health benefits

மலச்சிக்கலுக்கே சிக்கல் கொடுக்கும் ‘இவற்றை’ ஃபாலோ பண்ணலாமே?

பிரச்சனை என்று ஒன்று இருந்தால், அதற்கான தீர்வும் இருக்கிறது அல்லவா? அதிலும், பலருக்கும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு சுலபமான தீர்வுகள் இதோ..

மலச்சிக்கல் என்பது ஒரு சங்கடமான பிரச்சனை. ஆனால் அதை அவ்வப்போது அனுபவிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும்போது அல்லது சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாகிறது. பிரச்சனை என்று ஒன்று இருந்தால், அதற்கான தீர்வும் இருக்கிறது அல்லவா? அதிலும், பலருக்கும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும் இந்த சிக்கலுக்கு, இயற்கையான தீர்வுகள் உள்ளன.

சுறுசுறுப்பாக செயல்படுவது அவசியம்

நாள் முழுவதும் படுக்கையில் இருப்பது ஜாலியாக இருக்கலாம். அவ்வப்போது சோம்பேறியாக இருப்பது பரவாயில்லை என்றாலும், காலைக் கடன்களை மட்டும் தவறாமல் முடித்துவிட்டால், பிரச்சனை இல்லை. மலம் கழிக்க இடைவெளி கொடுக்காமல் இருப்பதும், சுறுசுறுப்பாய் வேலை செய்துக் கொண்டிருப்பதும் உடலை நன்கு செயல்பட செய்து, மலச்சிக்கல் பிரச்சனையைத் தவிர்க்கும்.

மலம் தினசரி வெளியேறாமல் வயிற்றில் தங்கிவிட்டால், அது குடல் இயக்கத்தை மெதுவாக்கும். இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் வயிற்றை காலி செய்தால் அது நல்லது. அதேபோல, காலையில் முதலில் கழிவறைக்கு சென்று ‘முக்கியமான மலக் கடமையை’ நிறைவேற்றுங்கள்.

அனைவருக்கும், காலையிலேயே மலம் கழியாது, சிலருக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் அது பழக்கமாகியிருக்கும். வழக்கமான அட்டவணையைப் பின்பற்றுவது உதவியாக இருக்கும்.




போதுமான நார்ச்சத்து உணவு சாப்பிடுங்கள்
உங்கள் உணவில் போதுமான நார்ச்சத்து இருப்பது முக்கியம். இரண்டு முக்கியமான நார்ச்சத்துகள் உள்ளன: கரையக்கூடிய ஃபைபர் தண்ணீரை உறிஞ்சுகிறது, இது உங்கள் மலத்தை இலக்கமாக வைத்திருக்க உதவுகிறது; கரையாத நார்ச்சத்து உங்கள் மலத்தில் அதிக அளவில் சேர்க்கிறது, இது செரிமான அமைப்பு வழியாக, உணவு வேகமாக செல்ல உதவுகிறது.

மலச்சிக்கல் ஓரளவுக்கு இருந்தால், பெர்ரி, வாழைப்பழங்கள், கொடிமுந்திரி போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட முயற்சிக்கவும். எதிர்காலத்தில் பிரச்சனை முற்றாமல் தடுக்க, காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் உட்பட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை  உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ்


உணவில் போதுமான மெக்னீசியம் கிடைப்பது மலைச்சிக்கல்  பிரச்சனையைப் போக்க உதவும். வாய்வழி மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் ஆஸ்மோடிக் மலமிளக்கியாக செயல்படுகிறது. அதாவது அவை உங்கள் செரிமான அமைப்பில் தண்ணீரை இழுக்கின்றன, இது மலத்தை இலக்க உதவுகிறது.

உணவு மூலங்களிலிருந்தும் மக்னீசியத்தைப் பெறலாம். ஆனால், சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம். மெக்னீசியம் அதிகம் உள்ள பெரும்பாலான உணவுகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உதாரணமாக, முழு தானியங்கள் மற்றும் அடர் நிற இலை கீரைகள் இரண்டிற்கும் நல்ல ஆதாரங்கள்.





உடற்பயிற்சி செய்யுங்கள்


ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது என்பது, பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து நீங்கள் எடுத்த முடிவாக இருக்கலாம்.அதவது, உடல் எடை குறைப்பது, உடல் இயக்கம் என பல்வேறு விஷயங்களுக்காக இருந்தாலும், நடை பயிற்சி அல்லது ஓட்டப் பயிற்சி செய்வது என்பது, குடல் மற்றும் பெருங்குடலில் உள்ள தசைகளைத் தூண்ட உதவும். எந்தவொரு உடல் இயக்கமும் குடல் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும், அதிலிருந்து நிவாரணம் பெறவும், உடற்பயிற்சியை தினசரி நடைமுறையாக்குங்கள். வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.

நீர்ச்சத்து, நார்ச்சத்து கொண்ட உணவு
போதுமான திரவங்களை குடிப்பது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் உதவும். இது உங்கள் செரிமான அமைப்பு வழியாக உணவை நகர்த்த உதவுகிறது மற்றும் மலம் கடினமாவதை நிறுத்துகிறது.

பொதுவாக,பெண்கள் நாளொன்றுக்கு ஒன்பது கப் திரவத்தையும், ஆண்கள், தினசரி 13 கப் திரவத்தையும் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் அல்லது ஃபைபர் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்பவர்கள், நீர் அதிகமாக குடிக்க வேண்டியிருக்கும். ஆனால், மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், மருத்துவரின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நல்லது.

தண்ணீர் ஒரு சிறந்த தேர்வாக இருந்தாலும், மற்ற பானங்களையும் தவிர்க்க வேண்டாம். கிரீன் டீ, ப்ளாக் டீ, காபி மற்றும் பிற பானங்கள் அனைத்தும் உங்கள் தினசரி திரவ உட்கொள்ளலில் சேரும் என்பதை மறந்துவிட வேண்டாம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!