Entertainment karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-4

4

” கண்ட கண்ட கெமிக்களுகளையெல்லாம் உரங்கிற பேர்ல உங்க பயிருக்கு போடாதீங்கய்யா …இதை சொல்லத்தான் வந்தேன் ….”

” என்ன தாயீ இது …உரமே போடாமல் பயிர் வளர்க்க சொல்லுறியா ….? “

” அப்படி சொல்லலீங்கய்யா . .இயற்கை உரம் போட சொல்றேன் .பூச்சி மருந்து கூட இயற்கை மருந்துதான் போடனும்…”

” ஏன் தாயி இப்போ போடுற மருந்து, உரமெல்லாம் ஏன் வேண்டாங்கிற …? “

” அதெல்லாம் விசமுங்கய்யா .இனிமே அதெல்லாம் யூஸ் பண்ணாதீக ….”

” அட நான் போடுற உரம, மருந்தெல்லாம் அரசாங்கம் சொன்னது , கொடுத்ததுதான் தாயி …அதப் போய் குத்தம் சொல்லுறியே ….”

” அது …அரசாங்கம் வெளிநாட்டு கார்பரேட் முதலாளிங்க கிட்ட பணம் வாங்கிட்டு இந்த மருந்து , உரத்தைநெல்லாம் நம்மதலையில்  கட்டுறாங்கய்யா ….”

” என்ன தாயி இது படக்குன்னு அரசாங்கத்தை சொல்லிப்புட்ட …? அது என்னவோ சொன்னியே காரோ …பைட்டோ …அது யாரு தாயி ….? “

” அது வந்து …கார்பரேட்ங்கிறது …வந்து …அவுங்க ஒரு கம்பெனி மாதிரி …அதாவது இந்த ஊருக்கு உங்களை மாதிரி சில பணம் படைத்த பெரியமனுசங்க இருக்கீங்க இல்ல ….அது போல் கார்பரேட்டுங்கிறவங்க உலகத்துக்கு பெரியமனுசங்க மாதிரி .பணம் நிறைய வச்சிருக்கிற முதலாளிங்க….” தன்னால் முடிந்த வரை விளக்கினாள் .

” ஓஹோ ….ஒரு அரசாங்கத்தையே கட்டுக்குள் வைக்கிற அளவு பெரியவுகளா அந்த கார்ப்பு …..அதை நீயே சொல்லு தாயி .எழவு எனக்கு வர மாட்டேங்குது ….”





” கார்ப்பரேட் கம்பெனிகள் .ஆமாங்கய்யா ..இந்தக் கால உலகத்தில் பணம்தானுங்கய்யா பிரதானமா இருக்கு . பணத்துக்குத்தானே பெரிய பெரிய அரசாங்கங்களே அடிமைப்பட்டு கிடக்குங்க .”

” ஆனால் நான் அப்படி இல்லை தாயி .பணத்துக்கு என்னைக்கும் முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் .மனுசங்க குணத்தைத்தான் பார்ப்பேன் …”

” நல்லதுங்கய்யா …அப்போ நான் சொன்னதை கேட்பீங்கன்னு சொல்லுங்க ….” திரும்ப தனது பாயிண்டுக்கு வந்தாள் .

” ஹா ….ஹா …கேட்காட்ட விடமாட்ட போல தெரியுதே தாயி .சொல்லு என்ன செய்யணும் …? ” அந்த ஊரே …ஏன் சொந்த மனைவி , மக்களே அவர் முன் நின்று சேர்தாற் போல் நாலு வார்த்தை பேச  யோசிக்கின்ற போது இந்த சிறுபெண் இப்படி படபடவென பொரிகிறதே …பொன்னுரங்கத்திற்கு ஆச்சரியம் .

” அதாவதுங்கய்யா …இந்த கெமிக்கல் உரம் , பூச்சி மருந்தெல்லாம் விட்டுட்டு , ஒவ்வொன்னுக்கும் நான் சொல்லுற மாதிரி போட்டீகன்னா , கெமிக்கல் இல்லாத சுத்தமான விளைச்சல் நமக்கு கிடைக்கும் .நம்ம எதிர்கால சந்த்தி ஆரோக்யமானதாக உருவாகும் …”

” சரி தாயி சொல்லு ….” பொன்னுரங்கம் குரலில் கொண்டு வந்த பவ்யத்தை கவனிக்காமல் பூந்தளிர் விளக்க ஆரம்பித்தாள் .

