Beauty Tips அழகு குறிப்பு

ஆண்கள் மட்டும் படிங்க பிளீஸ்-7

அழகு குறிப்பு

ஆண்கள் மட்டும் படிங்க பிளீஸ்! -7 

மீசை தாடி வளர குறிப்புகள் 

 


ஆண்களுக்கு மீசை மற்றும் தாடி தனி அழகு தான். இளைஞர்கள் பலர் தங்களுக்கு எப்போது மீசை தாடி வளரும் என்று ஏங்குவதுண்டு. மீசை வந்துவிட்டாலே ஆண்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வரும் என்று கூட சிலர் சொல்வதுண்டு. ஆனால் சில ஆண்களுக்கு 20 வயதை கடந்தும் கூட மீசை வருவதில்லை. சிலருக்கு மீசை தாடி வந்தாலும் அது அடர்த்தியாக இருப்பதில்லை.

முன்பெல்லாம் மீசை, தாடி வேகமாக வளர அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும் என்று கூறுவதுண்டு. ஆனால் அடிக்கடி அப்படி செய்வதன் மூலம் உண்மையில் மீசை, தாடி வளருமா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூறவேண்டும். அடிக்கடி ஷேவிங் செய்வதன் மூலம் ஏற்கனவே இருக்கும் முடி சற்று தடிமனாக மாறுமே தவிர அடர்த்தியாக வராது. சரி எப்படி அடர்த்தியாக வளரச்செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.




  • நாம் குளிக்க செல்வதற்கு முன்பு சுத்தமான டூத் பிரஷ்ஷை பாலில் தொட்டு முகத்தில் எங்கெல்லாம் தாடி மீசை அடர்த்தியாக வளர வேண்டுமோ அங்கெல்லாம் மென்மையாக சிறிதுநேரம் தேய்த்து முகம் கழுவிவிட்டு பிறகு குளிக்கலாம். இப்படி வாரத்தில் மூன்று முறை செய்வது நல்லது.

  • இரவு தூங்குவதற்கு முன்பு வெறும் நீரில் முகத்தை நன்கு கழுவிட்டு, நீராவியில் முகத்தை காண்பித்து ஆவி பிடிக்க வேண்டும். பிறகு முகத்தை நன்கு துடைத்துவிட்டு, எந்த இடத்தில் மீசை மற்றும் தாடி அதிகமாக வளரவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அங்கு கருஞ்சீரக எண்ணெயை தடவி விட்டு, தூங்கி எழுந்து முகத்தை கழுவி விடலாம். வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இப்படி செய்யலாம்.

  • முகத்தை மட்டும் கழுவி விளக்கெண்ணை, கருஞ்சீரக எண்ணெயை தடவி வருவதன் மூலம் தாடி, மீசை நன்கு அடர்த்தியாக வர துவங்கும்.

 


What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!