Entertainment News தோட்டக் கலை

கோடை காலத்திற்கு ஏற்ற காய்கறிகள் என்ன?

மார்ச் முதல் ஜூலை காலம் வரையிலான சாகுபடிக்கு எந்தெந்த காய்கறிகள் ஏற்ற பருவமாகும்.




  • விதைகள் வாங்கும்போது முடிந்தளவுக்கு உயர்ரக விதைகளாக அல்லாமல், நாட்டு விதைகளாக வாங்குவது நல்லது.

  • இந்தப் பருவத்தில் தக்காளி, மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை வகைகளை வளர்க்கலாம்.

  • வெண்டை, கொத்தவரை, அவரை போன்ற பெரிய விதைகளை தேவையான இடைவெளி விட்டு, பாத்திகளில் நேரடியாகவே விதைக்கலாம். கத்திரி, தக்காளி, மிளகாய் போன்று சிறிய விதைகளை குழித்தட்டுகளில் வளர்த்து, பிறகு நடலாம்.

  • செடிகளின் அளவைப் பொறுத்து, 0.5 – 1 அடி வரை இடைவெளி விட்டு நட வேண்டும்.

  • கீரையில் வேர் அதிகம் கிடையாது என்பதால், ஒரு பிளாஸ்டிக் சாக்கை தரையில் விரித்து, மண் நிரப்பி கீரை வகைகளை வளர்க்கலாம்.




வெண்டைக்காய்:

வெண்டை  வெப்பம் விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள் தேவை. பனி மூட்டத்தால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும். 45 நாளிலேயே அறுவடை செய்யலாம். காய்கள் முற்றும் முன்பாக அறுவடை செய்ய வேண்டும். 2 நாளுக்கு ஒருமுறை அறுவடை செய்வது அவசியம்.

கத்திரிக்காய் :

இந்தியாவை தாயகமாக கொண்ட காய்கறி ரகம் கத்தரிக்காய். இது வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடியது. சுமார் 100 கிராம் எடை கொண்ட கத்தரிக்காயில் குறைவான கலோரி, புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்-சி காணப்படுக்கிறது.

மருத்துவக் குணம் பாகற்காய், நீர்ச்சத்து நிறைந்த  புடலங்காய் , நாரசத்து நிறைந்த பீர்க்கங்காய் இத்தகைய கால கட்டத்தில் பந்தல் கொடிக் காய்கறிகளை பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்.

மூன்று முறை நன்கு உழுது, குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு கன அடி அளவில்  நீர்பாய்ச்சி குழிக்கு அல்லது தொட்டி  5 விதைகள் ஊன்ற வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும்.

கொடிகள் படர கல்தூண்கள், கம்பிகள் கொண்டு இரண்டு மீட்டர் உயரத்தில் முறையாகப் பந்தல் அமைக்க வேண்டும். மூன்று முறை களை எடுக்க வேண்டும்.




தக்காளி:தக்காளி ஒரு வெப்ப மண்டலப் பயிர். அமெரிக்காவிலுள்ள பெரு என்ற நாட்டில் இந்தப் பயிர் தோன்றியது. நன்கு பழுத்த பழங்கள் நாம் அன்றாடம் செய்யும் சமையலில் ரசம் போன்ற உணவு வகைகளில் பயன்படுவதுடன் சூப், சாஸ், ஜாம், கெட்சப் போன்ற தயாரிப்புகளிலும் பயன்படுகிறது. வைட்டமின் ‘ஏ’ ‘சி’ போன்ற உயிர்ச்சத்துக்கள் தக்காளிப் பழத்தில் அதிகம் உள்ளன. இதன்  விதைகள் மிகச் சிறியவையாதலின் சாதாரணமாக நாற்றுவிட்டு நடவு செய்யலாம்.

இயற்கை உரம் எப்படி தயாரிக்காலம்?

  • உங்களது வீட்டுத்தோட்டத்தில் நீங்களே இயற்கையான முறையில் உரங்களை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

  • வேப்ப இலைகளை நன்கு காய வைத்து துாள் செய்து, செடி ஒன்றுக்கு ஒரு கைப்பிடி வீதம், செடியின் வேர்ப்பகுதியில் போட்டு நன்கு கொத்தி விட வேண்டும். இதுவே அடியுரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

  • முட்டை ஓடு, மீன் தொட்டிக் கழிவுநீர், அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய நீரை கூட செடிகளுக்கு இடலாம்.

  • அதாவது காய்கறி வேஸ்ட் மற்றும் பூ கழிவுகள் இவைகளை எல்லாம் ஒரு மண் சட்டியில் போட்டு அதன்மீது புளித்த மோர் கொஞ்சம் தெளித்து கொஞ்சம் தோட்டத்து மண்ணையும் மேலே போட்டு மூடிவிட வேண்டும்.

  • இப்படி ஒவ்வொரு அடுக்காக குப்பை அதன்மேல் புளித்த மோர் மண் போட்டு கடைசியில் சட்டியை மூடி விட வேண்டும் .

  • எந்த காரணத்தைக் கொண்டும் சமைத்த சாதம் மற்றும்சாம்பார் போன்ற கழிவுகளை போடக்கூடாது.

  • இப்படி செய்து  வந்தால்  நிச்சயம் நமக்கு இயற்கை உரம் கிடைத்துவிடும்.இதனை செடிகளுக்கு கண்டிப்பாக பயன்படுத்தலாம் .

இன்னொரு ஆலோசனையும் சொல்லுகிறேன் சின்ன வெங்காயம் உரித்த தோலை ஒரு நாள் தண்ணீரில் ஊறவைத்து அந்தக் ஊறவைத்த அந்த தண்ணீரை செடிகளுக்கு மேல் தெளிக்கலாம் .வெங்காயத்தாளை செடிகளுக்கு கீழே உள்ள மண் தொட்டியில் போட்டு விடலாம். இப்படியும் செய்து பாருங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!