட வேண்டாம் நான் சித்தி வீட்டிலேயே தங்கிக்கிறேன்னு சொல்லியிருக்கிறான் இருக்கிறதுலேயே அந்த சுதாவுக்கு தான் போர்ஷன் பெரிசு நம்ம வீட்டுலே எலி வலை மாதிரி நானே அவனை எப்படி திருப்தி படுத்தறதுன்னு கிடக்கறேன் நீங்கவேற நக்கல் பேசிட்டு….!

லட்சுமி நமக்கு கல்யாணமாகி என்ன ஒரு எட்டு வருஷம் இருக்குமா இரண்டு பிள்ளைங்க சுத்திலும் மனுஷங்கன்னு உன்கூட பேசறதக்கே நேரத்தைக் காணும். இப்போ ஒரு வயசுப் பையனையும் வச்சிக்கிட்டு நாம எப்படி ?

லட்சுமி திரும்பிப்பார்த்து முறைத்தாள் என்ன இளமை ஊஞ்சலாடுதோ பெத்த இரண்டுத்துக்கும் முதல்ல துளியளவேனும் சேர்த்துவைப்போம் அப்பறம் நம்ம சுகத்தை பார்த்துக்கலாம். நான் என்ன பேசறேன் நீங்க என்ன பேசறீங்க. அப்படியே அசந்து மறந்து வீட்டுக்கு வந்திட்டாலும் பொண்டாட்டி நினைப்பு உடனேவா வந்திடுது. உங்களுக்குன்னு கல்குண்டு மாதிரி தடிதடி பிரண்ட்ஸ் இருக்காங்களே அவங்களைத்தானே கட்டிட்டு அழறீங்க ? இப்ப மட்டும் எங்கிருந்து வருது இந்த கரிசனம். 

அப்படி இங்கே வந்து தங்க வேண்டிய அவசியம் என்ன ? விருதுநகர்ல இருக்கிற உங்க அக்கா வீட்டுலே இல்லாத வசதியாடி நம்மவீட்டுலே ?

முட்டாள் மாதிரி பேசாதீங்க சாரி புருஷனாச்சே இன்னும் திட்ட முடியலை




 

இப்போ நீயென்னைத் திட்டலையா ?

அய்யோ ராமா தயவுசெய்து சொன்ன வேலையைச் செய்யுங்க காரையெல்லாம் பெயர்ந்து தொங்குது அதையெல்லாம் முதல்ல சரி பண்ணுங்க, வெள்ளை அடிக்கணும் இதுக்கு முன்னாலே வீட்டுக்காரம்மாகிட்டே  ஒருவார்த்தை சொல்லிடுங்க.

ராகவன் என்னைக்கு வர்றான் வர்ற திங்கள்கிழமை இன்னும் முழுசா ஐந்து நாள் கூட இல்லை அந்த புதுவீட்டு அக்கா நல்லா சமைக்கிறாங்க கொஞ்சம் அதிரசம், லட்டு, முறுக்கு தேன்குழல் எல்லாம் செய்து தர முடியுமான்னு கேட்டுகிறேன். 

இந்தமாதிரி என்னைக்காவது என்னை கவனிச்சியிருக்கியா ? ம்….

அவன் கையகள பார்டர் போட்டு பட்டுபுடவை கொண்டு வருவான் இப்பவே நம்ம பொண்ணு பெரிய மனுஷியானா தாய்மாமன் சீர் செய்யன்னு இரட்டை வட சங்கிலி கட்டிவைச்சிருக்கா எங்க அக்கா அவ்வளவு செய்யலைன்னாலும் அதில பாதியாவது செய்யவேண்டாமா. இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் சொன்னதை செய்யுங்க. 

லட்சுமி கணவனை வாசல் வரை விரட்டும்போது இதோ சிவா வர்றான் ஏதாவது உதவி தேவைன்னா அவனைக்கேளுங்க எனக்குத் தெரிந்து உங்களைக் காட்டிலும் அவன் நல்லாவே செய்து முடிப்பான்.

விடிஞ்சா அடைஞ்சா மாமாவைத் திட்டலைன்னா உங்களுக்குத் தூக்கமே வராதுக்கா இப்போ என்ன பிரச்சனை என்கிட்டே சொல்லுங்க

நான் சொல்றேன்டா சிவா இவளோட அக்கா பையன் வர்றான் தம்பி தம்பின்னு அதை செய் இதைசெய்யுன்னு ஒரே அலட்டல் தாங்கலை, ஏதாவது பேசினா என்னைத் திட்டறா.

எங்கேயிருந்து வர்றாராம்.

அமெரிக்காவிலிருந்து………லட்சுமியின் முகத்தில் பெருமை பிடிபடவில்லை அதற்குள் பக்கத்து போர்ஷனில் இருந்து சுதாவும் அபிராமியும் எட்டிப் பார்த்தார்கள். கூடவே அலுவலகம் செல்லும் அவசரத்தோடு விஜியும். அமெரிக்கா என்றதும் அவள் காதுகள் காணாததைப் போல கூர் தீட்டிக்கொண்டது. 

இவரு கிடக்காருடா சிவா அக்கா நல்ல பெரிய இடம், அந்த பையன் வர்றான்னா கொஞ்சமாவது நம்ம மெனக்கெட்டு செய்யவேண்டாமா ? அதைச்சொன்னா ஒரே சாக்குபோக்காவே பேசறார். 

அக்கா நான் ஒண்ணு சொல்லவா பேசாம அவரை என் கூட தங்க சொல்லிடுங்கோ ஏன்னா உங்க வீட்டை விடவும் எங்க அறை பெரியது. மொட்டை மாடி வசதியும் இருக்கு இரண்டுபேருக்கும் ஒரே வயசும் கூட அவருக்கும் போர் அடிக்காது எனக்கும் உங்க வீட்டு சாப்பாடு கிடைக்கும். 

இவனொருத்தன் சாப்பாடு சாப்பாடுன்னு…

மாமா அக்காவின் சாம்பார் மணத்திற்கு இந்த காலணியே அடிமை சிவாவின் பேச்சில் லெட்சுமியின் மனம் குளிர்ந்தது. அவரை விடு சிவா நீ சொல்றதுதான் சரி ராகவன் உன் அறையிலேயே தங்கட்டும் என்று முடித்தாள்.




What’s your Reaction?
+1
9
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!