Serial Stories

மாற்றங்கள் தந்தவள் நீதானே -10

அத்தியாயம்-10

அந்த அரண்மனை வீட்டில் நுழைந்தவுடன் பெரிய ஹால் போன்ற அமைப்பில் கூடம் இருந்தது. அதில் ஆங்காங்கே வேலைப்பாடுகளுடன் கூடிய உயர்ந்த மரத்தூண்கள் நடுவில் பர்மா தேக்கில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட இருக்கைகளும், வீட்டிற்கு பின் புறத்தில் துளசி மாடம் அமைக்கப்பட்டதாக இருந்தது.

“மோகனா ரொம்ப பிரம்மாண்டமாக இருக்கு” என்று அதிசயத்தான்.




“ஆமாங்க…இந்த முற்றத்தில் ஒரு புறம் அலங்கார வளைவுகளுக்கு பின்னால் அமைக்கப்பட்டிருக்கும் பூஜா மண்டபத்தில்  சிலைகள் வைக்கப்படும். இதற்கு அடுத்தது இருப்பது பெண்களின் கூடாரம், அதாவது மாடியின் முகப்பிலிருந்து பெண்கள் வேடிக்கை  பார்க்குமிடம். படுக்கையறைகள் முற்றத்தின் எதிர் பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும், ஜெநானா அல்லது அந்தப்புரம் மக்கள் புழங்குமிடத்திலிருந்து சற்று தொலைவில் அமைக்கப்படும். வாழுமிடம் அல்லது புழங்குமிடம், விருந்தினர்களை உபசரிக்கவும், அதிகாரிகள் கூட்டங்கள் போடவும் உபயோகிக்கப்பட்டன. பல்வேறு பிரிவுகளின் மாடிகள் அனைத்துமே வளைந்த தாழ்வாரங்களும், சுழலும் படிக்கட்டுகளோடும்  இணைக்கப்பட்டன.

உள்ளெ உள்ள மரப்பொருட்கள்  மிகவும் ஆடம்பரமாகவும், காணோபி  திரைசீலைகளுடன் நான்கு சுவர்களும் சித்திரங்களால் அலங்கரித்து, செதுக்கப்பட்ட சந்தன மர நாற்காலிகளும், மேஜைகளும் வைத்து, சுவர்கள் அழகான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருகிறது பாருங்கள். அதோ அதுதான் தோட்டம். தோட்டத்தில் அழகிய நீர்வீழ்ச்சியுடன், பறவைகளும் இருந்தது, இது மிகவும் பெரியதாகவும் கவனத்துடனும் பராமரிக்கப்பட்டது. பிரம்மாண்ட  யானைத் தும்பிக்கைகள் போன்ற தூண்கள் அழகா மேங்கோப்பில் அணிவகுக்கும் மரச்சட்டங்கள் இங்கே பச்சைக் கலரில் தெரியும் ஸ்கீர்ன் அமைப்பை மரவு தட்டி என்பார்கள். மரச்சட்டங்களால் அமைக்கப்பட்டு மரப் பலகைகளால் (அல்லது திரைத் துணிகளால் சில தட்டிகள் மூடப்பட்டிருக்கும்  ) மூடப்பட்டிருக்கும் இதை டெம்ப்ரரி தடுப்பாகவோ, ஸ்க்ரீனாகவோ பயன்படுத்துவார்கள்.

வீடு முழுதும் பல தூண்கள் உள்ளன. சில தூண்களில் வித்தியாசமான பொம்மைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் பிற நாட்டினர்களின் பொம்மை உருவங்கள். இவையும் செட்டியார்களின் கடல் கடந்த வாணிபச் சிறப்பின் சாட்சியங்கள். கேரளத் தொட்டிக்கட்டி வீடுகளைப் போன்று நடுவே பெரிய வானவெளி அமைப்பு உள்ளது. வீட்டுக்கான காற்றையும் வெளிச்சத்தையும் இந்த வானவெளி கொண்டு வருகிறது. முன்வாசலும் பின்வாசலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளும் இந்த வானவெளியில் வந்து சேர்வதாக இருக்கும். பின்வாசலில் இருந்து பார்த்தால் முன்வாசலில் யார் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும் வகையில். இரு வாசல்களும் நேர்க் கோட்டில் உள்ளன.