தெளிவான அவளது உர முறைகளை விட , அதை அவள் விவரிக்கும் முறைதான் பொன்னுரங்கத்திற்கு  சுவரஸ்யமானதாயிருந்த்து . அப்போதுதான் பேச ஆரம்பித்த தன் குழந்தையின் தொடர் பேச்சுக்களை ரசிப்பாளே தாய் ்அதுபோல் வாஞ்சையுடன் பார்த்தார் பூந்தளிரை .

” என்ன தாயி இது …? பூண்டு , இஞ்சி ,  காயம்  வெல்லமுன்னுட்டு …சமையல் சாமானுங்களா சொல்லிக்கிட்டிருக்கிற …” ஙேண்டுமென்றே வம்பிழுத்தார் .

” ஐயா …பூச்சி கடிக்கு பெருங்காயம் கரைச்சு ஊத்தனும்னு உங்களுக்கு தெரியாதாக்கும் ….வம்பு பண்றீங்களா …? ” பூந்தளிர் இடுப்பில் கை தாங்கி பண்ணையாரை முறைத்துக் கொண்டிருந்த போது அங்கே வந்தான் திருமலை .

” ஏ புள்ள என்ன செய்யுற …ஐயா முன்னாடி இடுப்பில் கை வச்சுட்டு நிற்கிற …? ” பதறினான் .

” ஒண்ணுமில்லை சித்தப்பா .இயற்கை உரங்களை பத்தி நம்ம ஐயாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன் .அவுங்க வயக்காடுதானே நம்ம ஊர்ல ஜாஸ்தி .ஐயா மாதிரி ஆளுங்கதான் முதல்ல மாறனும் …”

” என்னலே திருமலை உம்மவ சொல்லிட்டாள்ல …இனி மாறிட வேண்டியதுதான் .இவள் உனக்கு நெருங்கிய உறவாலே ….”

” இல்லீங்கய்யா …கொஞ்சம் தள்ளுன சொந்தந்தாங்கய்யா .சிலம்ப வாத்தியார் எனக்கு அண்ணன் முறைங்கய்யா …ஏ புள்ள பூவு …நீ வீட்டுக்கு கிளம்பு ஆத்தா ….”

” இருங்க சித்தப்பா .பாதி விவரம்தான் ஐயாவுக்கு சொல்லியிருக்கேன் .மீதியையும் சொல்லிட்டு வர்றேன் …”

” உன்கிட்ட விவரம் கேட்டு ஐயா பொழைக்கிறவரா …அங்கிட்டு போங்கிறேன் ….” திருமலை அதட்ட பூந்தளிரின் முகம் வாடுகிறது .

” அட விடு திருமலை .பூவு ஏதோ சொல்லுது .அதை என்னன்னு கேட்போம் .நீ சொல்லு தாயி ….”

” ஐயா அது சின்னப்பொண்ணுங்கய்யா .அதுக்கு  போயி மரியாதை கொடுத்து ..தாயி …கீயின்னு …சும்மா பேரச் சொல்லுங்கய்யா …”

” ஏன் சித்தப்பா , வீட்டு பொண்ணுங்களை தவிர்த்து  வேத்து பொண்ணுங்ளை தாயின்னு கூப்பிடுறதுதானே நம்ம ஊரு பழக்கம் …” பூந்தளிரிடமிருந்து துடிப்பான கேள்வி .

திருமலைக்கு ஒன்று விட்ட அண்ணன் மகளை அறையலாம் போல் வந்த்து .உயர் சாதிக்கார்ர்களின் அந்த பழக்கம் சாதி குறைந்த இவர்களுக்கு ஒத்து வருமா …? இந்த அண்ணன், மகளை வெளியூருக்கெல்லாம் அனுப்பி பெரிய படிப்பெல்லாம் படிக்க வைத்து என்ன பிரயோஜனம் .கொஞ்சமாவது உள்ளூர் வழக்கம் தெரிகிற மாதிரி வளர்க்க ஙேண்டாமா ….? பல்லை கடித்தான் .

” ஏனுங்கய்யா சரிதானுங்களே ….? ” பூந்தளிர் தனது ஏவுகணையை இப்போது பொன்னுரங்கம் பக்கமே திருப்ப திருமலை பதறினான் .

