Beauty Tips

முகப்பரு போக்கும் நலங்குமாவு

இன்றைய இளைஞர்களின் அழகிற்குப் பெரும் சவாலாக இருப்பது முகப்பரு. இயற்கைப் பொருட்களால் தயார் செய்யப்படும் நலங்குமாவே இதற்கு சரியான தீர்வாகும். நலங்கு மாவினை தொடர்ந்து உபயோகிக்கும் போது முகப் பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.

முகப்பருவிற்கு அடுத்ததாக வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு நிறைய பேர் செயற்கை வாசனைப் பொருட்களை (டியோடரண்ட்) உபயோகிக்கின்றனர். கையிடுக்குகளில் இவற்றைப் பயன்படுத்தும் போது சிலருக்கு கொப்புளங்கள், கட்டிகளை உருவாக்கிவிடும். நலங்குமாவினைப் பயன்படுத்தி வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் நலங்குமாவினை வீட்டில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.




தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு – 50 கிராம்

பாசிப் பருப்பு – 50 கிராம்

வசம்பு – 50 கிராம்

ரோஜா மொக்கு – 50 கிராம்

சீயக்காய் – 50 கிராம்

அரப்புத் தூள் – 50 கிராம்

வெட்டி வேர் – 50 கிராம்

விலாமிச்சை வேர் – 50 கிராம்

நன்னாரி வேர் – 50 கிராம்




கோரைக் கிழங்கு – 50 கிராம்

பூலாங்கிழங்கு – 50 கிராம்

கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்

மஞ்சள் – 50 கிராம்

ஆவாரம்பூ – 50 கிராம்

வெந்தயம் – 50 கிராம்

பூவந்திக்கொட்டை – 50 கிராம்




செய்முறை:

  • கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத் தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் , ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை நன்கு சூடு ஏற வெயில் உலர்த்தவும்.




  • வெயிலில் போட இடம் இல்லாதவர்கள் ஒரு இரும்பு கடாயில் தீயை மிதமான சூட்டில்  ஒவ்வொன்றாக போட்டு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

  • பின் மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பின் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையான அளவு எடுத்து உபயோகிக்கவும்.

  • தினமும் தேவையான அளவு எடுத்து குளித்து பாருங்கள் எப்போதும் இல்லாத ஒரு நறுமணம், புத்துணர்ச்சி கண்டிப்பாக கிடைக்கும்.




What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!