Cinema Entertainment Serial Stories

பூக்க தவறிய பூக்கள்-சில்க் ஸ்மிதா 6 

சில்க்கின் மரணத்தில் உள்ள மர்ம கேள்விகள். இறந்து போன சில்க்கின் உடலை தூக்கில் இருந்து இறக்கி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது தாடிக்காரர் தான். இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவாக தெரிவிக்க விரும்புகிறேன், அந்த தாடிக்காரர் ஒரு மருத்துவர்  நாடி பிடித்துப் பார்க்கும் பொழுதே இறந்துவிட்டது தெரிந்திருந்த போதும் அவரது உடலை தூக்கில் இருந்து  இறக்கியது ஏன்? இறந்த சில்க் ஸ்மிதாவின் உடலை முதலில் பார்த்தது தாடிக்காரரின் பேத்தி ‘உத்ரா’ என்று சொல்லப்படுகிறது. ஆனால் வீட்டின் வேலைக்காரன் கூறுகையில் அன்றைய தினம் காலையிலேயே குழந்தை ஸ்கூலுக்கு சென்று விட்டதாக பதிவிடுகிறான். போலீஸ் தரப்பில் ஆல்கஹாலை உட்கொண்டதால் தான் சில்க் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆல்கஹால் சாப்பிடுவதால் தற்கொலை செய்து கொள்வார்களா??!!?போலீஸ்காரர்களின் இந்த ஸ்டேட்மெண்டை எப்படி எடுத்துக் கொள்வது??




மிக பிரபலமான ஒரு நடிகை இறந்திருக்கும் போது தடயவியல் வல்லுனர்களை கூட உடன் அழைத்து வராமல் போலீசார் மட்டும் வந்தது ஏன்?  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டால் அவர் சுருக்கிட்டு கொண்ட  சேலையில் தூக்கிட்டவரின் எச்சில் வழிந்து இருக்கும்.. அவரது படுக்கை விரிப்பு அவர் ஏறி நின்ற ஸ்டூல் இவற்றில் இறந்தவரின்  காலடி தடம் பதிந்து இருக்கும். இது பற்றி எல்லாம் போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்ன? இறந்தவரின் உடலை தூக்கில் இருந்து இறக்கியதனால் தடயங்களை கண்டறிவதில் குழப்பம் ஏற்பட்டு தாடிகாரர் கூறுவதை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் சில்க் ஸ்மிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவர் இறந்ததாக குறிப்பிடப்படும் நேரம், அவரது வயிற்றில் இருந்த உணவுகள், வீட்டில் இருந்தவர்களின் ஸ்டேட்மென்ட், இது அனைத்தையும் ஒத்துப் பார்க்கும்போது மிகப்பெரிய குழப்பமே மிஞ்சுகிறது. ஆனால் போலீஸ் தரப்பு இது தற்கொலை தான் என்று உறுதியாக கூறிவிட்டதால் பொதுமக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள் (ஏற்றுக் கொண்டார்களா?????!!) சில்க்குடன் அவ்வளவு நெருக்கமாக இருந்தும் அவருடைய உடலைக் கூட பெற்றுக்கொள்ள வராத அந்த தாடிக்காரர் யார்?




                    அந்த  அந்த தாடிக்காரர் ஒரு டாக்டர். அவருடைய பெயர் ‘ராதாகிருஷ்ணமூர்த்தி’ ஆந்திராவில் உள்ள காக்கிவாடாவில் மருத்துவக் கல்லூரியில் படித்தவர். இரண்டு ஆண்டுகள் மட்டுமே மருத்துவத் துறையில் பணியாற்றினார். தாடிக்காரரின் மனைவியும் டாக்டர் தான். இவர் சில்க் ஸ்மிதாவுடன் இணைந்த பிறகு தன்னுடைய மனைவிக்கு விசாகப்பட்டினத்தில் சொந்தமாக கிளினிக் கட்டிக் கொடுத்திருக்கிறார். மகனுக்கு 20 லட்ச ரூபாய் முதலீட்டில் டிராவல்ஸ் பிசினஸ் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.




இவரும் சொந்தமாக தொழில் பார்த்து தான் வந்திருக்கிறார். சிலுக்கை முதன் முதலாக அவருடைய வீட்டில் இருந்து அழைத்து வந்த அன்னபூரணியை கணிசமான பணமும் சொந்த வீடும் கொடுத்து சில்க் இடமிருந்து விளக்கியவர் இவர்தான். அது மட்டுமல்ல சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கு வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு தெலுங்கு டிவியில் நேரடி பேட்டியில் கலந்து கொண்ட அவர்,  அன்றும் இன்றும் என்றும் சில்க் ஸ்மிதாவின் கணவர் நான் தான் என்று குறிப்பிடுகிறார். அவருடைய இந்த வாசகங்களை நன்றாக கவனியுங்கள் நான் என் வரையில் இந்த தாடிக்காரர் யார் என்று ஒரு யூகத்திற்கு வருகிறேன். உங்களால் யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள். இல்லை என்றால் இந்த கட்டுரையை ஆரம்பத்திலிருந்து மீண்டும் வாசியுங்கள். ‘பை பை’..




What’s your Reaction?
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!