” நூறு சதவீதம் சரி தாயி …ஏலே இவளை பார்த்தா …கையை , தலையை ஆட்டி இவ பேசுறதை பார்த்தா எனக்கு என்னைய பெத்த ஆத்தா நினைவுக்கு வருகிறாள்டா .அதனால்தான் தாயின்னு கூப்பிட்டேன் .ம் …நீ மீதியை சொல்லு தாயி …”

பூந்தளிர் சந்தோசத்துடன் தொண்டையை செருமிக் கொண்டு திரும்ப பேச ஆரம்பிக்க , ஆட்சேப பார்வை பார்த்த திருமலையை …” ஏய் ….மத்தியான வேளையாயிடுச்சு .வீட்டுல போயி எனக்கு சாப்பாடு வாங்கியா போ ….” விரட்டிவிட்டு , ஆர்வத்துடன் பூந்தளிரை கவனிக்க துவங்கினார் .

” இம்புட்டு விவரம் உனக்கு எப்படி தாயி தெரியும் …? “

” எல்லாம் இதிலிருந்து தெரிஞ்சிக்கிட்டது தாங்கய்யா ….” பெருமையுடன் தனது போனை தூக்கி ஆட்டிக் காட்டினாள் .

” நம்ம ஊருல இரண்டு தலைமுறையாகவே இயற்கை விவசாயம் மாறி செயற்கைகள் உள்ளே நுழைய ஆரம்பிச்சாச்சு .இதனால் உங்களை போல் பெருந்தனக்கார்ர்கள் கூட செயற்கையையே இயற்கையாக நினைக்க ஆரம்பிச்சுட்டீங்க .ஆனால் இப்போது ஒரு புதிய இளைஞர் படை கிளம்பியிருக்கிறது .நமது பாரம்பரியத்தை உணர்ந்து கொண்ட புது தலைமுறைகள் நாங்கள் .நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்த புது வகை இயறகை விவசாயத்தை விவசாயிகளிடையே பரப்பி வருகிறோம. ….”





” அது எப்படி தாயி …? “

” இதோ …இப்படி …” தனது போனை காண்பித்தவள் ” வாட்ஸ் அப் , பேஸ் புக் மூலமாக ” என்றாள் .

” அதென்னது தாயி …. என்னவோ சொல்லுற ….? “

” அதுங்கய்யா ….உலகம் முழுவதும் ஒரு நிமிடத்தில் லட்சக்கணக்கான தகவல்களை பரப்பும் ஊடகங்கள்…”

” ம்ஹூம் புரியலை தாயி …”

” ஐயா இந்த பேஸ்புக் ,வாட்ஸ் அப்ல இருக்கிற சில விவரம் தெரிஞ்சவங்க தாங்கள் அறிந்து கொண்ட விபரங்களை இதில் பதிந்தால் அதனை உலகம் முழுவதும் இருக்கிற எத்தனையோ லட்சக்கணக்கான பேர் படிப்பாங்க , உணர்வாங்க , உதவுவாங்க …”

” ஓ…அந்தக் காலத்து எழுச்சி படை மாதிரி ….”

” அது போல்தான் .ஆனால் அந்த படைகளை விட பல மடங்கு வலிமை வாய்ந்த இளமை கூட்டணி இந்த படை .இந்த பேஸ்புக்கில்தான்  நிறைய விவசாய விபரங்களை ஒருவர்ப திவு பண்ணுகிறார் .நாங்கள் காலேஜில் படிக்கும் போதிலிருந்தே நான் , இன்னும் எனது தோழர்கள் நாற்பது பேர் வரை  அவரை பாலோ பண்ணுகிறோம் …அவர் சொல்லும் விபரங்கள்தான் இவையெல்லாம் …”

” பாலோன்னா ….”

” பின் தொடர்கிறோம்னு அர்த்தம் .நிறைய இயற்கை உரங்கள் , இயற்கை விவசாயங்கள் பற்றியெல.லாம் அவர் அவரது பக்கத்தில் பதிகிறார் .நாங்கள் எங்களால் முடிந்த அளவு அவரது விபரங்களை அவரவர் கிராமத்து விவசீயிகளிடம் கொண்டு செல்கிறோம் ….”

