Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை -14

14

அவர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பெரிதாய் இருந்தது.அதை வீடு என்பதைக் காட்டிலும் பங்களா என்று கூறலாம். தோட்டம் பலவண்ண மலர்கள், நீச்சல்குளம், கார்பார்க்கிங் செய்ய வசதியான இடம் பெரிய போர்டிகோ, அதில் வந்தவர்கள் அமர்வதற்கு வசதியாய் நாற்காலிகள் போடபட்டு இருந்தன.

அதைத்தாண்டி மார்பில்ஸ் பதிக்கப்பட்ட தரை நடுவில் மரத்தாலான சோபா செட்டுகலோடு,வேலைப்பாடுகள் மிகுந்த கண்ணாடிச் சாமன்கள் திரைச்சீலைகள்,விளக்குகள் என பங்களாவிற்கு உண்டான அணைத்து அம்சங்களும் பொருந்தி இருந்தது.ராஜ் உள்ளே நுழைய,டிரைவர் முருகன் வந்து பெண்களிடம் இருந்த லக்கேஜ்களை வாங்கிக் கொண்டார்.

“வசந்தி இவர்தான் டிரைவர் முருகன் சின்ன வயசிலே இருந்து நம்ம வீட்டுல தான் இருக்கார்.”

“வணக்கம்மா!”

பெண்களிருவரும் வணக்கம் தெரிவித்தனர் பதிலுக்கு.

“முருகன் லக்கேஜ்கஜை எடுத்திக்கிட்டுப் போய் அவுட் அவுஸில் ரூம் ரெடி பண்ணிடுங்க. அம்மா எங்கே ?”

“பூஜையறையில் இருக்காங்கன்னு நீலா சொல்லுச்சு.”




“தேவியம்மா! என்ற ராஜனின் குரலுக்கு வந்த அம்மாளிர்கு வயது 60 தாண்டியிருக்கும்.கஞ்சி போட்ட உடலை இறுக்கியிருந்த காட்டன் சேலையில் திருத்தமாய் வந்து நின்றாள். கூடவே தாவணியணிந்த இளம் பெண்ணும் பார்க்க வெகு களையாய் இருந்தாள்.

“இவங்க தேவியம்மா… டிரைவரின் அம்மா அது அவங்க பேத்தி நீலவேணி.”

“வாங்கம்மா …. நீங்க வருவீங்கன்னு பெரியம்மா சொன்னாங்க, சாப்பாடு தயாரா இருக்கு! குளிச்சிட்டு வந்திடுங்க, நறுக்கு தெரித்தாற் போல் பேசினாள் அந்தம்மாள்.

மலருக்கு அந்தம்மாளின் வெளிப்படையான் பேச்சு ரொம்பவே பிடித்துப் போனது.

“வசந்தி! தேவியம்மா ரொம்பவும் நல்லவங்க,அவங்க கைபகத்தை சாப்பிட்டுத்தான் நான் இத்தனை தெம்பா இருக்கேன். நீலா ப்ள்ஸ் 2 படிக்கிறா ரொம்ப நல்ல ஸ்டூடண்ட்! டென்த்தில் அவதான் ஸ்கூல் ப்ர்ஸ்ட் “

“வெரிகுட்,”

“அம்மா சூடா காபி தண்ணி தரட்டுமா ?”

“வேண்டாம்! குளிச்சிட்டு உங்க கையாலே சாப்பிட போறோம்” வசந்தி சிரித்தாள்.

நீங்க இரண்டு பேரும், குளிச்சிட்டு வந்திடுங்க! அம்மா பூஜையறைக்குள் நுழைஞ்சிட்டா வ்ர தாமதமாகும்.”

மலரும், வசந்தாவும் டிரைவருடன் சென்றனர்.

அவுட் அவுஸும் குறை சொல்லும் படி இல்லை நன்றாகவே இருந்தது.உட்புறம் பணக்கார வாசமும் வெளிபுரம் முழுவதும் செம்மண் ஓடுகளால் வேயப்பட்டது போல் சவுக்கு கட்டைக்களைமரத்தடுப்புகளாய் கொண்டிருந்தது. சுவரெங்கும் வண்ண ஓவியங்கள்! கண்ணாடி ஜன்னலின் வழியே சற்றே தூரத்தில் கடற்கரை ஒன்று தெரிந்தது. அலைகள் முத்துமிட்டபடியே ஓடி வருவது கண்டு களைபடைந்தது மறந்தே போனது மலருக்கு. குளித்து உடை மாற்றினார்கள்.

