gowri panchangam Sprituality ராசிபலன்

குரு பெயர்ச்சி 2023-2024 விளக்கம்

குருபெயர்ச்சி – விளக்கம்

நவக்கிரகங்களில் குருவுக்கு மட்டும் தான் பொன்னவன் என்று பெயர். குருபகவான் ஒரு முழுமையான சுபகிரகம். எந்த ராசியில் இருந்தாலும் ஓரளவு நன்மையையே செய்யக் கூடியவர். குருபார்க்க கோடி நன்மை. குரு பார்க்க கோடி தோஷம் நிவர்த்தி என்பர். குருபகவானின் 5, 7, 9 இடப் பார்வைகள் மிக விசேஷமானது என ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன. குரு 2,5,7,9,11 இடங்களில் இருக்கும் போது அளவற்ற நற்பலன்களையும் யோகங்களையும் தருகிறார். 1. 4. 7. 10 ஸ்தானங்களில் இருக்கையில் கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கி கொடுக்கவும் செய்வார். இந்த கேந்திர ஸ்தானங்களில் குரு இருக்கும் போது குரு மங்கள யோகம் ஏற்பட்டு எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அதிக அளவு நற்பலன்களை தரமுடியாது. குரு பகவான் 3. 4, 6, 8, 10, 12 இடங்களில் சஞ்சரிக்கும் போது அதிக அளவு நற்பலன்களை தரமுடியாது.

 




குரு பெயர்ச்சி 2023 -2024 எப்போது ?

 இந்த மாதம் குரு பெயர்ச்சி சித்திரை மாசம் 9ம் நாள் 22.4.2023 சனிக்கிழமை இரவு 11.27க்கு குரு ரேவதி நட்சத்திரம் 4ம் பாகம் மீனம் ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாகம், மேஷத்திற்குப் பெயர்ச்சியாகிறார்.

அண்மையில் அதாவது ஜனவரி 17ல் தான் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பெயர்ச்சி நடந்தது. தற்போது மற்றொரு வருட கிரகம், முழு சுப கிரகமான குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு ஏப்ரல் 22ம் தேதி பெயர்ச்சி ஆக உள்ளார்.

தனக்காரகன், தேவ குரு, பிரகஸ்பதி என அழைக்கப்படக்கூடியவர் குரு பகவான். இவர் தனுசு, மீன ராசிக்கு அதிபதியாவார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள்.

பொதுவாக குரு பெயர்ச்சியின் போது அவரின் பார்வை பலன் மிகவும் முக்கியமானதாகக் கவனிக்கப்படும். குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்து அற்புத பலனைத் தரக்கூடியவர்.

குரு பகவானின் பார்வை பலன், அமர்ந்திருக்கும் இடத்தைப் பொறுத்து அதிர்ஷ்ட பலன்கள், கோடீஸ்வர யோகத்தை பெறுவார்கள்.




குரு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் மாறும் போதெல்லாம், அது 12 ராசிகளின் வாழ்விலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. இது சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் அளிக்கும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு பகவான் செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் நுழையவுள்ளார். ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது.

ஜோதிடத்தின் படி, குரு தற்போது மீனத்தில் அமர்ந்துள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசியில் அவர் பெயர்ச்சியாகவுள்ளார். இதனுடன் சூரியனும் புதனும் மீன ராசியில் உள்ளனர். மீனத்தை விட்டு வெளியேறிய பிறகு, மே 1 வரை மேஷ ராசியில் குரு இருக்கப் போகிறார். குரு மேஷ ராசியில் நுழையும் போது அனைத்து 12 ராசிகளை சேர்ந்தவர்களின் வாழ்விலும் தாக்கம் இருக்கும். இந்த தாக்கம் சிலருக்கு ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு குருவின் இந்த பெயர்ச்சி சுமாரான விளைவுகளையே அளிக்கும்.

குரு பெயர்ச்சியால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள அதிர்ஷ்ட பலன்கள், கோடீஸ்வர யோக பலன்கள், மற்றும் அதன் விளைவுகளை பற்றி இனி வரும்  பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.




 

What’s your Reaction?
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!