” அடேங்கப்பா …எவ்வளவு விபரமாக வேலைகள் செய்கிறீர்கள் …? ” பொன்னுரங்கம் உண.மையிலேயே பிரமித்தார்.இந்த காலத்து சின்ன பசங்களை சின்னபயலுகன்னு லேசா சொல்ல முடியாது போலயே ஆச்சரியப்பட்டார் .

” அவருக்கு …அதுதான்மா உங்க தலைவருக்கு எப்படி இந்த விவரமெல்லாம் தெரியும. …? “

” அவர் எங்கள் தலைவரெல்லாம் இல்லீங்கய்யா .எங்களை போல் அவரும் ஒரு ஆள் .அவ்வளவுதான் .அவரும் ஒருவிவசாயிதான்  .இந்த விபரங்களெல்லாம் அவர் அனுபவத்தில் செய்து பார்த்து தெரிந்த்துதானாம். “

” சரி …சரி …இந்த விளைச்சல் வேலைகளையெல்லாம் இப்போ நான் மேற்பார்வை பார்ப்பதோடு சரி .உள்ளே இறங்கி வேலை பார்க்கிறது என் மூத்த பையனும் , இளைய மகனும்தான் .நீ அவர்களிடமே உன் விபரங்களை சொல்லேன் ….”

” சரிங்கய்யா அவுங்க இருக்கிற நேரம் சொல்லுங்க .நான் அப்போ வர்றேன் ….”

அப்படி ஒவ்வொரு முறை வரும்போதும் பொன்னுரங்கத்தின் மனதில் அடுத்தடுத்த தட்டுக்களுக்கு தாவி ஏறி முன்னேறியபடி இருந்தாள் பூந்தளிர் .தன் உறவினள் போன்றே ஒரு பாசம் அவளிடத்நில் அவருக்கு உண்டானது .இந்தப் பெண் மட்டும் தனது வீட்டில் தனது மகளாக பிறந்திருக்க கூடாதா எனவும மருமகளாகவேனும் வந்திருக்க கூடாதா எனவுமான அவரது ஆசைகள் அவரது இஷ்ட தெய்வமான மாரியம்மன் காதில் விழுந்திருக்க வேண்டும் .அதனால்தான் அந்த அம்மன் அதற்கான வழிமுறைகளை அவரிடம் காட்டியிருக்க வேண்டும் .மாரியம்மனின் துணையில்லாமல் இந்த திருமண ஏற்பாடு நடந்திருக்க வாய்ப்பேயில்லையென பொன்னுரங்கம் இப்போதும் நம்பினார் .அதனையே தனது வருங்கால மருமகளிடமும் கூறினார் .

” நீ மகாலட்சுமி தாயி .நீ காலெடுத்து வச்சு நுழைய என் வீடு புண்ணியம் பண்ணியிருக்கனும் தாயி ….”

” அந்த புண்ணியம் நீங்க கும்பாபிசேகம் செய்ய போகிற    நம்ம
மாரியம்மன் கோவிலாலையும் கிடைக்குமில்லைங்கய்யா …? ”
” பூவு பேசாமலிரு ….” பலவேசம் மகளை  அதட்ட , அவரை கையுயர்த்தி தடுத்தார் பொன்னுரங்கம் .

” கும்பாபிசேகம் என் குடும்ப நல்லதுக்காக மட்டுமில்லை தாயி .இந்த ஊர் நல்லதுக்காவுந்தான் ….”

” ஓ…அப்போ அந்த நாற்பது கால் மண்டபம் .ஆதுவும் ஊருக்காகத்தானுங்களா ஐயா ….? “

” பூவு ….சாப்பிட வா புள்ள ….” குணவதி அதட்டினாள் .

” இருங்கம்மா …என் மருமகள் .என்கிட்ட பேசுறா …நீங்க எல்லோரும் ஏன் தடுத்துட்டே இருக்கீங்க .நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிடுறோம் .நீங்க எல்லோரும் போயி உங்க சோளியை பாருங்க ….” பண்ணையாரின் உத்தரவை மீற முடியாமல் பலவேசமும் , குணவதியும் , கார்மேகமும் உள்ளே போனார்கள் .

