தோட்டக் கலை

நிலக்கடலை வளர்ப்பு

நிலக்கடலை பொதுவாக வேர்க்கடலை என்று அழைக்கப்படும், மக்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படும் பருப்பு வகை தாவரம் ஆகும். இதன் பூர்விகம் தென் அமெரிக்காவாகும், என்றபோதிலும் இன்று உலக அளவில் நிலக்கடலை வளர்ப்பு செய்வதில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது.

விதையிலிருந்து வேர்க்கடலை செடி வளர்ப்பு செய்வது எப்படி, மாடி தோட்டத்தில் நிலக்கடலை வளர்ப்பது எப்படி, நிலக்கடலை சாகுபடியில் உர நிர்வாகம், நிலக்கடலை ரகங்கள் மற்றும் நிலக்கடலை பயன்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

விதைநேர்த்தி

சரியான விதைகளை தேர்ந்தெடுக்கவிட்டால் நிலக்கடலை வளர்ப்பு சரிவர நடைபெறாது எனவே நேர்த்தியான விதைகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். முற்றிய நிலக்கடலையை எடுத்து அதன் ஓட்டு பகுதியை உடைத்து உள்ளிருக்கும் கடலை பருப்பை தனியே எடுத்துக்கொள்ளவேண்டும், பிறகு அந்த கடலையை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கவேண்டும். அடுத்து நாள் காலையில் ஊறவைத்த விதைகள் ஈரப்பதத்தை உறிஞ்சி நடவுக்கு தயாராக இருக்கும்.




மண்கலவை தயாரித்தல்

களிமண், மணற்பாங்கான வண்டல்மண் மற்றும் செம்மண் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை ஆகும். எந்த மண் எடுத்து கொண்டாலும் அதனுடன் மக்கிய தொழு உரத்தை கலந்து பயன்படுத்தவும். மக்கிய தொழு உரம் கிடைக்கவில்லை என்றால் தழை, இலை சருகுகளை கூட பயன்படுத்தலாம். இப்படியாக மண்கலவை தயார் செய்யவேண்டும்.

தயார் செய்து வைத்திருக்கும் மண்கலவையை நெகிழி பையில் போட்டு நிரப்பி கொள்ளவும். ஊற வைத்து தயார் நிலையில் இருக்கும் கடலையை மண்கலவையில் விதைப்பு செய்யவேண்டும், ஒரு பைக்கு அதிகபட்சமாக 4 விதைகளை வரை நடவு செய்யலாம். அரை இன்ச் ஆழம் இருந்தாலே போதுமானது, நடவு செய்த பிறகு மண்ணை போட்டு மூடி சிறிது தண்ணீர் தெளிக்கவும். இரண்டு அல்லது மூன்று நாட்களிலே நிலக்கடலை முளைத்து வர தொடங்கிவிடும். நிலக்கடலை நடவு செய்ய ஏற்ற பட்டம் ஆடி பட்டம் ஆகும்.




நிலக்கடலை அறுவடை

நிலக்கடலை சாகுபடியில் உர நிர்வாகம் சரியாக இருப்பது அவசியமாகும். மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் மற்றும் முதிர்ந்த இலைகள் எல்லாம் காய்ந்து விடுதலும் கடலை அறுவடை காலத்தைக் குறிக்கும். பெரும்பாலும் 110 நாளில் இருந்து 120 நாட்களில் அறுவடை செய்யலாம்.

பூச்சித்தாக்குதல்

நிலக்கடலை ரகங்கள் பல இருந்தாலும் அனைத்திலும் இலைப்பேன், சுருள் பூச்சி மற்றும் அசுவினி பூச்சித்தாக்குதல் அதிக அளவில் இருக்கும், இது கடலையின் வளர்ச்சியை பெருமளவு பாதிக்கும். வேப்பெண்ணை கரைசலை தொடர்ந்து 2 வாரங்கள் தெளித்து வந்தால் விரைவில் இந்த பூச்சித்தொல்லைகள் இல்லாமல் போகும்.

விவசாயிகளுக்கு நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை தனை மாடி தோட்டத்தில் எப்படி வளர்ப்பது என்று பார்த்தோம். நீங்களும் அந்த முறையில் நிலக்கடலை செடி வளர்த்து, அதன் பயன்கள் எல்லாம் பெற்று உங்கள் ஆரோக்கியம் செழித்தோங்க வாழ்த்துகிறோம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!