“அக்கா! அம்மா உங்களை சாப்பிட வரச்ச்சொன்னாங்க, “நீலா வந்து அழைக்கவும், இருவதும் இறங்கி அவளுடன் நடந்தார்கள்.




ஹாலில் ராஜனுக்கு அருகில் அமர்ந்து இருந்த அந்த பெரியம்மா இவர்களைக் கண்டதும், புன்ங்ககையோடு வரவேற்றார். “வாங்க பொண்ணுங்களா.பிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்ததா?”

தலைசைத்தார்கள்.

“இதிலே வசந்தி யாரு மலர் யாரு ?”

“நான் தான் வ்சந்தி இது மலர் என் தங்கை.”

“சரிம்மா முதல்ல சாப்பிடுங்க மத்ததை பிறகு பேசலாம்.தேவியம்மா தட்டு எடுத்துட்டு வைக்கிறிங்களா?”

“இதோ..!”

அனைவரும் சாப்பாட்டு மேஜையை சம்பித்தார்கள். வசந்தி அந்த அம்மாளை ஊன்றி கவனித்தாள். சிவந்த உருவம், மெல்லிய சரிகை ஓடிய வெளிர் நிற புடவை உடலைத் தழுவிய வெல்வெட் சால்வை, காதில் வைரக்கம்மல், இரண்டு ஜோடி கல் பதித்த வளையல்,இரட்டை வட சங்கிலி என்று பளீர் முகத்துடன் அவர்களைக் கண்டதும் தன்னையும் அறியாமல் கையெடுத்துக்கும்பிடத் தோன்றியது என்னவோ உண்மை.

சாதமும்,மோர்குழம்பு, ரசம் அப்பளம் அனைத்தும் வெகு சுவையாய் இருந்தது.”கூச்சபடாம சாப்பிட்ங்க இது உங்கள் வீடு மாதிரி.”

“சாப்பிட்டு முடிந்தபின், லானில் போடப்பட்டு இருந்த சோபாவில் அமர்ந்தனர். “தம்பி எல்லா விஷயமும் சொன்னான். உங்கப்பாவிற்கு ஒண்ணும் ஆகாதும்மா!

நீ தளராம தைரியமா இரு நான் சின்னவனுக்கு போன் பண்ணி கூட இருந்து பாத்துக்கச் சொல்றேன்.”

“நன்றிம்மா!”

“இந்த வீடு ரொம்பவும் பாரம்பரியமானது. என் கணவர் இறந்த பிறகு நான் அதிகம் வெளியே போறது இல்லை. இந்த அறைக்குளேயே அடைஞ்சி கிடக்கிறேன்.அதனால்தான் இந்த வீட்டை நிர்வகிக்கவும் குழந்தைகளை கவனிக்கவும் ஒரு ஆள் தேவைன்னு ராஜன் சொன்னப்போ எனக்கும் அது முக்கியமாத்தான் பட்டது.”

“ஆனா,வீட்டுப் பொறுப்பை அடுத்தவங்ககிட்ட கொடுத்தா அதை அவங்க எப்படி செய்வாங்களோங்கிற உறுத்தல் என் மனசுக்குள்ளே இருந்தது. ஆன ஃபாதர் வசந்தியோட பொறுமையும் நடத்தையும் பற்றி சொன்னது என் மனதை ரொம்பவே கவர்ந்து விட்டது. உன்னை பார்த்ததும் இன்னமும் மனசுக்கு நிறைவாகி விட்டதம்மா.”

“நன்றியம்மா!”

“அம்மா குழந்தைகள் எப்போ வருவாங்க ?”

நான்கு மணி ஆகும். ஆர்த்தியும் அர்ஜுனும் தாயில்லா பிள்ளைகள்.எம் மருமக ராணி இருந்த வரையில் அதுங்களை ஒரு குறையும் இல்லாமத்தான் வளர்த்தா. இப்பவும் நாங்க நல்ல முறையிலேதான் கவனிக்கறோம். ஆனா ஒரு சில நேரம் அந்த பிள்ளைகளைப் பார்க்கும் போது தாங்க முடியலைம்மா! அதுக மனசு படியெல்லம் நடக்க உடம்பு ஒத்துழைக்கலம்மா அதனால…!”

