Beauty Tips

சன் டேன் ஆன கை, கால்களை வெள்ளையாக்க….

கருப்பான சருமத்தை எளிதில் வெள்ளையாக்க கூடிய குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். நாம் எல்லோருமே சன் டேனால் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருப்போம். குறிப்பாக ஆடை அணிந்திருந்த  பகுதி ஒரு நிறத்திலும், ஆடைக்கு வெளியே இருந்த பகுதி வேறொரு நிறத்திலும், பிளாக் அன்ட் ஒயிட்டாக தெரியும்.சில பேருக்கு கழுத்து பகுதி, கழுத்துக்கு கீழே இருக்கும் முதுகு பகுதி எல்லாம் ரொம்பவும் வெயில் பட்டு பட்டு அந்த இடமே கருத்துப் போய் இருக்கும்.பிளவுஸ் போடும் பெண்களுக்கு இது புரியும்.




இதை சரி செய்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளது. ஆனால் எல்லாவற்றையும் விட ஒரு பெஸ்ட் குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் மரவள்ளி கிழங்கு. நம்முடைய ஊர்களில் இது சுலபமாகவே நமக்கு கிடைக்கும்.

  • மரவல்லி கிழங்கை வாங்கி மண் போக கழுவி விட்டு, தோல் சீவி தேவையான அளவு மரவள்ளி கிழங்குகளை துண்டு துண்டாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக  அரைத்துக் கொள்ள வேண்டும். இதை துருவியும் மிக்ஸி ஜாரில் அரைத்தால் சுலபமாக அரைபட்டு நமக்கு கிடைக்கும்.

  • இதில் தண்ணீர் ஊற்றி அறைக்க வேண்டாம். பால் அல்லது தயிர் ஊற்றி அரைத்து விழுதாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். (இது ரொம்பவும் நைசாக அரைபடாது லேசாக திப்பி திப்பியாகத்தான் இருக்கும் பரவாயில்லை.)




  • இந்த விழுதை உங்களுடைய கைகளிலும் கால்களிலும் நன்றாக தடவி விட்டு, (சன் டேன் ஆன இடத்தில் எல்லாம் தடவிக் கொள்ளலாம்) காய வைக்க வேண்டும்.

  • 10 லிருந்து  20 நிமிடம் இந்த பேக் காய்ந்ததும், இந்த பேக்கின் மேலே தண்ணீரை ஸ்பிரே செய்து, நன்றாக ஈரம் ஆக்கிவிட்டு, அப்படியே வட்ட வடிவில் மசாஜ் செய்து கழுவி விடுங்கள். உங்களுடைய கை, கால்கள் உடனடியாக வெள்ளையாக மாறிவிடும். சன் டேனை நீக்கி சருமத்தை பொலிவாக மாற்ற இந்த டிப்ஸ் நிச்சயம் வொர்க் அவுட் ஆகும்.

  • வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வர உங்களுடைய சருமம் நிரந்தரமாக வெள்ளை நிறமாக மாறி வரும். முயற்சி செய்து பாருங்கள்.




What’s your Reaction?
+1
4
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!