Entertainment தோட்டக் கலை

கோடை காலத்தில் செடிகள் வாடுவதைத் தவிர்க்கலாம்.. எப்படி?

கோடை காலத்தில் செடிகள் வாடுவதைத் தவிர்க்க, பழக்கரைசல் தெளிக்கலாம்.

பழக்கரைசல் தயாரிக்கும் முறை:

தேவையானவை:

நன்கு கனிந்த

வாழைப்பழம்-1/2 கிலோ

பப்பாளி-1/2 கிலோ

பரங்கிக்காய் – 1/2 கிலோ

பொடித்த வெல்லம் – 1  கிலோ




தயாரிக்கும் முறை:

  • பழங்களைத் தோலுடன் பொடிப்பொடியாக நறுக்கி வெல்லத்துடன் சேர்த்து, கைகளால் பிசைந்து கூழாக்கவும். இத்துடன் ரெண்டரை லிட்டர் தண்ணீர் கலந்து, 21 நாள்கள் காற்றுப்புகாத பாத்திரத்தில் ஊற்றி மூடிவைக்கவும். 21 நாள்களுக்குப் பிறகு, கலவையின்மீது வெள்ளை நிற ஏடு படிந்திருக்கும்.

  • இந்தப் பக்குவத்தில் பெரிய துளைகள் கொண்ட வடிகட்டியில் பழக்கரைசலை வடிகட்டி, தண்ணீரை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.

  • 20 மில்லி பழக்கரைசலுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளின் மேல் தெளித்துவிட, செடிகள் வெயில் நேரத்திலும் செழித்து வளரும்.

  • தோட்டம் அமைக்க திட்டமிடுகிறீர்கள் எனில் காய்கறி, கீரை, பழங்கள், பூச்செடி எனக் கலந்து தோட்டம் அமைத்தால் எல்லாப் பயன்களும் கிடைக்கும். உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கு, திட்டமிட்டு தோட்டம் அமையுங்கள் ஆரோக்கியமான வாழ்வு நிஜமாகும்.




What’s your Reaction?
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!