Serial Stories

மாற்றங்கள் தந்தவள் நீதானே -6

அத்தியாயம்-6

முன்னிருக்கையில் அவனுக்கு அருகில் அமர்ந்து வரும்போது மனசுக்குள் துருதுரு என்றிருந்தது.

கார் முன்புறத்தில் டைம் பார்த்துவிட்டு

“மணி ஒன்றாகப் போகுதுங்க இவ்வளவு நேரம் என்னை காணுன்னு அத்தை தேடிட்டு இருந்தாலும் இருப்பாங்க…” என்றாள்.

“கால் பண்ணி சொல்லிடுங்க ரிசப்சனில்  கொஞ்சம் லேட்டாயிடுச்சுன்னு சொல்லுங்க”

“இல்லங்க அவங்க எனக்கு கால் பண்ணி இருப்பாங்க என் போன் சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு. உங்க போன் கொஞ்சம் தரீங்களா ஒரே ஒரு கால் பண்ணி சொல்லிடறேன்.”




அவனிடமிருந்து போனை வாங்கி அத்தையின் நம்பருக்கு கால் பண்ணினாள். வெகுநேரம் அடித்தது யாரும் எடுக்கவில்லை.

“என்னாச்சுங்க போன் போகலையா?”

“அத்த தூங்கிட்டாங்க போல போன் அட்டென்ட் பண்ணல, வீட்டு சாவி என்னிடம் இருக்கு. ஆனால்…சரி ஓகே அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம் நான் ஸ்டெயிட்டா வீட்டுக்கு போயிடுறேன்.”  என்றவளை யோசனையோடு பார்த்தான்.

என்ன என்பது போல இவள் திரும்பி அவன் முகத்தைப்பார்க்க,

“இல்ல இந்த ராத்திரி நேரத்துல ஒரு கல்யாணமாகாத பையன் கூட வர்றீங்களே பாக்குறவங்க எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்க? அதான் நினைத்துப் பார்த்தேன்.”

“அப்படி எல்லாம் யாரும் நினைக்க மாட்டாங்க…என்ன பத்தி எனக்கு தெரியும். எந்த சூழ்நிலையிலும் என்ன காப்பாத்திக்க எனக்கு தெரியும் நான் எதுக்கும் பயப்பட மாட்டேன்னு என ஃபேமிலியில இருக்கிற எல்லாருக்குமே தெரியும்.”

“அதுதான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி பார்த்தேனே”

என்று நக்கலாக அவன் சிரிக்க, முகவாட்டத்தோடு தலை குனிந்தாள் மோகனா. எப்படி பேசினாலும் மடக்கிடுறானே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

“சும்மா ஒரு கிண்டலுக்காக சொன்னேன் தப்பா எடுத்துக்காதீங்க ஓகே…போற வழியில் தான் என்னுடைய ரூம் இருக்கு ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ண முடியுமா? இந்த சூட்கேஸ்சை வெச்சுட்டு வந்துடறேன்.”

“ஓகே போயிட்டு வாங்க நான் வெயிட் பண்றேன்.”

“தனியாக உட்கார பயமா இருந்தா எங்கூட என் ரூமுக்கு வாங்க சூட்கேசை வச்சிட்டு வந்துடலாம்.”

“வேணாங்க…வேணாங்க…நான் கார்ல வெயிட் பண்றேன் நீங்க போயிட்டு வாங்க”

“ஏன்…என்னுடைய ரூமுக்கு வர்றதுக்கு உங்களுக்கு பயமா இருக்கா?”

“அப்படில்லாம் ஒன்னுமில்லை. உங்க கூட நீங்க எங்கக்கூப்பிட்டாலும் வருவேன். உங்க மேல எனக்கு அவ்ளோ நம்பிக்கை வந்திடுச்சு.”

“ஓ….ஓ….”

என்று வியந்தவன் ஓகே ஜஸ்ட் 5 மினிட்ஸ் வந்துடுறேன்” என்று காரிலிருந்த சூட்கேசை எடுத்துக்கொண்டு இவளிடம் கார் சாவியை கொடுத்து விட்டு சென்றான்.

ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை மூன்று நிமிடத்திலே திரும்பி வந்து விட்டான்.

“உங்களை தனியா விட்டுட்டு போக கொஞ்சம் பதட்டமாக இருந்துச்சு அதான் டக்குன்னு உடனே வந்து விட்டேன் போகலாமா?”

“ம்ம்…”




கல்லூரியிலும் சரி ஆபீஸிலும் சரி பிசினஸ் விஷயமாக எத்தனையோ பேர்களை சந்தித்திருக்கிறேன் ஆனால் இப்படி ஒரு ஜெனியுவன் ஃபர்சனை இவள் இதற்குமுன் சந்தித்ததே இல்லை. இப்படி எல்லாம் நல்லவங்க இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்துன்னு சொல்லறாங்களோ! அம்மா அடிக்கடி சொல்லுவாங்க நல்லவங்க நாட்டில்  இருக்கறதாலதான் மழை பெய்துன்னு  நல்லவங்க நாட்டுல கண்டிப்பாக இருக்கிறார்கள்.