“நீங்க கவலைப்படாதீங்கம்மா எல்லாத்தையும் நான் கவனிச்சுகறேன்.”

“சரிம்மா முதல்ல நீங்க நல்லபடியா வந்து சேர்ந்ததை உங்க பெத்த்வங்ககிட்ட சொல்ல வேண்டாமா ! வீட்லே போன் இருக்கா …?”

“இருக்கும்மா”




“அப்படின்னா வீட்டுக்குப் போன் போடு”

மலர் வீட்டு எண்ணிற்கு டயல் செய்தாள், ரிங்க் போய் எடுக்கப்பட்டதும், அம்ம மகேஸ்வரியின் குரல் கேட்டது.

“அம்மா நான் மலர் பேசறேன்.”

மலரா.. என்னம்மா நல்லபடியா ஊர் போய் சேர்ந்தீங்களா ?

ஆமாம்மா… அங்கே அப்பா தம்பி தங்கையெல்லாம் எப்படி இருக்காங்க.

நல்லாயிருக்கோம்டா… நீ பக்கத்திலே இல்லைங்கிற குறைதான்.

மலரிடமிருந்து ரீசிவரை வாங்கினார் பெரியம்மா,அம்மா உங்க பிள்ளைங்களுக்கு எந்தக் குறையும் இல்லாம நான் பார்த்துக்கறேன்.

நீங்க?

நான் இந்த வீட்டுப் பெரியம்மா?

அம்மா நான் உங்களை நம்பித்தாம்மா இரண்டு பொம்பளைப்பிள்ளைகளை அனுப்பியிருக்கேன்.

நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன்.என் மகன் சின்னவனிடம் சொல்லி உங்களை கவனிக்க சொல்றேன்மா வைச்சிடவா?!

பெரியம்மா ரிசிவரை வைத்துவிட்டு மலரிடம் நிமிர்ந்தாள்.இனிமேல் எதையும் நினைச்சு கவலைப்படக் கூடாது தெரியுதா? நானிருக்கேன். என்றவரின் பேச்சுத் தோரணையும் அந்தக் கண்களும் மலருக்கு வெகு பரிச்சயமாய்த் தோன்றியது. உணவு உண்டபின், உங்களுக்கு களைப்பா இரந்தா போய் ஓய்வெடுங்க இல்லைன்னா வீட்டைச் சுத்திப் பாருங்க என சொல்லிவிட்டு பெரியம்மா அறைக்குள் சென்றுவிட, ராஜனும் நான் ஸ்கூலில் போய் பிள்ளைகளை அழைத்து வருகிறேன் என்று கிளம்பினான். தேவியம்மாவும் நீலாவும் அந்த வீட்டை அவங்களுக்கு சுற்றிக் காட்டினார்கள். ஒவ்வொரு இடமாக பார்த்துக் கொண்டே வந்தார்கள். மலர் கேட்டாள். ஏன்? தேவியம்மா இத்தனை பெரிய வீட்டில் ஒரு இடத்தில் கூட புகைப்படம் மாட்டக் காணோமே?

இங்கே எல்லாமே தனித்து இருக்காது, குடும்பப் படமாத்தான் தொங்கும் கண்ணு,ஆனா குழந்தைங்க அதையெல்லாம் பார்த்தா அவங்க அம்மா ஞாபகம் வந்து அழுவுறாங்கன்னு பெரியம்மா எல்லாத்தையும் கழற்றிடச் சொல்லிட்டாங்க,,,

பாவம் சிறிய வயசிலேயே தாயை இழக்கிறது பெரிய வேதனைதான். அதை நான் அனுபவிச்சிக்கேன். வசந்தி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டபடியே கூறினாள்.

தேவியம்மா நீங்க இங்கே ரொம்ப காலமா வேலை பாக்கறீங்களோ?வசந்தி குழந்தைகளுக்கான பொம்மைகளை எடுத்து வரச் செல்லவும், மலர் கேட்டாள்.

