Cinema Entertainment

உங்க ஃபேவரைட் ஹீரோ, ஹீரோயின் சைடு பிசினஸ்

உங்க ஃபேவரைட் ஹீரோஹீரோயின்கள் வேற என்ன சைடு பிசினஸ் பண்றாங்கனு தெரிஞ்சிக்கணுமாஇத படிங்க...

பிரபலமாக, நாம் ரசித்துப் பார்க்கும் பல முன்னணி ஹீரோக்களும் ஹீரோயின்களும் என்ன செய்வார்கள். காலையில் எழுந்து ஷூட்டிங் போவார்கள் வீட்டுக்கு வருவார்கள். வார இறுதி நாட்களில் வீக் எண்ட் பார்ட்டி. வெளிநாடு சென்று விடுமுறையைக் கழிப்பார்கள். ஜாலியாக இருப்பார்கள் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எல்லோரும் எப்போதும் புகழின் உச்சியிலேயே இருக்க முடியாது அல்லவா. அதேபோல் படங்கள் ஏதும் இல்லாத போது அவர்கள் என்ன செய்வார்கள் என்று நாம் யோசிப்பதே இல்லை. நம்முடைய பல ஃபேவரட் நடிகர், நடிகையரும் சினிமாவைத் தாண்டி, சில சைடு பிசினஸ்களையும் செய்து வருகிறார்கள். அதுபற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.




 

 

நடிகை சிம்ரன்

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை சிம்ரன். விஜய் தவிர வேறு யாரும் இவருக்கு நிகராக நின்று டான்ஸ் ஆட முடியாது என்று கூட சொல்வார்கள். அதன்பின் சில படங்களில் கேரக்டர் ரோல் நடித்த அவர், GOD-KA (கடவுளுடைய) என்னும் பெயரில் சென்னை ஈசிஆரில் ஒரு ஃபைன் டைன் ரெஸ்ட்டரண்ட்  நடத்தி வருகிறார். அதோடு மட்டுமல்ல, அதே கட்டிடத்தில் ஒரு பொட்டிக் (Boquite) ஒன்றும் நடத்தி வருகிறார்.

நடிகர் விஜய்

படத்துக்கு பல கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும், தொடர்ந்து முன்னணி நடிகர் பட்டியலில் இருந்தாலும், தனக்கென தனியே ஒரு சூப்பர் பிசினஸ் வைத்திருக்கிறார் இளைய தளபதி விஜய். தன்னுடைய அம்மா, மனைவி, மகன் சஞ்சய்  ஆகியோருடைய பெயர்களில் சில திருமண மண்டபங்களைக் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். போரூரில் இருக்கும் சங்கீதா திருமண மண்டபம், வடபழனி சாலிகிராமத்தில் இருக்கிற ஷோபா திருமண மண்டபம் என இன்னும் திருமண மண்டபங்கள் செயல்பட்டு வருகின்றன.

நடிகர் ஆர்யா

பெண்களின் ஆசை நாயகன் என்றால் அரவிந்த்சாமி, மாதவன், அப்பாஸ்க்குப் பிறகு அந்த இடத்தைப் பிடித்தது ஆர்யா என்று சொன்னால் அது மிகையாகாது. இவருக்கு சைக்கிளிங்கில் ஆர்வம் அதிகம். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் பிசினஸ் கூட செய்து வருகிறார். சேவரி ஷீ ஷெல் (savoury sea-shell) என்னும் அரேபியன் ஸ்டைல் ரெஸ்ட்டரண்ட் நடத்தி வருகிறார். இங்கே வெறும் அரேபிய உணவுகளைத் தவிர காண்டினெண்டல், தந்தூரி, சைனீஸ் உணவுகளும் கிடைக்கும். சென்னை மற்றும் பெங்களூரில் பல இடங்களில் இந்த செயின் ஆஃப் ரெஸ்டாரண்டுகள் இயங்கி வருகின்றன.

 




காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நம்ம காஜல் அகர்வால். என்ன இவரும் தனியா பிசினஸ் பண்றாருன்னு வாயை பிளக்காதீங்க. ஆமாம். மர்சாலா (MARSALA) என்னும் பெயரில் ஒரு ஜூவல்லரி பிராண்டு நிறுவனத்தை தன்னுடைய சகோதரி மற்றும் தன் நெருங்கிய தோழி ஒருவருடன் இணைந்து நிர்வகித்து வருகிறார்.