உள்ளறைக்குள் சுவரோடு ஒட்டி நின்று காதை சுவரில் பதித்து ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த புனிதா , திடுமென உள்ளே நுழைந்து விட்ட கணவனை கண்டதும் திகைத்து பிறகு இதிலென்ன இருக்கிறது …என்பது போன்றதோர் அலட்சிய பார்வையை விட்டெறிந்து விட்டு தன் வேலையை செவ்வனே தொடர்ந்தாள் .நோகாமல் தலையிலடித்துக் கொண்ட கார்மேகம் அடுப்படிக்குள் போய்விட்டான .

” அந்த நாற்பது கால் மண்டபம் என் அப்பாவின் ஆசை தாயி .ஏதேதோ காரணங்களால் அவரால் அதனை முடிக்க முடியவில்லை .என் காலத்தில் அதை செய்து முடிக்கனும்னுங்கிறது என்னோட ஆசை …”

” ம் …அதற்காகத்தானே இந்த ஏற்பாடுங்களெல்லாம் ஐயா …” தன்னை தானே சுட்டிக் காட்டிக் கொண்டாள் பூந்தளிர் .

பொன்னுரங்கம் புன்னகை பூத்தார் .இந்த திருமணத்தில் பூந்தளிருக்கு அந்த அளவு ஈடுபாடில்லை என்பதை அவர் அறிவார் .ஆனாலும் ஊரை காட்டி , அவளது இனத்தின் நன்மையை காட்டி இந்த திருமணத்தழையை போட்டு வைத்திருந்தார் .

” அதற்காக மட்டும்தானா …? நீயே யோசித்து சொல்லு தாயி .வேண்டவே வேண்டாம்னு இப்போ ஒரு சொல் சொல்லு .நான் எல்லா ஏற்பாட்டையும் நிறுத்திப்புடுறேன் ….”

பூந்தளிரால் அப்படி செல்ல முடியவில்லை .அவளால் அப்படி சொல்ல முடியாதென்பதும் பொன்னுரங்கத்திற்கும் தெரியும் .

” நீங்கள் தந்திரக்கார்ரு ஐயா ….” குற்றம் போல் சொன்னாள் .

” ஹா …ஹா …நம்ம மாரியம்மன் கோபுரத்தை இன்னைக்கு மேலேறி பார்த்துட்டு வாயேன் தாயி ….” பொறி வைத்தார் .பூந்தளிரின் உடல் சிலிர்த்தது .அவளது இனத்துக்கார்ரகளுக்கு மறுக்கப்பட்டு வந்த நிகழ்வு அது .பெரிய போராட்டத்திற்கு பிறகு கோவிலுக்குள் போய் கும்பிட உரிமை  வாங்கிய அவள் இனத்தாரால் இன்று வரை அந்த கோவில் கோபுரத்தின் மேல் வரை ஏறிப்பார்க்க உரிமை பெற முடியவில்லை .அது …இப்போது …அவளுக்கு …

” நானா …? ” நம்பாத திகைப்பு அவளுக்கு .

” அந்த நல்லகாரியம் முதலில் உன் மூலமாக ஆரம்பமாகட்டும் தாயி .நான்  கோவிலுக்கு தகவல்  சொல்லிவிடுகிறேன் .உங்கள் பக்கத்திலிருந்து நீ முதலில் நம் அம்மனின் கோபுரத்தை மேலேறி பார்த்துவிட்டு வா .பிறகு எல்லாம் படிப்படியாக நல்லவைகளாக நடக்கும் ….” பொன்னுரங்கம் போய்விட்டார் .அவர் தூவி விட்டு போன தூண்டில்கள் மட்டும் அங்குமிங்கும் அலைந்து , இறுதியில் பூந்தளிரின் மனதை கொக்கி போட்டு இழுத்தது .

பலவேசமும் , குணவதியும் , கார்மேகமும் திறந்த வாயை மூடக்கூட தோன்றாது உள்ளிருந்து வந்தனர் .” டீ பூவு நிசம்மாவே கோபுரம் ஏறப் போறியா …? ” கார்மேகம் திறந்த வாயுடனேயே கேட்டான் .

,” பூவு …உடனே கிளம்பு புள்ள .இது போல் ஒரு வாய்ப்புக்காக நம்ம சாதி , சனம் எம்புட்டு வருசமா காத்துக்கிட்டிருந்திருக்கோம் .இப்போ என் தலைமுறைல அதுவும் என் மக மூலமாக அது நடக்குதுன்னா …நான் ரொம்பவே …ரொம்பவே …” மேலே பேச முடியாமல் பலவேசத்தின் குரல் நடுங்க , குணவதி அழுதே விட்டாள் .