ஆமாம்மா நான் இந்த வீட்டுக்கு வேலைக்கு வரும் சமயம் முருகனுக்கு 18லயது, இங்கே வந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு, முருகனுக்கு கல்யாணமாகி நீலா பிறந்தாள். எம்மருமவ தங்கமான பொண்ணு தாயி, இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஏதோ விஷக்காய்ச்சல் வந்து படுத்தவ பிறகு எழுந்திருக்கவே இல்லை,




அடக்கடவுளே?

சில நேரங்களில் அந்தக் கடவுள் இருக்கிறாரான்னு கூட சந்தேகம் வருகிறது.

கண்ணு ஏன்னா வாழ்ககையின் ஆரம்பத்திலேர்ந்தே நான் அத்தனை வேதனைப்பட்டேன். பூவும் பொட்டும் தந்த கடவுள் நல்ல புருசனைத்தரலை,அவர் வேறொரு பொண்ணோட தொடர்பு வைத்திருந்தார். என்னாலே அதை தாங்கிக்க முடியலை நீயும் உன்னோட வாழ்ந்த வாழ்க்கையும் போதுன்னு பிள்ளையைக் கையிலே பிடிச்சிட்டு வந்திட்டேன். மலர் பிரமிப்புடன் பார்த்தாள்.

பின்னேயென்ன கண்ணு?என்ன அட்டூழியம் செய்தாலும் பொம்பிளை தாங்கிப்பான்னு நினைப்பு ஆம்பிளைங்களுக்கு! இத்தோட வருஷம் பல கடந்து போச்சு, ஆனா அடைக்கலமா இங்கே வந்த நாள்லேயிருந்து இந்தக் குடும்பத்திலே ஒருத்தராத்தான் என்னை எல்லாரும் பாக்கிறாங்க.

அதற்குள் குழந்தைகள் வந்த அரவம் கேட்டு நடந்தனர் அனைவரும். தோளில் சிறிய பேக்கும், கையில் லன்ஞ் கூடையுமாய் கருகருவென்ற விழிகளும், பாப் செய்யப்பட்ட தலையுமாய் அந்த ஐந்து வயது சிறுமியும், சிறுவன் ஆகாஷீம் அழகில் மனதைக் கொள்ளையடித்தார்கள்.

ராஜனின் பின்னால் பதுங்கியிருந்த குழந்தைகளை நோக்கி வந்தாள் வசந்தி, மென்மையாய் பார்த்து சிரித்தாள். என் பெயர் வசந்தி உங்களுக்குப் பிடிச்சிருக்கா, பயம் நீங்கி மெல்ல குழந்தைகள் அவளருகில் வந்தனர், உங்க இரண்டு பேருக்கும் நான் கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்.

கிப்ட்டா…

ம்… மலர் அந்த இரண்டு பார்ச்சலைக் கொண்டு வந்து தந்தாள், இது உனக்கு இது ஆர்த்திக்கு !

அதில் பெரிய சைஸ் டெடிபேர் ஒன்று புஸ்புஸ்வென்ற முடியோடு அவன் கையில் இருந்தது. வாவ் சூப்பர் ஆண்ட்டி ! ஐ லவ் டெடிபேர் எனக்கு இது பிடிக்குமின்னு உனக்கு எப்படித் தெரியும். ஆகாஷ் குதித்தான்.

ம்.. நீயும் பிரி ஆாத்தி

கலர் பெயிண்டிங்ஸ் வாட்டர் ப்ரூப்ஸ் கலர்ஸ், வாவ் எனக்கு பெயிண்ட்டிங்கில் இண்டரஸ்ட் இருக்கு நான் நிறைய வரைஞ்சி இருக்கிறேன். தேங்யூ ஆண்ட்டி என்று வசந்தியைக் கட்டிக்கொண்டனர் பிள்ளைகள் ஆமா இவங்க யாரு?

இது மலர் என்னோட தங்கை

மலர்ன்னா பூ..தானே?

யூ ஸ்வீட் கேர்ள்.. சரி நீங்க யூனிபார்ம் மாத்தலையா? அவர்கள் புன்னகையுடன் உள்ளே ஓடினார்கள்.

அழகான குழந்தைகள் இல்லைக்கா…

ஆமாம் மலர் சரி நீ கொஞ்சம் நேரம் போய் ரெஸ்ட் எடு, நான் குழந்தைகள் கூட இருக்கேன். என்று வசந்தி நகர மலர் படுக்கையில் சரிந்தாள்.




What’s your Reaction?
+1
9
+1
9
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!