செட்டிநாட்டு வீடுகளின் மற்றொரு சிறப்பு ஆத்தங்குடி டைல்கள். இன்றைக்கு செட்டிநாடு வீடுகள் மட்டுமல்லாது எல்லாப் பகுதிகளில் இந்த டைல்களின் பயன்பாடு பரவலாகியுள்ளது. ஆனால் தொடக்கத்தில் செட்டிநாடு வீடுகளுக்காக இந்த டைல்கள் தயாரிக்கப்பட்டன. கண்ணாடிகளையும் இயற்கை வண்ணங்களையும் கொண்டு இந்த டைல் தயாரிக்கப்படுகிறது. இது மற்ற டைல்களைப் போலத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுபவை அல்ல. வீட்டுக்கே வந்து தளத்தில் உருவாக்கப்படுபவை. இந்த டைல்கள் அதிகமான பராமபரிப்புக் கோருபவை.

ஆனால் பார்ப்பதற்கு வசீகரமானவை. இந்த வகை டைல்கள்தாம் கானாடுகாத்தான் அரண்மனைத் தளத்தை அழகுபடுத்துகின்றன. இந்த வீட்டின் தனித்துவம் சமையலறை அல்லாது உணவுப் பொருள்களைச் சேமிக்கத் தனியறைகள் உள்ளன. அம்மி, ஆட்டு உரல் ஆகியவற்றுக்கும் தனியறை. கானாடுகாத்தன் அரண்மனை மட்டுமல்ல இதேபோன்ற வீடுகள் செட்டிநாடு என அழைக்கப்படும் அந்தப் பகுதி ஊர்கள் பலவற்றிலும் உள்ளன.




என்று பேசிக்கொண்டே போனவளை ஓகே ஓகே எனக்கு எல்லாம் புரியுது நாம ஒருவாட்டி போய் மொத்த அரண்மனையையும் சுத்திப் பார்த்துட்டு வந்துடலாம் என்றான்.

சரிங்க வாங்க எனக்கு எல்லாமே தெரியும் நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்

தேவானந்தனை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாக சென்று காட்டினாள். இறுதியாக மாடிப்படிகளில் ஏறும்போதும் அன்று நடந்த அந்த நிகழ்வு அவள் மனக் கண் முன்னால் தோன்றி மறைந்தது. கண்கள் நாலாபுறமும் யாரையோ தேடின. அவன் இங்குதான் எங்கேயோ இருக்கிறான். அப்படிதான் என் உள்ளுணர்வு சொல்கிறது. எங்கேயோ இருந்து என்னையே துரு திருவென்று பார்ப்பதுபோல தோன்றுகிறது. என்று எண்ணிய மறுநிமிடமே சுற்றிலும் கண்களை சுழல விட்டாள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெறிச்சோடித்தான் கிடந்தது.  எங்காவது இருப்பானா என்னை போல இந்த இடத்திற்கு அவனும் வந்திருப்பானோ? ஒரு முறை அவனைப் பார்க்கவேண்டும். ஒரே ஒரு முறை அவனைப்பார்த்து மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும். கடவுளே அது மட்டும் நடந்தால் என் மனசுல ஒரு நிம்மதி ஏற்பட்டு விடும்.

சதாகாலமும் அவனுக்கு துரோகம் பண்ணிட்டோமே என்று என் உள் மனது உறுத்திக்கொண்டே இருக்கிறது. அவனைப் பார்த்து ஒரு முறை பேசி விட்டாள் அந்த உறுத்தல் சரியாகிவிடும்.

