gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (20.5.23)

இன்றைய ராசிபலன் 20 மே 2023 : சந்திரன் ரிஷபத்தில் உள்ள கார்த்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இன்று ரிஷபம் உட்பட இந்த 3 ராசிக்காரர்களுக்கு மிகச் சிறந்த பலன்களைப் பெறுவார்கள்.இன்று சந்திரனின் தொடர்பு ரிஷப ராசியில் கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த நிலையில் இன்று ரிஷபம், சிம்மம், விருச்சிகம் உள்ளிட்ட பல ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசியினருக்கு இன்றைய நாள் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் பார்ப்போம்.

மேஷ ராசி அன்பர்களே!

வியாபாரத்தில் பணம் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டால் கவலை வேண்டாம். தாமதத்திற்குப் பின்னரே சரியான பலன்கள் கிடைக்கும்.உங்கள் காதல் வாழ்க்கையில் ஆறுதல் கிடைக்கும். குடும்பத்தின் சூழ்நிலை சச்சரவுகள் நிறைததாக இருக்கவும். குழந்தையின் செயல்கள் சற்று கவலையாக இருக்கலாம். மாணவர்கள் கல்வித்துறையில் வெற்றி பெறுவார்கள்.இன்று நீங்கள் பைரவரை தியானித்து வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங் கள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக அமையப் போகிறது. உங்களின் பல விருப்பங்கள் ஒரே நேரத்தில் நிறைவேறுவதால் மனதில் அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். மேலும் வேலையில் வெற்றி பெறுவீர்கள்.தந்தை மற்றும் மூத்தவர்களின் ஆசியுடன், சில மதிப்புமிக்க பொருள் அல்லது பணம் பெறுவதற்கான ஆசை இன்று நிறைவேறும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உண்டு.மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கப் பெறலாம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராதபடி பணிச்சுமை அதிகரிக்கக்கூடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.




மிதுன ராசி அன்பர்களே!

இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இனிய நிகழ்வுகளும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் அமைதி தவழும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.கடன் பிரச்சனைகளால் ஒரு சில மன வருத்தங்கள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். புதிய கடன் முயற்சிகள் சற்று தாமதமாகும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.நடராஜப்பெருமானை தியானித்து வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைத்து மகிழ்ச்சி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உற்சாகம் தரும்.

கடக ராசி அன்பர்களே!

இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும் அவர்கள் கல்விக்காக எடுக்கும். எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.இரும்புத் தொழில் தொழில் கட்டிடத் தொழில் சர்வீஸ் தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் பல நல்ல விஷயங்களை பார்ப்பர். சுபகாரியப் பேச்சுக்கள் இனிதே நிறைவேறும்.பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்கள் வருகை மற்றும் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தேடிய பொருள் கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு மங்களகரமான நாளாகவும், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாகக் கழிப்பதாகவும் மேஷ ராசிக்கு இருக்கும். இன்று நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். மதியம் சில நல்ல செய்திகள் வந்து சேரும்.ஆரோக்கியத்தில் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். மாலையில் சில சுப காரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.இன்று முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் எதிர்பார்க்கும். கல்லூரிகளில் அல்லது உயர்கல்விக்கான இடங்கள் கிடைக்கும். சிறப்பான நாளாக இன்றைய நாள் இருக்கும்.உடல் நலம் சீராக இருந்துவரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கூடும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிதளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் நாளின் பிற்பகுதியில் தன வரவு உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். மகாவிஷ்ணு வழிபாடு நன்று.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை உண்டாக வழி உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அவைகளில் நல்ல முடிவுகளை அடைய முடியும். இன்று மகாலட்சுமியை வழிபட நன்மைகள் கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்றைய நாள் பொருளாதார ரீதியாக மிகவும் வலிமையான நாளாக இருக்கும். பணப் பலன்கள் கிடைக்கும். தடைபட்ட பல பணிகள் இன்று மீண்டும் தொடங்கலாம். தொழில் திட்டங்கள் வேகம் பெறும். மரியாதையும் அதிகரிக்கும். அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் பிறகு வருத்தப்பட வைக்கும்.
வெளிநாடு வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மனச்சங்கடம் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசு ராசி அன்பர்களே!

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாகவே செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. சிறுகுழந்தைகளை படிப்பதற்கு உட்கார வைக்கவே சிரமப்பட வேண்டிய நாள் இன்றைய நாள். பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. இரும்புத் தொழில் ரியல் எஸ்டேட் ஆயில் அண்ட் கேஸ் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமமான நாளாக இருக்கும்.மகான் ஷிர்டி சாய்பாபா வழிபாடு சிறப்பு.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

மகர ராசி அன்பர்களே!

உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வரலாம். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமாக சில மாற்றங்கள் ஏற்படலாம் மற்றும் நீங்கள் மரியாதை பெறலாம். இது உங்கள் நண்பர்கள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நிம்மதி அடைவீர்கள், எனவே இன்று தர்ம வழியில் செயல்படுங்கள்.மாணவர்கள் கல்வியில் வெற்றி கிடைக்கும். காலமிது இறையருளால் இன்றைய நாள் சிறப்பான நாளாக செல்லும். சிவபெருமானை வழிபட ஆரோக்கியம் மேம்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் செய்தி கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள்.

கும்பராசி அன்பர்களே!

உங்களின் இலக்கை அடைய சரியான திட்டமிடல் தேவை. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறியளவிலான உடல் நல பிரச்னை ஏற்பட்டு நீங்கும்.
வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். விசா தொடர்பான காரியங்களை துவக்குவதற்கு இன்றுதான் நல்ல நாள் ஆகும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

மீன ராசி அன்பர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு பரபரப்பான நாளாகவும், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பணம் அதிகம் செலவழிக்க வேண்டிய நாளாக இருக்கும். உலக இன்பங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.மகிழ்ச்சிக்கான வழிமுறைகளின் பலனைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் எந்த விதமான தகராற்றிலும் ஈடுபட வேண்டாம். பணப் பரிவர்த்தனையில் கவனமாக இருங்கள். இல்லையேல் மற்றவரிடம் பணம் சிக்கிக்கொள்ளலாம். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!