அத்தை வீட்டருகே இவள் இறங்கிக் கொண்டு அவனுக்கு நன்றியைத் தெரிவித்தாள். “ஓகே நோ ப்ராப்ளம் திரும்பவும் சென்னையில் பார்க்கலாம்” என்றவன் கையசைத்து விடை பெற்றான். அவள் வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே போகும் வரை வெயிட் பண்ணி அவள் போனதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு காரை ஸ்டார்ட் பண்ணினான் தேவானந்தன்.

பால்கனியிலிருந்து அவன் கிளம்புவதை பார்த்த மோகனா மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள். இவன் மட்டும் என் வாழ்க்கையில் என்கூடவே இருந்தால் எதை வேணுன்னாலும் சாதிப்பேன்.

தேவானந்த்தனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையான்னு கூட தெரியலையே? சின்ன வயசு தான் கல்யாணம் ஆகி இருக்காதுன்னு நினைக்கிறேன். என்று நினைத்தமாத்திரம் மோகனாவுக்கு தன் மேலேயே கோபம் வந்தது. அவனுக்கு கல்யாணம் ஆனா எனக்கென்ன ஆகாவிட்டால் எனக்கென்ன அதைப் பத்தி நான் ஏன் கவலைப் படனும்? எனக்கு ஏதோ ஆயிடுச்சு பைத்தியம் பிடிக்காத குறைதான் ஒரே நாள்ல இப்படி மாறிட்டேனே?  என நினைத்து தன்னையே கடிந்துக்கொண்டாள். இதெல்லாம் எதுல கொண்டுட்டுப்போய்  விடுமுன்னு தெரியல.

அடுத்த நாள் அப்பா அம்மா வந்தவுடன் இந்த விஷயத்தைப் பற்றி மேலோட்டமாகத்தான் சொன்னாள். உடனே அப்பா தேவானந்தனை  பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறிவிட்டு கால் பண்ணி பேசினார்.

“சார் நான் மதுரையில்தான் இன்னும் இருக்கிறேன். கொஞ்சம் வேலை இருக்கு இன்னிக்கு ஈவினிங் கிளம்புறேன்.” என்றான் அவன்.

“நான் உங்களை உடனே மீட் பண்ணனும் நீங்க இந்த சைடு வரிங்களா? இல்ல நான் உங்க இடத்துக்கு வரட்டுமா?”

“ஓகே சார் நீங்க மேரேஜ் முடிச்சுட்டு சொல்லுங்க ஏதாவது ஒரு ஹோட்டல்ல நாம மீட் பண்ணலாம்.” என்கிறான் தேவானந்தன்.

அப்படி மீட் பண்ணினப்போது தான் மிகவும் நெருக்கமாக பேசத் தொடங்கிவிட்டார்கள் மோகனா குடும்பத்தினர். தேவானந்தனிடம் வெளிப்படையாக கேட்டார் அப்பா

“என்கிட்டே கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும் நல்ல பையனா கிடைக்கலன்னு தேடிட்டு இருந்தேன். என் பொண்ணை காப்பாத்தி இருக்கீங்க உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா உங்க ஃபேரன்ஸோட நம்பர் குடுங்க உங்க கல்யாணத்த பத்தி நான் பேசுறேன்.” என்று அதிரடியாக கோதண்டம் இப்படி கேட்கவும் அவன் சற்று தடுமாறிப்போனது போல் தெரிந்தது.

“சார்..அப்பா அம்மா என்ன ஐடியாவுல இருப்பாங்கன்னு தெரியல…எனக்கு ஒரு ஒன் வீக் டைம் கொடுங்க  நான் அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்.” அவனிடம் எந்த பதட்டமுமில்லை நிதானமாகத்தான் பேசினான். ஆனால் அவன் பார்வைமட்டும் அடிக்கடி மோகனாவின் மேல் படிந்து மீண்டது.

“அப்பா..அவருக்கு என்னை பிடிச்சிருக்கா?இல்லையான்னே தெரியலை அதுக்குள்ளே கல்யாணத்தையே முடிவு பண்ணிட்டீங்களே அப்பா.”

.”அதானே…?”என்று அம்மாவும் அவனை யோசனையோடு பார்க்க,

“இதை முதலில் நீங்க மிஸ்.மோகனா கிட்ட கேட்டிருக்கனும்சார். ஏன்னா எனக்கு பிடிக்கலன்னா இந்நேரத்திற்கு நான் எழுந்து போயிருப்பேனே தவிர இப்படி எதிர் கேள்வி கேட்டுகிட்டு இருக்க மாட்டேன். நீங்க முதல்ல அவங்க மனசுல என்ன இருக்குன்னு தெளிவு படுத்திக்குங்க…?”

இவன் வாயிலிருந்து வரவழைக்கனுன்னு பார்த்தா நம்மளையே மடக்குறானே?




“எதுக்கு இந்த பிரச்சனை? நாளைக்கு பின்னால உங்களை கேட்காம நானே முடிவெடுத்துட்டேன்னு என்னைப்பார்த்து நீங்க கேட்க கூடாதுல்லையா? உங்களுக்கு பிடித்திருந்தா இந்த கல்யாணத்தை நடத்துவோம்.” என்றார் அப்பா. இப்படி ஆரம்பித்த பேச்சுதான் ஒரு மாதத்தில் திருமணத்தில் வந்து நின்றது.

What’s your Reaction?
+1
15
+1
18
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!