மனம் தானே புலம்பிக் கொண்டிருக்க கண்கள் எதையோ தேடிக் கொண்டே இருந்தது படியில் ஏறி மேல்தளத்திலிருந்து அறைகளை சுற்றி பார்த்து விட்டு திரும்பவும் இறங்கும்போது அந்த படிக்கட்டு அருகில் வந்தவுடன் திடீரென்று விளக்குகள் எல்லாம் மறைந்தன. உடன் வந்த கணவனிடம் சொல்லலாம் என்று திரும்பினாள் மங்கலாக அருகில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாத அளவுக்கு ஒரு வெறுமை தோன்றியது.

“என்னங்க…எங்கே இருக்கிங்க?” அவன் அருகில்தான் இருந்தான்.

“இங்கதான் இருக்கேன் மோகனா…”

“வாங்க போகலாம்…கரண்ட் கட்டாயிடிச்சி போல”

“சரி போகலாம்” என்றவன் அவளின் இடையை பற்றி அணைத்தப்படி மேல்படிக்கட்டு அருகே வந்தான். நல்ல வேளை அவன் கையிலிருந்த செல்லின் வெளிச்சம் லேசாக இருளை விலக்கியிருந்தது. திடீரென்று அவனுடைய பிடி இறுகியது. மூச்சி திணறுவதுபோல் இருக்கவே,

“விடுங்க…மூச்சி விட முடியவில்லை” என்று தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள்.

அவனோ மெல்ல அவளை விடுவித்து அவளின் முகத்தை உயர்த்திப்பார்த்தான். அவளோ வெட்கத்தோடு தலைகவிழ்ந்து நின்றிருந்தாள். அவள் சற்றும் எதிர்ப்பார்க்காதா அடுத்த நிமிடம்  புடவையை பிடித்து சர சர வென்று இழுத்து உருவினான்.




“ஐயோ என்னங்க பண்றீங்க ஏன் இப்படி பண்றீங்க சொல்லுங்க ப்ளீஸ்…? விடுங்க… விடுங்க…”

இவளின் கூப்பாடு அவன் காதுகளில் ஏறியதாகவே தெரியவில்லை சரசரவென்று மொத்த புடவையும் உருவியவன் மோகனாவின் தோளைப்பற்றி முரட்டுத்தனமாக கீழே தள்ளினான். கைப்பிடி வழுக்க, பேலன்ஸ் இழந்தவள் படியில் தட்டுத்தடுமாறி உருண்டு கீழே வந்து விழுந்தாள். எல்லாமே ஒரு சில நொடிகளில் நடந்துமுடிந்தது. உருண்டதில்  ஓரிரு இடங்களில் அடிப்பட்டு இருக்க வேண்டும். காலை நீட்ட முடியாத அளவுக்கு முடங்கிக் கிடந்தாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது என்ன ஆச்சு ஏன் இப்படியெல்லாம் பண்றாரு?

உலகமே தலைகீழாக மாறி காலுக்கடியில் பூமி நழுவியது. கண்கள் இருண்டன பளிச்சென்று விளக்கொளி திரும்பவும் வந்தது. அரண்மனை முழுவதும் ஒளி பரவியது வேதனையோடு கணவன் நின்ற இடத்தை பார்த்தாள். அவன் உதட்டோரத்தில் ஒரு ஏளன சிரிப்புடன் மெல்ல கீழே இறங்கிவந்தான். உருவிய புடவையை சுருட்டி எடுத்துக் கொண்டு கீழே வந்தவன் இவள் அருகில் வந்தவுடன் மீண்டும் இவளைப் பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தப்படி கையில் வைத்திருந்த புடவையை அவள் முகத்தில் வீசி எறிந்தான்.

