தோட்டக் கலை

உங்க வீட்டு தொட்டியில் ஏலக்காய் செடி வளர்க்கலாம்..! – நீங்களும் முயன்று பாருங்க..!

சமையலுக்கு வாசனை தரும் பொருட்களில் மிகப் மிக முக்கியமான பொருளாக ஏலக்காய் இடம்பெறுகிறது. இந்த ஏலக்காய் நல்ல மனம் ஊட்டும் பொருளாக இருப்பதோடு எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த பொருளாகவும் உள்ளது.

ஏலக்காயை பொருத்தவரை புரோட்டீன், கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்றவை அதிக அளவு உள்ளது. இது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. இத்தகைய நல்ல குணங்கள் படைத்த ஏலக்காயை உங்கள் வீட்டிலேயே தொட்டியில் வளர்க்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?




நிச்சயமாக நீங்கள் கீழ்காணும் முறைகளை செய்வதின் மூலம் எளிதில் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் ஏலக்காய் செடியை வளர்த்து பயனடையலாம்.

 

ஏலக்காய் செடியை வளர்க்கும் முறைகள்

  • உங்கள் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் ஏலக்காய் ஐந்து அல்லது ஆறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஏலக்காயில் உள்ள விதைகளை தனியாக எடுத்து ஒரு டம்ளரில் நீரை ஊற்றி இந்த விதையை அந்த டம்ளரில் வைத்து ஒரு நாள் முழுவதும் ஊற விடுங்கள்.

  • பிறகு மறுநாள் அந்தத் தண்ணீரை முழுமையாக வடிகட்டி விதையை தனியாக எடுத்துக்கொண்டு அதை நீங்கள் உங்கள் தொட்டியில் மண்ணை நிரப்பி இந்த விதைகளை போட்டு நீரை தெளித்து விடவும்.




  • இதன் பிறகு மீண்டும் ஓரளவு மண்ணை தொட்டியின் மேல் பகுதியில் தூவி நீரினை தெளித்து விடவும். ஒரு நாள் இடைவெளி விட்டு தொட்டிக்கு தேவையான அளவு தண்ணீரை தெளித்து வாருங்கள்.

  • இதனை நீங்கள் தொடர்ந்து செய்யும் பட்சத்தில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களில் உங்களுக்கு ஏலக்காய் செடி வளரும். இந்த செடியை வெயிலில் வைக்கக்கூடாது. ஓரளவு நிழல் இருக்கக்கூடிய பகுதியில் வைப்பதன் மூலம் செடி மிக அருமையாக வளரும்.

  • செடி அருமையாக வளரக்கூடிய நிலையில் உங்களுக்கு பலன்கள் கூடுதலாக கிடைக்கும். இந்த வழியை நீங்களும் ஃபாலோ செய்து கட்டாயம் உங்கள் வீட்டில் ஏலக்காய் செடியை பயிர் செய்து ஏலக்காயை உங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்.




நிச்சயமாக எந்த முறையை நீங்கள் முயன்று பாருங்கள். உங்கள் வீட்டிலும் ஏலக்காய் செடி வளர்ந்து ஏலக்காய் கிட்டும். வெளியே வாங்கி ஏலக்காயை பயன்படுத்துவது விட நமது வீட்டில் பயிர் செய்த ஏலக்காயிலிருந்து நாம் ஏலக்காயை எடுத்து பயன்படுத்தும்போது நமக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் கூடுதல் மணத்தை இது கொடுப்பது போல நீங்கள் உணர்வீர்கள்.




What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!