நாகர்ஜுனா

 நாகர்ஜுனா – அமலா தம்பதி பற்றி நம் எல்லோருக்குமே தெரிந்தது தான். இவர் ஹைதராபாத்தில் உள்ள N Grill (N கிரில்)என்னும் பெரிய ரெஸ்டாரண்ட் இருக்கிறது. அந்த ரெஸ்ட்டரண்ட்டின் நிறுவனர், பாட்னர் எல்லாமே இவர் தான். அதோடு மட்டுமின்றி, ஆந்திராவிலேயே மிகப்பெரிய ஸ்டுடியோவாகக் கருதப்படுகிற அன்னபூரணா ஸ்டுடியோஸ் இவருடையது தான். N convention centre என்னும் பெயரில் ஒரு திருமண மண்டபமும் நடத்தி வருகிறார்.

நிக்கி கல்ராணி

டார்லிங், மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்களில் நடித்த நிக்கி கல்ராணிக்கு பிசினஸ் என்றால் படு ஆர்வம். ஸ்மாலிஷ் ரெஸ்ட்ரே கஃபே (smally’s – resto cafe) என்ற பெயரில் பெங்களூரில் இயங்கி வரும் குரூப் ஆஃப் ரெஸ்ட்ரண்ட்டை தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார் நிக்கி.

பிரகாஷ் ராஜ்

என்ன செல்லம்! நம்ம பிரகாஷ் ராஜ் அவர்களும் தனக்கென சினிமாவைத் தவிர்த்து சில சுய தொழிலை வைத்திருக்கிறார். ஹைதராபாத்தில் செயற்கை உரங்கள் எதுவும் பயன்படுத்தாமல், தனக்கென ஒரு ஆர்கானிக் பார்மிங் வாங்கி, இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அதோடு தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகிலும் பல ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம்,பண்ணை முறை விவசாயம் செய்து வருகிறார்.

சூர்யா

நடிகர் சிவக்குமாரின் மகன், ஜோதிகாவின் கணவர், நடிகர் கார்த்திக்கின் அண்ணன் என எல்லாவற்றையும் தாண்டி, தனக்கென தனித்ததொரு இடத்தை தமிழ் சினிமாவில் கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவரும் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கல்விக்காக அகரம் அறக்கட்டளை நடத்தி வருவது எல்லோருக்கும் தெரியும். அது ஒரு சேவை நிறுவனம் தான். அதையும் தாண்டி, 2 டி ஹீரோ டாக்கீஸ் (2D Hero talkies) என்ற பெயரில் ஒரு புரொடக்ஷன் கம்பெனி வைத்திருக்கிறார். அதோடு ஹீரோடாக்கீஸ்.காம்  என்னும் பெயரில் ஒரு சினிமா டிஸ்டிபியூசன் கம்பெனியும் நடத்திக் கொண்டிருக்கிறார். இது வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் ஆன்லைனில் லீகலாக படம் பார்த்துக் கொள்ளும் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. அதோடு திருநெல்வேலிக்கு அருகில் காற்றாலைகள், கார்மெண்ட் எக்ஸ்போர்ட்ஸ்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

டாப்ஸி

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர். அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே ஒரு மாடலாக இருந்திருக்கிறார். ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். ஒரு விளம்பர நிறுவனம் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

 


மோகன்லால்

 மோகன்லால் டேஸ்ட் பட்ஸ் என்ற பெயரில் ஊறுகாய், மசாலா நிறுவத்தை வைத்திருக்கிறார். தியேட்டர்களும் டிஸ்டியூசன் கம்பெனிகளும் இவருக்கு இருக்கின்றன.

ஜெயராம்

நடிகர் ஜெயராம் கேரளாவில் சில பல ரெஸ்டூரண்ட்ஸ் மற்றும் ரிசாட்ஸ் வைத்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சில சைடு பிசினஸ்கள் செய்து வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபம் ரஜினிகாந்துக்கு சொந்தமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதுதவிர ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆரில் நிறைய பண்ணை வீடுகள் மற்றும் பார்ம்களில் முதலீடு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!