“ஏங்க இப்படி பண்றீங்க எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு கஷ்டமா இருக்குங்க… இப்படி எல்லாம் நீங்க நடந்துக்க மாட்டீங்களே ரொம்ப அசிங்கமா இருக்குங்க”

“அவமானம்…அசிங்கமா…அப்படின்னா என்னன்னு உனக்கு தெரியுமா? அதெல்லாம் நீ தெரிஞ்சுக்கணும் மத்தவங்கள அசிங்கப்படுத்தினால் நமக்கு இப்படி தான் வரும் என்று தெரிந்து புரிஞ்சுக்கணும். எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன் என் குடும்பம் எவ்வளவு சின்னாபின்னம் ஆயிடுச்சு தெரியுமா? எல்லாத்துக்குமே காரணம் நீதான் டீ..நீ உயிரோடவே இருக்க கூடாது. நீ ஒரு துரோகி ஒரு குடும்பத்தையே அழித்த பாதகி உன்னை நான் ஆசைப்பட்டு கட்டிக்கிட்டேன்னு நினைச்சியா? உன்னை பழி வாங்கத்தான் இந்த பிளான் பண்ணினேன்.”

“எ…என்ன சொல்றீங்க நான் உங்களுக்கு எதுவும் பண்ணலையே?”

“எதுவும் பண்ணலையா நல்லா யோசிச்சு பாரு பதினைந்து பதினாறு வருஷத்துக்கு முன்னாடி நான் உண்டு என் வேலை உண்டுன்னு எங்க அப்பா கூட இந்த அரண்மனையே எனக்கு சொந்தம் மாதிரி எத்தனை சந்தோஷத்தோட வாழ்ந்தேன் தெரியுமா? எவ்வளவு அழகா சந்தோஷமாய் இருந்த என் குடும்பம் உன்னுடைய ஒரே ஒரு குற்றசாட்டால, என் மேல நீ போட்டபழியால, எங்க குடும்பமே நாசமாயிற்று. நாங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டோம். எங்க அப்பா செத்து போயிட்டாரு எங்க அம்மா இருக்குறாங்களா? இல்லையான்னு தெரியலை. யாருமில்லாத அனாதையாக இருந்தேன்.. இந்த ஊரு என்னை ஒரு குற்றவாளியாத்தான் பார்த்துச்சு…சோத்துக்காக ஊர் ஊரா அலைஞ்சேன்.

எந்தப் பாவமும் பண்ணாத ஒருத்தனுக்கு எந்த குற்றமும் செய்யாத ஒருத்தனுக்கு தண்டனை வாங்கி கொடுத்திட்டே அது உன்னுடைய தப்பு தானே? அந்த தப்பை நீ உணர வேண்டும். தெரிஞ்சோ தெரியாமலோ இதுவரை என்னை யாரென்று உன்னால கண்டு பிடிக்க முடியல…அது என்னுடைய பாசிட்டிவ்வான விஷயம். ஒருவேளை சாப்பாட்டுக்காக நான் எத்தனை ஊர் அலைஞ்சேன் தெரியுமா? ஒரு வீட்டில் கூட எனக்கு இடம் குடுக்கல என்ன திருடனாவும் பொம்பள பொறுக்கியாவும்தான் நினைச்சாங்க, சொந்த பந்தங்கள் எல்லாம் அடித்து விரட்டினாங்க. அவமானம்… அவமானம்… அவமானம்… அசிங்கம் என் வாழ்க்கை நரகத்தில் தள்ளின மாதிரி ஆயிடுச்சு. எல்லாத்துக்குமே காரணம் நீ ஒருத்திதான் நீ நல்லாவே இருக்க கூடாது. நீ வாழ கூடாது உன் வாழ்க்கையை அழிக்கணுன்னு எனக்கு 15 வருஷத்துக்கு முன்னாடியே மனசுல ஊறிப்போன ஒரு விஷம்.