கார்மேகத்தின் வாய் மேலும் பிளந்த்து .” அட எதுக்கு எல்லாரும் இம்புட்டு ஆச்சரியபடுறீக …நம்ம வூட்டு புள்ளைக்கு வாய்க்காத வாயப்பு கிடைச்சிருக்கு .உடனே எல்லாருமா பயன்படுத்திக்கிடுவீகளா …அத வுட்டுட்டு …என்னத்தையோ பேசிக்கிட்டு .ம் …ம் கிளம்புங்க ….” புனிதா அதற்குள் ஒரு பட்டுசேலையை சுற்றியிருந்தாள் .தலை நிறைய கனகாம்பரத்தை சூடியிருந்தாள் .

” எங்கே கிளம்புற …? ” பலவேசம் புருவம் நெரித்தார் .

” நம்ம குடும்பத்திற்கு கோவில் கோபுரமேற பண்ணையாரய்யா உரிமை கொடுத்திருக்காரே மாமா …வாங்க போகலாம் …”

” நம்ம குடும்பத்திற்கில்லை .என் மகளுக்கு .அம்மாடி நீ போயிட்டு வாடா ….” பலவேசத்திற்கு இன்னமும் பிரமிப்பு மாறாமல் பூந்தளிர் தலையசைக்க , புனிதா முகம் சுருங்கினாள் .நான்தானே முதன் முதலில் கோபுரம் ஏறினேன் என ஊர் முழுதும் அவள் அடிக்க நினைத்த தம்பட்டம் சத்தம் மழுங்க , புருசனை காரணமில்லாமல் முறைத்தபடி உள்ளே போனாள்.

ஏதோ கனவில் மிதப்பவள் போன்ற சொக்குதலுடனேயே பூந்தளிர்    தனது சைக்கிளில் மிதித்து கோவிலை அடைந்தாள் .இன்னமும் கொஞ்ச தூரம்தான் .பிறகு வானத்தை தொட்டு விடுவேனாக்கும் …என்பது போல் உயர்ந்து நின்ற கோபுரத்தை கீழிருந்து அண்ணாந்து பார்த்து பிரமித்தாள் .இதன் உயரத்தை நான் எட்ட போகிறேனா …? கோபுரத்தின் பக்கவாட்டு படிக்கட்டுகளில் முதல் படியில் காலை வைத்தாள் .எப்பேர்பட்ட வாய்பிது ..?    சட்டென அவள் உடல் சிலிர்த்து ஒரு நடுக்கம் ஊடுறுவியது .

————————

டேய் குரு ….இங்கே என்ன பண்ற …? ” முருகேசன் மூட்டைகளை புரட்டி போட்டுக் கொண்டிருந்த குருபரனிடம் விசாரித்தான் .

” மூட்டைகளை எண்ணி ஏத்துறேன் …” பதில் சொல்லியபடி தம் பிடித்து அந்த உமி மூட்டையை ஒரு எக்கில் தன் தோளில் ஏற்றிய தம்பியை வியப்பாக பார்த்தான் .

” ஐயா …உனக்கு ஒரு சோளி சொன்னாங்கலே ….” தம்பியின் உருண்டு திரண்ட புஜங்களை பார்த்தபடி சொன்னான் .

” என்னவாம்…? “

” நம்ம கோவில் வேலை நடக்குதுல்ல …அங்க கோபுரத்துக்கு பெயினட் அடிச்சிட்டிருக்கிற பெயின்டர்கிட்ட இந்த கலர் காம்பினேசனை காட்டிட்டு வந்துடுவியாம் .ஐயா அவர்கிட்ட  போனில் பேசிட்டாகளாம் . பெயின்டரால கீழே இறங்கி வர முடியலை . ஐயாவால மூட்டு வலில மேலே ஏற முடியலை .உன்னை கொண்டு போயி இதக் கொடுத்துட்டு வரச் சொன்னாக ….” முருகேசன் ஒரு சாம்பிள் பெயின்டுகள் இருக்கும் அட்டையை நீட்டினான் .

குருபரன் அதை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு கிளம்பினான் .




What’s your Reaction?
+1
23
+1
21
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!