இனிமே என்ன பொருத்தவரைக்கும் உனக்கு மன்னிப்பே கிடையாது. அதுக்காக உனக்கு டைவர்ஸ் கொடுக்க மாட்டேன். என் கூடவே வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமா சித்ரவதைப்பண்ணி எனக்கா  உன்னை மன்னிச்சிட்டேன்னு எப்போ தோணுதோ அப்பதான் உனக்கு விடுதலை. இதபாரு உங்க அப்பா அம்மா யாரு கேட்டாலும் நீ உண்மையை சொல்லு… நான் அடிச்சி உன்னை கொடுமைபடுத்துறேன்னு சொல்லு. கல்யாணம் ஆகி மூணு மாசத்துல புருஷனையும் இழந்து பொண்ணு வந்துட்டான்னு உங்க வீட்டிலே நினைக்காட்டாலும் ஊர் உலகத்துல உனக்கு மரியாதை இல்லாம போகட்டும். இல்ல நான் அங்கெல்லாம் போகமாட்டேன் உங்கக்கூடதான் இறுப்பேன்னாலும் தாராளமா இரு நான் வேணான்னு சொல்லல ஆனா நான் உன்னை அந்த வீட்டில் கொடுமைப்படுத்தியப்படிதான் இருப்பேன்.  மத்தவங்களை நம்ப வைப்பதற்காக உன்கூட அன்பா இருக்கிற மாதிரி நடிப்பேன். நான் நடிப்பதை உன்னால யாருகிட்டயும் வெளிப்படையாக சொல்லி என்னுடைய அன்பை குற்றம் சாட்டவோ சந்தேகப்படவோ களங்கப்படுத்தவும் முடியாது. அதுதான் இந்த தேவேந்திரனோடஸ்டைலே…”

சொல்லிவிட்டு கட கட வென்று காரில் வந்து அமர்ந்துக்கொண்டான். மோகனாவின் கண்கள் இருண்டுக்கொண்டு வந்தது. யாருகிட்ட கடைசியா ஒரு முறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தாளோ? கடைசிவரை யாருக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று நினைத்தாளோ?அந்த இரண்டு பேரும் ஒரே நபராய் உருமாறி மொத்த தண்டனையும் தனக்கே கொடுத்துவிட்டார்களே?

தாரை தாரையாககண்களில் பெருகிய நீரைக்கட்டுப்படுத்த முடியாமல் விசும்பலுடனே தட்டு தடுமாறி மெல்ல எழுந்தவள் புடவையை சுற்றிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.

காவலாளிக்கு நிறைய காசுகொடுத்திருப்பான் போல அவனை ஆளையே காணும். அவன் இருந்திருந்தால் நான் தேடிக்கொண்டு வந்தேனே அவர்தான் இவர் இப்பவாவது பார்த்துக்கோ சொல்லிவிட்டுவிட்டாவது வரலாம். விரக்தியோடு ஒருமுறை அரண்மனையை திரும்பிப்பார்த்தவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைக்கூட துடைக்க தோன்றாமல் காருக்கருகே வந்தாள்.

இவள் அமருவதற்காக முன் கதவை திறந்தே வைத்திருந்தான். காரில் ஏறுவதற்கு முன் அவனை ஏறிட்டாள். அவனுடைய கண்கள் சிவந்து ரெத்த பாளங்களாய் மாறியிருந்தது.

“ஏறு…உன்னை இங்கேயே…விட்டுட்டு போற அளவுக்கு நான் ஒன்னும் ஐயோக்கியன் இல்லை”

என்று குரலில் அணலை கொட்டினான்.

அவள் காரில் ஏறி தலையை கவிழ்ந்தப்படி அமர்ந்திருந்தாள்.பாவம் அப்பா…மாப்பிள்ளை நல்லவர் என்று நம்பிக்கொண்டிருக்கிறார் இவனைப் பற்றி தெரிந்தால் ரொம்ப கஷ்டப்படுவார். என்று நினைத்தமாத்திரம் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன்,

“என்ன…மீண்டும் போலீசில் பிடித்து கொடுக்கும் எண்ணம்மா?

“இல்லை…அப்பா…அப்பா..”

அவனுக்கு புரிந்திருக்க வேண்டும்.

“ஓ…உன் அப்பா என்னைப்பற்றி விசாரித்ததை சொல்லுறியா? ஹா…ஹா..ஹக்க் என்று சிரித்தவன் அதுக்கெல்லாம் ஊரை செட் பண்ணி, ஆளை செட்பண்ணி, பணத்தை கொடுத்து மடக்கியாச்சி..”

என்று சொல்லுவிட்டு மீண்டும் சிரித்தான்.




What’s your Reaction?
+1
10
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
6
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!